In உலகக்கோப்பை கிரிக்கெட்

Go Aussie Go!!! - 3

முன்னாடி இரண்டு தெய்வங்களை நம்பி நான் போட்ட வேர்ல்ட் கப் மேப், ஊத்திக் கொண்டது உண்மைதான். இந்தியாவை பைனல்ஸ் வரை கொண்டு சென்றது என்னுடைய தேசபக்தியால் மட்டும் கிடையாது. அவர்களுக்கு நிச்சயமாக அந்தத் திறமை உண்டு. என்னவோ யார் செய்த சதியோ, வைத்த சூனியமோ ஊத்திக் கொண்டு முதல் ரவுண்டிலேயே வெளியேறும் நிலை.

ஆனால் என்னுடைய புல் சப்போர்ட் அணி பிரமாதமாக விளையாடிவருகிறது. எனக்கென்னமோ இந்த முறையும் ஆஸ்திரேலியா எந்த பிரச்சனையும் இல்லாமலே ஜெயித்துவிடும் என்று நினைக்கிறேன். ஆனால் நான் எதிர்பார்த்த ஸ்டுவர்ட் கிளார்க்கை ஆஸ்திரேலியா களம் இறக்கவேயில்லை :@, அதேபோல் ஆஸ்திரேலியாவின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் சூப்பராக விளையாடுவதால் Mr. Cricketற்கும் வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டன :(.

Home Team வெஸ்ட் இண்டீஸ் ஆஸ்திரேலியாவிற்கு கொஞ்சம் பைட் கொடுக்க முயல்வார்கள். ஆனால் இந்த இரண்டு டீமிற்கு இடையிலான குவாலிட்டி டிஃப்ரன்ஸ் ஆஸ்திரேலியாவை சுலபமாக ஜெயிக்க வைக்கும். பாண்டிங் தன்னுடைய ஐந்தாவது உலகக்கோப்பை செஞ்சுரியை நலுவவிட்டார்(91 Runs). ஆனால் பிரமாதமான பார்மில் இருக்கும் அவர் இன்னும் குறைந்த பட்சம் இரண்டு செஞ்சுரியாவது அடிப்பார் என்று அடித்துக்கூறலாம். அதுவும் இல்லாமல் கொஞ்சம் கஷ்டமான போட்டிகளில் Captain's Knock ஐ அவரிடமிருந்து நிச்சயமாக எதிர்பார்க்கலாம். மார்க் வா' வின் வேர்ல்ட் கப் ரெக்கார்டுகளை அவர் உடைக்கும் பொழுதெல்லாம் மனசுக்கு கஷ்டமாகயிருந்தாலும். ஒரு சிறந்த ப்ளேயர் இன்னொரு சிறந்த ப்ளேயரின் ரெக்கார்டுகளை உடைக்கிறார் என்ற சந்தோஷம் எப்பொழுதும் உண்டும்.கடந்த ஆட்டத்தில் அடித்த முதல் 8 ரன்கள் மூலமாக 10,000 ரன்களைக் கடந்த ரிக்கி பாண்டிங்கிற்கு ஒரு பொக்கே.(பொக்கை இல்லை) மெக்ரத்திற்கு இன்னும் நான்கு விக்கெட்கள் பாக்கியிருக்கின்றன. ஷான் டைட் பரவாயில்லை, 61 ரன்கள் கொடுத்தாலும் மிடில் ஆர்டரில் இரண்டு பேரை தூக்கினார், பிராட் ஹாக்கை இந்த மாட்சுக்கு எடுக்கும் பொழுது கமேண்டேட்டர்கள் இது சரிவராது என்றார்கள், ஆனால் சரியாக வந்தது. மாத்யூ ஹைடனின் பார்ம் பிரமிக்க வைக்கிறது, அண்ணாத்தையை பார்மில் இல்லையென்று வெளியில் தூக்கி வைத்திருந்தது நினைவில் வந்தது.ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் நான்கு போட்டிகள்(Super Eight's) விறுவிறுப்பு இல்லாமல் இருக்குமென்று நினைக்கிறேன். ஆஸ்திரேலியா நியூஸிலாண்டை துவம்சம் செய்யும் நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

---------------------

முதல் சுற்று போட்டிக்குப் பிறகு திருத்தியமைக்கப்பட்ட என்னுடைய மேப். சௌத் ஆப்பிரிக்கா செமிஸ் வரக்கூடாது என்று இல்லை ஆனால் வரமாட்டார்கள் என்பது என்னுடைய எண்ணம்.

