In சினிமா விமர்சனம் சொந்தக் கதை

The Departed

அவன் கண்விடல், கதைக்கு பிறகு கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக வலைபதிவிற்காக எதையும் எழுதவில்லை, இடையில் முன்பொருமுறை வந்த விஷயத்தை மீள்பதிவு செய்ததை தவிர. அது செய்துமே ஒரு மாதம் ஆகிறது. இது கொஞ்சம் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் சில பல நாட்கள் தமிழ்மணம் பக்கம் கூட வராமல் இருந்திருக்கிறேன். தீபாவளிக்காக திருச்சி சென்று வந்தேன். மதுரை பதிவர் சந்திப்பிற்கு வருவதாக சந்திப்பின் முந்தைய நாள் தொலைபேசிய தருமியிடம் வாக்களித்தும் வரமுடியாமல் சேய்த இடியாப்பச் சிக்கல்கள்.

வாழ்க்கை ஓடிக்கொண்டேதான் இருக்கிறது, நிற்காமல். அதே போல் மாற்றங்களும் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. கண்ணதாசனின், "மாற்றம் என்பது மானிடத் தத்துவம் மாறும் உலகின் மகத்துவம் அறிவேன். கல்லாய் மரமாய் காடுமேடாய் மாறாதிருக்க நான் வனவிலங்கல்லன்" என்ற வரிகள் தான் நினைவிற்கு வருகின்றன.

பில்டப் போதும் என்று நினைக்கிறேன், அம்மாவிடம் நான் "கேன்பே" வை விட்டு வேறு கம்பெனியில் சேரும் எண்ணத்தில் இருக்கிறேன் என்று சொன்னபொழுது அம்மா என்னிடம் கேட்டதுதான் நினைவில் வருகிறது. "எப்பிடிடா இவ்ளோ பிடிச்ச கம்பெனியை விட்டு போக மனசுவருது. கஷ்டமாயிருக்காதா?" என்று, அம்மா ஆசிரியை, பெரும்பாலும் ஆசிரியர்கள் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் ஒரு பள்ளியில் இருந்து முடித்து விடுவார்கள். (அம்மா கொஞ்சம் வித்தியாசம் இரண்டு பள்ளிகள், அது கொஞ்சம் உள்ளூர் பாலிடிக்ஸ்.)

நான் சொன்னேன், "அந்தக் காதல் இல்லாமல் எந்தக் கம்பெனி சேர்ந்தாலும் வேலை செய்ய முடியாது என்னால்" என்று. என்னை நன்கறிந்த நண்பர்கள் பலரும் இதே கேள்வியைத்தான் கேட்டார்கள் நான் வேலை மாறி பெங்களூர் செல்கிறேன் என்று சொன்னதும். எக்ஸிட் கிளியரிங்கில் கேட்கப்பட்ட, திரும்பவும் கேன்பே வரவிரும்புவீர்களா, போகும் கம்பெனியில் நண்பர்களுடன் கேன்பே அனுபவங்களை பகிர்ந்து கொள்வீர்களா போன்ற கேள்விகளுக்கு முழுமனதுடனேயே ஆமாம் என்று எழுதினேன்.

பேப்பர் போட்டாச்சுன்னாலே அடுத்த விஷயம் பார்ட்டி தானே, அதுவும் தொடங்கியது. புனேவில் புகழ்பெற்ற ஐநாக்ஸ் தியேட்டர் காம்ப்ளக்ஸில் படம் பார்க்கவும் அப்படியே சிட்டியில் டின்னர் சாப்பிடவும் திட்டமிட்டோம். நல்ல நேரம் "த டிபார்டட்" படத்திற்கான டிக்கெட் நாங்கள் நினைத்த நேரத்திற்கே கிடைத்தது. அப்படியே பக்கத்தில் இருந்த "ஃப்லேக்"(Flag) ரெஸ்டாரென்டில் தண்ணி பார்ட்டி, சென்றிருந்தவர்களில் நான் மட்டும் தான் கெட்டபையன் அதாவது தண்ணி அடிக்காத பார்ட்டி. சிக்கன் கபாப்களும், தம்ஸ் அப், மேங்கோ ஜஸ் என்று அவர்களுக்கு பார்ட்னர்ஷிப் கொடுத்தேன். அந்தப் பக்கம் பூரா ஷிவாஸ் ரீகல், வழிந்தோடியது. ஷார்ட் ஸ்கர்ட் போட்ட அமேரிக்க பிகர்களை நோட்டம் விட்டபடி ஒரு வழியாக பில் செட்டில் செய்து தியேட்டரில் உட்கார்ந்தோம்.

