In சொந்தக் கதை

அயர்லாந்து ஒரு அறிமுகம்

என்னடா இவன் இந்தியாவிலிருந்து அயர்லாந்துக்கு எதுவும் போய்ட்டானா என்று அவசரப்படுபவர்களுக்காக ஒரு சின்ன ப்ளாஷ்பேக். நான் கேன்பேவிலிருந்து மாறி பெங்களூருக்கு வந்தது உங்களில் பலருக்கு தெரிந்திருக்கும். நான் இங்கே வந்து சேர்ந்திருக்கும் ஒரு கம்பெனி ஒரு அயர்லாந்து பேஸ்டு கம்பெனி. இதனாலெல்லாம் நான் அயர்லாந்து ஒரு அறிமுகம் போடவேண்டுமானால். முதலில் அமேரிக்கா ஒரு அறிமுகம் தான் போடவேண்டும்.

சரி விஷயத்திற்கு வரலாம்னா ஒரு கன்டின்யுட்டி வேணும்ல அதனால இன்னும் கொஞ்சம் சுயசொறிதல். அதாவது நான் சேர்ந்திருப்பது ஒரு சிறிய கம்பெனியாக இருந்தாலும்(கேன்பேவுடன் ஒப்பிடும் பொழுது) ப்ரொடக்ட் பேஸ்டு கம்பெனி. இதனால் என்ன பிரச்சனை என்றால் இவர்கள் இன்டஸ்டிரியில் உபயோகப்படுத்தும் ஆர்க்கிடெக்சர்களை உபயோகப்படுத்தாமல்(சரியாகச் சொல்லவேண்டுமானால் - நேரடியாக உபயோகப்படுத்தாமல்) சொந்தமாக ஆர்கிடெக்சர் வைத்திருக்கிறார்கள். (டெக்னிக்கலாக இன்னுமொறு பதிவு போட விரும்புவதால் இப்போதைக்கு சுறுக்கமாக.)

இந்த மாதிரி வைத்திருப்பதால் வரும் கஷ்டம் என்ன என்றால் கூகுளாண்டவர் கோட் எழுத உதவமாட்டார். காப்பி பேஸ்ட் எல்லாம் ஒரளவிற்கு மேல் உதவாது. அதன் காரணமாக எங்களுக்கு அந்த ஆர்கிடெக்சரை சொல்லித்தருவதற்காக அந்த ஆர்கிடெக்சரை டிசைன் செய்த மக்களை - இல்லை நன்றாக அந்த ஆர்கிடெக்சர் அறிந்தவரை - இல்லையென்றால் என்னைப்போல பெரிய கம்பெனியில் இருந்து வந்த மக்களை கொஞ்சமாவது சமாதானப்படுத்துவதற்கு - அயர்லாந்து மக்கள் வந்திருந்தார்கள். அப்பாடா ஒருவழியா கதைக்கு வந்துட்டேன்.

ஒரு நாள் என்ன ஆச்சுன்னா, அன்றைக்கான வகுப்புகள் இல்லாததால் வழக்கம் போல் தமிழ்மணத்தைப் படித்துக்கொண்டிருந்தேன். ஒரு மெயில் உடனடியாக நாம் எல்லோரும் சந்திக்கிறோம் என்று. (நாம் என்பது அந்த அயர்லாந்துக்காரர் மற்றும் பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கும் நாங்கள்). நான் என்ன நடந்தது என ஒன்றும் புரியாமல் ஆகா நாம எக்ஸர்சைஸ் ஒழுங்கா செய்யாம டிமிக்கி கொடுக்கிறது தான் தெரிஞ்சு கூப்பிடுறான் போலிருக்குன்னு நினைச்சுக்கிட்டு. இருந்தாலும் வடிவேலு மாதிரி இருக்கிற மீசை விறைப்பா வைச்சிக்கிட்டு உள்ள போனேன் அந்த கான்பிரன்ஸ் அறைக்கு.