Group A

1. Australia
2. South Africa

Group B

1. IndiaSrilanka
2. SrilankaBangladesh

Group C

1. New Zealand
2. England

Group D

1. PakistanWest Indies
2. West IndiesIreland

Then Super Eights

A1 & D2 - Australia Vs West Indies - Australia
A1 & B2 - Australia Vs Srilanka - Australia
A1 & C2 - Australia Vs England - Australia
A1 & D1 - Australia Vs Pakistan - Australia
A1 & B1 - Australia Vs India - Australia
A1 & C1 - Australia Vs New Zealand - Australia

March, Tue 27 - Australia v West Indies
March, Sat 31 - Australia v Bangladesh
April, Sun 8 - Australia v England
April, Fri 13 - Australia v Ireland
April, Mon 16 - Australia v Sri Lanka
April, Fri 20 - Australia v New Zealand

The Semi finalists

1. Australia
2. England
3. IndiaNew Zealand
4. West Indies

அப்படின்னா
Australia Vs West Indies - Australia
England Vs IndiaNew Zealand - England

இன்னமும் சொல்லணுமா

Finals

Australia Vs IndiaEngland - Australia

Related Articles

7 comments:

 1. "கனவு காணும் வாழ்க்கை யாவும்
  கலைந்து போகும் மேகங்கள்" - அட நான் பாடலை சாமி. நம்ம திராவிட் அண்ணாச்சி பாடுனதுதான். ஃபைனல் முடிஞ்சதும் நான் பாடுறேன் உங்களுக்காக :-)

  சாத்தான்குளத்தான்

  ReplyDelete
 2. ஃபைனல்ஸுக்கு இன்னும் நிறைய நாட்கள் இல்லைங்காணும். அதையும் தான் பார்த்திருவோமே.

  சாதாரணமாவே ஏக புலம்பல் இருக்கும்(ஆஸ்திரேலியாவுக்கெதிரா), இப்ப இந்தியா தோல்விக்கும், சௌத் ஆப்பிரிக்காவிற்கு எதிரான வெற்றிக்கும் பிறகு காதில் புகை பறப்பதாக, அமீரகத்தில் இருந்து வரும் செய்திகள் ஏற்கனவே சொல்லியாச்சு.

  ReplyDelete
 3. மோகன்தாஸ்,
  நீங்களும் நம்ம குழுவா. வாங்க வாங்க கை கோர்த்து ஆஸியை ஆதரிப்போம். வெற்றி நமக்குத்தான்.

  //சாதாரணமாவே ஏக புலம்பல் இருக்கும்(ஆஸ்திரேலியாவுக்கெதிரா), இப்ப இந்தியா தோல்விக்கும், சௌத் ஆப்பிரிக்காவிற்கு எதிரான வெற்றிக்கும் பிறகு காதில் புகை பறப்பதாக, அமீரகத்தில் இருந்து வரும் செய்திகள் ஏற்கனவே சொல்லியாச்சு.
  //
  அது இங்கிருந்து பார்க்கிற எனக்குத்தானே தெரியும். புகை வருவதென்னமோ உண்மைதான். :)

  ReplyDelete
 4. அய்யா நான் உங்க குழுகிடையாது ;). நீங்கதான் என் குழு. ஹிஹி.(நாங்க தேசப்பற்றெல்லாம் மூட்டைக்கட்டி வச்சி ஆஸ்திரேலியாவுக்கு சப்போர்ட் செய்ய ஆரம்பிச்சு வருஷம் பல ஆச்சுது.)

  எதுவாயிருந்தா என்ன, ஆஸ்திரேலியாவுக்குத்தான் கப்பு.

  ReplyDelete
 5. //அய்யா நான் உங்க குழுகிடையாது ;). நீங்கதான் என் குழு. ஹிஹி.(நாங்க தேசப்பற்றெல்லாம் மூட்டைக்கட்டி வச்சி ஆஸ்திரேலியாவுக்கு சப்போர்ட் செய்ய ஆரம்பிச்சு வருஷம் பல ஆச்சுது.)
  //
  அப்படியா! ஓ.கே சீனியர் :)


  //எதுவாயிருந்தா என்ன, ஆஸ்திரேலியாவுக்குத்தான் கப்பு.
  //
  அது............

  ReplyDelete
 6. நானும் உங்க குழுவுக்கு வந்துட்டேங்க..நம்மளையும் சேர்த்துக்குங்க ஆட்டத்துல :)

  ReplyDelete
 7. ஒரு ஊருல ஒரு மடம் இருந்ததாம். அந்த மடத்துல நாலு மன்னிக்க மூணு ஆண்டிப்பசங்க கூடுனாங்களாம். கூடி, 'இந்த மண்டபம் சரியில்ல. புதுசா ஒரு ம்டம் கட்டணும்'னு ஆரம்பிச்சானாம் ஒருத்தன். அடுத்தவன். இந்த ஐடியா எனக்கு ஏற்கெனவே இருக்குன்னானாம். இன்னொருத்தன் புதுசா வந்து எனக்கும்ன்னானான். இவங்க கூடி மடம் கட்டப் போறதை நெனச்சு ஒருத்தனுக்கு தாங்க முடியாத சிரிப்பாம். அதக்கண்ட மூத்த ஆண்டி காதுல புகை வருது பாருன்னானாம். கூட நின்ன இளையாண்டி 'அட ஆமா நான் பக்கத்துல நின்னு பாக்கம்லா'ன்னானாம். ஹய்யோ ஹய்யோ. நல்லா இருங்கடே! இன்னைக்கு ஊதுவாங்க மொத சங்கு :-)

  சாத்தான்குளத்தான்

  ReplyDelete

Popular Posts