In உலகக்கோப்பை கிரிக்கெட்

ஆஸ்திரேலியா - உலகக் கோப்பை

போன தடவையும் இதேபோல் ஒரு மாப் போட்டுக்கொடுத்தேன். 90% அப்படியே நடந்தது. ஏன்னா ஒரே ஒரு விஷயத்தை மட்டும் வச்சு போட்ட மாப் அது விஷயம் என்னான்னா, ஆஸ்திரேலியா ஒரு மாட்ச் கூட வேர்ல்ட் கப்பில் தோற்காது என்பதுதான்.

அப்படியே நான் சொன்ன இன்னொன்று இந்தியா பைனல்ஸ் வருமென்பது, பைனல்ஸ் ஒன் சைட்டைட் மேட்ச் ஆகயிருக்கும் என்பதும் தான். எனக்கென்னவோ நான்காண்டுகளுக்குப் பிறகும் மாற்றம் எதுவும் தெரியவில்லை. கீழே நான் கொடுத்திருக்கும் விவரங்கள் புரியுமென்று நினைக்கிறேன். இந்தப் பதிவு வேர்ல்ட் கப் முடியும் வரை அப்டேட் செய்யப்படும்.

Group A

1. Australia
2. South Africa

Group B

1. India
2. Srilanka

Group C

1. New Zealand
2. England

Group D

1. Pakistan
2. West Indies

Then Super Eights

A1 & D2 - Australia Vs West Indies - Australia
A1 & B2 - Australia Vs Srilanka - Australia
A1 & C2 - Australia Vs England - Australia
A1 & D1 - Australia Vs Pakistan - Australia
A1 & B1 - Australia Vs India - Australia
A1 & C1 - Australia Vs New Zealand - Australia

The Semi finalists

1. Australia
2. England
3. India
4. West Indies

அப்படின்னா
Australia Vs West Indies - Australia
England Vs India - India

இன்னமும் சொல்லணுமா

Finals

Australia Vs India - Australia

இன்னும் அதிக விவரங்களுடன் வருகிறேன்.

Related Articles

6 comments:

 1. என்ன நண்பரே காசு கொடுத்தாட்டாய்ங்களோ உங்களுக்கும், முடிவுகளை அப்படியே போட்டு தாக்கரீங்க....

  ReplyDelete
 2. Haven't you seen the Newzealand's mega (series)victory against Australia?

  ReplyDelete
 3. குமரன் ரொம்ப நாளாச்சு உங்களைப் பார்த்து. முன்னலெல்லாம் கதை ஒன்னு போட்டா மறக்காம வருவீங்க இப்பல்லாம் அடிக்கடி பார்க்க முடியறதில்லை.

  உண்மையில் ஆஸ்திரேலியா இந்த வேர்ல்ட் கப்பில் தோற்கும் என நான் நினைத்த அணிகள் இரண்டு ஒன்று நியூசி, மற்றது இங்கிலாந்து.

  ஆனால் இப்போதைய சூழ்நிலையில் (Newzealand's mega (series)victory against Australia) ஆஸ்திரேலியாவின் கம்பேக் பிரமாதமாகயிருக்கும்.

  சும்மா பேச்சுக்கு சொல்லலை, வேணும்னா பாருங்க. இந்த இரண்டு பேருக்கும் எதிரான போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஆட்டத்தை.

  சிவாஜி படத்தை பார்க்க தவித்துக் கொண்டிருப்பதைப் போல இந்த ஆட்டங்களைக் காண தவித்துக்கொண்டிருக்கிறேன் அனானி.

  ReplyDelete
 4. ஆசை தோசை அப்பளம் வடை மண்ணாங்கட்டி தெருப்புழுதி எல்லாம் உம்ம ஆஸிக்குன்னு நெனப்புதான்வே.

  ரெண்டாவது ரவுண்டாவது வருவானுங்களான்னு பாரும் :-)

  ரொம்பப் பேசுனீருன்னா அவனுங்கதான் கெயிப்பானுங்கன்னு பதிவு போடுவேன். அப்புறம் கஜகர்ணம் போட்டாலும் அவனுங்க இருக்குற திசையில காத்து கூட அடிக்காது . பாத்துக்கிடும்

  சாத்தான்குளத்தான்

  ReplyDelete
 5. நண்பரே,ஒரு சிறு திருத்தம்..புதிய உலகக்கோப்பை விதிகளின்படி, முதல் சுற்றில் அனைத்து போட்டிகளிலும் வென்றாலும், இந்தியா சமீபத்திய தரவரிசைப்படி B2 ஆகவே கருதப்படும்.

  மத்தபடி நீங்க சொல்றமாதிரி நடந்தா சந்தோஷம் தான்!!

  ReplyDelete
 6. நம்ம எல்லாரும் உலகக் கோப்பை தொடக்க நிலையிலேயே நிக்கும் போது அண்ணாத்த ஆஸ்திரேலியாவுக்கு கோப்பையவே தூக்கி கொடுத்துட்டாரே! என்ன மாதிரியே ஆஸ்திரேலியா மேல ஒரு மரியாதை வச்சிருக்கீங்க! வெரி குட்!!

  சூப்பர் எட்டில் நீங்கள் சொல்வது ஆஸ்திரேலியா எல்லாப் போட்டியிலும் வெற்றி பெறாது. வேண்டுமானால் நமக்குள் சேலஞ்ச்? ரெடியா?

  ஆனால் எனக்கென்னவோ இம்முறை வெல்லப் போவது இதுவரை வெல்லாத ஒரு அணியாக இருக்கும். அதாவது தெ.ஆ/நியூ/இங்கி யாக இருக்கும். வேண்டுமானால் பாருங்கள். :)

  உங்களின் இப்பதிவை இடையிடையே வந்து பார்வையிடுகிறேன்.

  பின் குறிப்பு: நண்பர்கள் முத்துகுமரன்/ஆசிப் ரெண்டு பேரும் ஆஸிக்கு எதிராக களத்தில் இறங்கியுள்ளார்கள். கவனம்.

  ReplyDelete

Popular Posts