அந்த மனிதர் அயர்லாந்தைப் பற்றி பாடம் எடுக்க ஆரம்பித்துவிட்டார். ஒரு வழியாக நிம்மதிப் பெருமூச்சு விட்டவாறு கொஞ்சம் போல் நிமிர்ந்து உட்கார்ந்தேன். விஷயம் என்னான்னா - பயிற்சி எடுத்துகொண்டிருந்த ஒரு அதிகப்பிரசங்கி, அந்த நபரிடம்(பேரு டோனின்னு வைச்சுக்கோங்களேன்.) அயர்லாந்து ஒரு நாடில்லை போலிருக்கே, அது இங்கிலாந்தோட ஒரு மாநிலமாமுல்ல - என்பதாகவோ இல்லை அதற்கு ஈடான ஒன்றையோ கேட்டுத் தொலைக்க எனக்கு இந்தப் பாடம். பெரும்பாலும் இது போல் பயற்சியளிக்க வருபவர்கள் கொஞ்சம் நெருக்கமாக பழகமாட்டார்கள். முக்கியமாக தற்பெருமை பேசமாட்டார்கள் அதனால் தான் டோனி முதலில் இதைப்பற்றி ஆரம்பித்ததும் நான் மலைத்தது - இதற்கெல்லாம் காரணம் நாட்டுப்பற்று என்பது எனக்கு ஆச்சர்யம் அளிக்கிறது.

இனிமேல் கொஞ்சம் போல் அயர்லாந்து ஒரு அறிமுகம்.

எனக்கு அயர்லாந்து இங்கிலாந்தின் ஒரு மாநிலம் கிடையாது அது ஒரு தனிப்பட்ட நாடென்று தெரியும். அதேபோல நார்தர்ன் அயர்லாந்து பிரச்சனையும் கொஞ்சம் தெரியும். எப்படின்னா ஒரு சமயம் எந்த தேசத்தின் தேசியப்பாடல் சிறந்தது என்பதாகவோ இல்லை அதற்கு ஈடானதோ ஒரு போட்டியை பிபிசி(?) அறிவித்திருந்தது. அந்த முடிவுகளில் நார்தர்ன் அயர்லாந்தின் தேசியப்பாடல் முதல் இடம் பெற்றதாக ஞாபகம். விடுதலைப்புலிகளினுடையது இரண்டாவது வந்ததென்று நினைக்கிறேன். (நான் நிச்சயமாக போட்டோஜெனிக் மெம்மரி உடையவனெப்பது எனக்கு தெரியும் ஆனால் வரவர சாதாரண விஷயங்களை கூட நினைவில் வைத்துக்கொள்ள முடிவதில்லை.)

என்ன பிரச்சனை என்றால், இந்தியாவைப் போல் அயர்லாந்தும் இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் தான் முழுமையாக இருந்தது. பின்னர் 1949ல் இரண்டாம் உலகப்போரின் பின் சுதந்திரம் அடைந்து ரிப்பப்ளிக் ஆப் அயர்லாந்து என்ற பெயரில் தனிநாடனது. அங்கே தான் ஒரு சின்ன பிரச்சனை. நம்முடைய காஷ்மீரைப்போல(இது ஒரு சாதாரணமான கம்பேரிஸன் - மக்களுக்கு பிரச்சனை புரியவேண்டுமென்பதற்காக மட்டுமே.)

பிரச்சனை என்னவென்றால் அயர்லாந்தின் ஒட்டுமொத்த பகுதிகளும் கிறிஸ்துவத்துன் ஒரு பிரிவான கேத்தலிக் மக்களைக்கொண்டது. ஆனால் நார்தன் அயர்லாந்து பெரும்பான்மையாக ப்ரோட்டஸ்டண்ட் பிரிவினரைக்கொண்டது. இதனால் இங்கிலாந்திலிருந்து அயர்லாந்து பிரிந்த பொழுது இந்த வட அயர்லாந்து மக்கள் மட்டும் தாங்கள் இங்கிலாந்துடன்(இங்கிலாந்து ஒரு ப்ரோட்டஸ்டண்ட் நாடு) இருந்துவிடுவதாக சொல்லிவிட. இன்று வரை வட அயர்லாந்து இங்கிலாந்தின் ஒரு பகுதி. அந்த அதிகப்பிரசங்கியும் இந்த வட அயர்லாந்தை மட்டும் எடுத்துக்கொண்டு இங்கிலாந்தின் ஒரு பகுதி தான் ஒட்டு மொத்த அயர்லாந்து என்று சொல்லிவிட நான் இங்கே உங்களுக்கு இதையெல்லாம் விளக்குகிறேன்.

இன்னமும் வட அயர்லாந்தில் இருக்கும் கேத்தலிக் மக்கள்(சொல்லலாமா?) வட அயர்லாந்து அயர்லாந்துடன் இணைந்துவிட வேண்டும் என்று போராடி வருகிறார்கள். இது தான் சுருக்கமான இல்லை மிகச்சுருக்கமான அயர்லாந்தின் வரலாறு.

கேலிக் புட்பால்னு ஒரு அய்ட்டம். அப்புறம் ஒரு வகையான ஐரிஷ் டான்ஸ்.