கேங்ஸ் ஆப் நியூயார்க், தி ஏவியேட்டர் போன்ற படங்களின் இயக்குநர் என்பதாலும், ஜாக் நிக்கல்ஸன், லியனார்டோ டிகாப்ரியோ, மாட் டேமன், மார்க் வால்பர்க், போன்ற தகுதியான நடிகர்களாலும் நல்ல எதிர்பார்ப்புடன் போய் உட்கார்ந்தோம். படம் பூராவும் அமேரிக்கன் எஃப் வேர்ட் தான் ஆக்கிரமித்திருந்தது. எப்படி சென்னை ரவுடிகளைப்பற்றிய படம் எடுக்கும் பொழுதும் "கோத்தா"க்களும் "தே" வேர்டும் நெஸஸரியோ அப்படி. (ரவுடி என்ன ரவுடி "தே" வேர்ட் தவிர்த்த அனைத்து கெட்ட வார்த்தைகளும் அனாயாசமாய் கல்லு\ரிக் காலங்களில் நானே பேசியிருக்கிறேன். ஒரு சென்ட்டென்ஸ் முடியும் பொழுது ஒரு கெட்டவார்த்தை இருப்பதென்பது அப்பொழுதெல்லாம் வழக்கம். ஒரு முறை சென்னையில் தங்கியிருந்த பொழுது சிஃபியில் ப்ரௌசிங் செய்ய போயிருந்தேன். "எஃப்" வேர்ட் ரொம்ப சகஜமாக சர்வசாதாரணமாக சென்டரெங்கும் நிரம்பிவழிந்தது. அது விளையாடும் இடம் என்று நினைவு.)


"அ ப்யூ குட் மேன்" படத்தில் பார்த்த ஜாக் நிக்கல்ஸனா அது. கொஞ்சம் தளர்ந்தது போல் இருக்கிறார். ஆனால் நடிப்பில் இன்னும் அடிச்சி ஆடுறார். மார்க் வால்பெர்க், ஆரம்பத்தில் புதிதாக ஸ்டேட் போலீஸில் சேரும், மாட் டேமனையும், டிகாப்ரியோவையும் இன்டர்வியூ செய்யும் பொழுது அவர் அசால்டாக படம் காண்பிக்கிறார். அவருடைய எக்ஸ்பீரியன்ஸ் தெரிகிறது. "த பிக் ஹிட்" படம் பார்த்துதான் நினைவில் வருகிறது. அவரா இவர் என்று யோசிக்க வைக்கிறது. குண்டா, Eஹுர்ஸ்டைல் மாற்றி, "த பிரெசிலியன் ஜாப்" இரண்டாம் பாகம் 2008ல் வரத் தயாராகிவருகிறது. பார்க்கலாம் அப்பொழுது எப்படி இருக்கிறார் என்று.

ஜாக் நிக்கல்ஸன் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை, மாட் டேமென், டிகாப்ரியோ நடிப்பில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. குறிப்பாக தன்னுடைய சக அதிகாரியை போட்டுத்தள்ளும் இடத்திலும், தொடர்ச்சியான மனவழுத்தத்தில் தடுமாறும் பொழுதும் நல்ல நடிப்பு வெளிப்படுகிறது. மாட் டேமென் இயல்பாய் செய்திருக்கிறார். பார்ன் ஐடென்டிடி, பார்ன் சுப்ரிமஸிக்குப் பிறகு நான் விரும்பித் தேர்ந்தெடுக்கும் நடிகர்களில் ஒருவர்.

ஒரே ரத்தம், துப்பாக்கிச்சூடு, கெட்டவார்த்தைகள் தான் இந்தப் படம். கிளைமாக்ஸ் ஒரிஜினல் வாழ்க்கையை காண்பித்தாலும், தியேட்டரை விட்டு வெளிவரும் பொழுது ஒத்துக்கொள்ள முடியவில்லைதான். ஒரு முறை பார்க்கக்கூடிய படம்தான். நடிகர்களின் பிரமாதமான நடிப்பிற்கும், இயக்குநரின் திறமைக்கும், வேகமாக கொண்டு செல்லும் எடிட்டிங்கிற்காகவும் நிச்சயாமய் ஒரு முறை பார்க்கலாம்.

ராத்திரி படம் பார்த்துவிட்டு இரண்டு மணிக்கு மேல், புனேவில் (கொஞ்சமாக இருக்கும்)அற்புதமான ரோட்டில், தடையில்லாமல் 80 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்தது இன்னும் கொஞ்சம் நாட்களுக்கு நினைவில் இருக்கும் நிச்சயமாய்.


Directed by Martin Scorsese; written by William Monahan, based on the screenplay for the film "Infernal Affairs"; director of photography, Michael Ballhaus; edited by Thelma Schoonmaker; music by Howard Shore; production designer, Kristi Zea; produced by Brad Pitt, Brad Grey and Graham King; released by Warner Brothers Pictures. Running time: 150 minutes.

WITH: Leonardo DiCaprio (Billy Costigan), Matt Damon (Colin Sullivan), Jack Nicholson (Frank Costello), Mark Wahlberg (Dignam), Martin Sheen (Queenan), Ray Winstone (Mr. French), Vera Farmiga (Madolyn), Alec Baldwin (Ellerby) and Anthony Anderson (Brown).

Related Articles

13 comments:

 1. anonymous, பெத்த ராயுடு Thanks.

  ReplyDelete
 2. பூனேயை விட்டாச்சா... இப்ப எந்த ஊரு? வாழ்த்துகள் : )

  ReplyDelete
 3. என்னங்க பூனாவுலே இருந்து கிளம்பறீங்களா? அடடா...
  எந்த ஊரு இனிமே?

  ஐமாக்ஸ் தியேட்டர் பூனாவுலே இருக்கா? எங்கே? கொஞ்சம் சொல்லிட்டுப் போங்க.:-))))

  புது இடத்தில் எல்லாம் நல்லபடி நடக்க வாழ்த்து(க்)கள்.

  ReplyDelete
 4. பாபா, துளசி நன்றிகள். பதிவிலேயே குறிப்பிட்டிருந்தேனே, பெங்களூர் என்று.

  துளசி, ஐமாக்ஸ்னு நான் எழுதலை, நான் சொன்னது ஐநாக்ஸ். பன்ட் கார்டன் ரோட்டில் இருக்கிறது. புனே வந்து யாரைக் கேட்டாலும் வழி சொல்வார்கள்.

  ReplyDelete
 5. வாழ்த்துகள்.வெல்கம் டூ த சிட்டி ஆஃப் பைனரி பர்க்லர்ஸ்.

  மாட் டெமானைப் பற்றியும் கொஞ்சம் எழுதியிருக்கலாம் :-(

  சம்பந்தமில்லாத கேள்வி:இது CGEY உங்களது கம்பெனியை அரவணைக்கும் முன்னர் எடுத்த முடிவா??

  ReplyDelete
 6. பண்ட் கார்டன் ரோடா?

  மாற்றம் நிறைய வந்துருக்கும் இந்த 25 வருஷத்துலே.

  அப்பெல்லாம் அலங்கார் மட்டும்தான் ஸ்டேஷன் ப்ரிட்ஜ்க்குப் பக்கம்.
  நிறைய தியேட்டர்கள் எல்லாம் டெக்கான் ஜிம்கானா பக்கம் இடிச்சு, ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் ஆகிப்போச்சு.

  பெண்களூரு நல்ல ஊர்தான். சந்தோஷமாப் போய்வாங்க.

  ReplyDelete
 7. சுதர்ஸன் நன்றிகள். ஆமாம், கேப்ஜெமினியின் டேக் ஒவருக்கு முன்னால் தீர்மானித்தேன் தான். ஆனால் அதற்கு பிறகு கம்பெனி மேலிடத்தில் இருந்து வந்த ஆபர்கள் மொத்தத்தையும் ஒதுக்கும் பொழுது கேப்ஜெமினியையும் ஒதுக்கிவிட்டேன்.

  எனக்கென்னவோ இந்த மாற்றத்தால் நன்மை கிடைக்கும் என்று எண்ணமுடியவில்லை. ம்ம்ம் பார்க்கலாம்.

  துளசி, ஆமாம் நிறைய மாறியிருக்கலாம். க்கும் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 8. வேலையில் கொண்ட மாற்றம் வாழ்க்கையில் ஏற்றம் கொடுக்க வாழ்த்துக்கள்!!

  புறப்படுவதற்கு ஏற்ற படம் தான் பார்த்திருக்கிறீர்கள் !

  ReplyDelete
 9. I did not like the end. After Matt Kills Jack, if Leo kills Matt and exposes the truth it would have made me happier. (You might say its an happy ending MGR Formula :-)) what to do, mind longs for happiness in everything :-) ) Its a good movie. I never had high opinion abt Leo (I thought he became famous for his good looks) but this movie and Blood Diamond made me change my view on him.

  PS: I watch mostly when they come on DVD. So delayed comment :-))

  Thanks and regards, PK Sivakumar

  ReplyDelete
 10. உண்மைதான் பிகேஎஸ் எம்ஜிஆர் படம் மாதிரி தான் ஆகியிருக்கும் நீங்கள் சொன்ன முடிவை இயக்குநர் எடுத்திருந்தால்.

  எனக்கும் லியனார்டோ மீது அவ்வளவு பெரிய அபிப்ராயம் கிடையாது தான். ஏவியேட்டரில் நன்றாக செய்திருப்பார் அதையும் பாருங்கள். டிபார்ட்டட், ப்ள்ட் டயமண்ட் அவருடைய நடிப்பை நன்றாக வெளிப்படுத்த உதவியிருக்கிறது.

  நானும் டிவிடி எடுத்து வந்து பார்த்தேன் பிகேஎஸ் எக்ஸ்ட்ராஸ்க்காக.

  ReplyDelete

Popular Posts