இந்த கேலிக் புட்பால் என்கிற அய்ட்டம் கொஞ்சம் போல் புட்பால், கிரிக்கெட், ஹாக்கி எல்லாம் கலந்த ஒரு கலவை. உண்மை என்ன என்பது தெரியாது ஆனால் டோனி இந்த ஆட்டத்திலிருந்து தான் கிரிக்கெட் கொண்டுவந்தார்கள் என்பதைப் போன்ற ஒன்றை சொன்னார். ஆனால் நான் கூகுளை நாடவில்லை இதைக் கண்டுபிடிக்க.

மற்றது ஐரிஷ் டிரடிஷினல் மியூசிக் வகையில் வரும் ஒரு வகை டான்ஸ். நான் ரொம்ப நாளாக இந்த வகை டான் ஸ்பானிஷ் வகையறா என்று தான் நினைத்து வந்தேன். இந்த டான்ஸில் ஒரு விஷயம் அவர்கள் இந்த ஷூக்களை ஒரு சின்க்கில் ஆடும் பொழுது ஒரு பிரபலமானவர் ஒரு செகண்டில் அந்த ஷூவை 100க்கு பக்கத்தில் தட்டுவார் எனவும் டோனி சொன்னார். ரியலி அம்மேசிங். உங்களுக்காக ஒரு கேலிக் புட்பால் வீடியோவும், இந்த டான்ஸ் வகையறாவும் யூடுயூபில் கொடுக்கிறேன். பார்த்து மகிழுங்கள்.இரண்டு நிமிஷங்களுக்கு பிறகு வரும் அந்த டான்ஸைப் பார்க்கத் தவறாதீர்கள்
கடேசியில் ஒரு விஷயம் மற்றும் சில டீட்டெய்ல்ஸ்.

விஷயம் என்னன்னா டோனி இந்தக் கதையெல்லாம் சொல்லி இனிமேல் நீங்களெல்லாம் யாரவது ஒரு நபரிடமாவது அயர்லாந்து தனிநாடு. இங்கிலாந்தின் மாநிலம் என்பதை விளக்கவேண்டும் என கொஞ்சம் விளையாட்டாகச் சொன்னார். நான் அதைச் செய்து விட்டேன். இன்மேல் உங்களிடம் யாராவது மேற்சொன்ன விஷயத்தைச் சொன்னால் ப்ளீஸ் விளக்கவும்.

அப்புறம் அந்த டீட்டெய்ல்ஸ், டோனி அயர்லாந்தில் பிறந்தவர்களைப்(சில சமயம் நேரடியாக இல்லாமல் மறைமுகமாக அயர்லாந்து தொடர்பு உள்ளவர்களைப்) பற்றிச் சொல்லும் பெரும்பாலானோர் வியந்துதான் போனோம் நீங்களும் அந்தப் பட்டியலை ஒரு முறைப் பாருங்கள்.

Irish People

Related Articles

4 comments:

 1. I love celtic/Irish music a lot and its quite fun to dance for that....

  http://internetbazaar.blogspot.com

  ReplyDelete
 2. //ஒரு செகண்டில் அந்த ஷூவை 100க்கு பக்கத்தில் தட்டுவார் எனவும் டோனி சொன்னார//
  ரொம்பவே ஏத்தி சொல்லியிருக்கிறார்,

  வாய்ப்பு கிடைத்தால் "Riverdance" மற்றும் Michael Flatley யின் "Lord of the Dance" DVD - க்கள் வாங்கிப் பாருங்கள். ( Riverdance எனும் பெயரில் பல்வேறு குழுக்களின் வட்டுக்கள் உண்டு )
  அட்டகாசமான நடனமாக இருக்கும், நீங்கள் நிச்சயம் விரும்புவீர்கள்.

  ReplyDelete
 3. அயர்லாந்து மக்களுக்கு 'தண்ணி' மேல் தனிப் பிரியம் என்றும், காலை எழுந்தவுடன் பாருக்கு சென்று அனுபவிப்பவர்கள் என்றும் வதந்தி நிலவுகிறதே... உண்மையா?

  பசுமையான நாடாச்சே! மலர்களைப் படம் பிடித்தீரா?

  (பதிவு சூப்பர்!)

  ReplyDelete
 4. IFC fan, பரணீ மற்றும் பாலா நன்றிகள்.

  பரணீ நிச்சயம் முயற்சி செய்கிறேன்.

  பாலா நான் அயர்லாந்து போகவில்லை. மற்றபடிக்கு அந்த பீர் விஷயத்தைக் கேட்டுப்பார்க்கிறேன்.

  ReplyDelete

Popular Posts