In சினிமா சினிமா விமர்சனம்

தாரே ஜமீன் பர்

இன்று டெல்லியில் எனக்கிருந்த ப்ளான்களை திருப்பிப்போட்டது, ஆசிப்பின் சூடான இடுகையில் இருந்த இந்தப் படத்தின் விமர்சனம். சட்டென்று புரட்டிப் பார்த்துவிட்டு நேரம் இருந்ததால் சட்டென்று கிளம்பி வசந்த் விகார் பிவிஆர் சினிமாஸில் இந்தப் படத்தின் டிக்கெட்கள் கேட்டேன், ஏற்கனவே புக் செய்திருந்த ஒரு குடும்பத்தில் ஒரு டிக்கெட் மீந்துவிட எனக்கு தந்துவிட்டார்கள் காசுக்குத்தான்.

ஆசிப்பிற்கு தமிழ் படங்கள் பிடிக்காதென்பது எனக்கு புது விஷயமல்ல, இதே அவர் இப்படி ஒரு தலைப்பை வைத்துவிட்டு மலையாளப்படத்தைப் பற்றி எழுதியிருந்தால் அந்தப் பக்கம் திரும்பிக் கூட பார்த்திருக்க மாட்டேன். ஆனால் இந்தப் படத்தைப் பற்றி போகோவில் முன்பே விளம்பரங்கள் பார்த்திருந்ததால். சட்டென்று இந்தப் படத்தின் பால் ஆசைப்பட்டேன் அப்படி என்னத்தான் கிழிச்சிட்டார் அமீர் கான் என்று.
 
அமீர் கானின் பக்வாஸ் தனத்தை ஒத்த சில கான்செப்ட்கள் மீது நம்பிக்கையில்லாவிட்டாலும் சினிமா என்பதில் அவருடைய தனிப்பட்ட விருப்பங்களைப் போட்டுக்குழப்பி விட விரும்பவில்லை. லகான் படத்தை இந்தியாவே பாராட்டிக் கொண்டிருந்த பொழுது. நான் டெல்லியில் இருந்தேன் என்று நினைக்கிறேன் அந்தப் படத்தை பார்க்கவேண்டும் என்ற ஆர்வமே வரவில்லை. இன்றும் லகான் பார்க்கவில்லை என்று சொல்லி நண்பர்களின் தேசப்பக்தி மிகுந்த பேச்சுக்களைக் கொண்டுவந்து ஒரு மாதிரி அவர்களை வம்பிழுத்திருக்கிறேன். அவருடைய லகான் படம் என்னைக் கவரவில்லை.

இதனால் இந்தப்படத்தைப் பற்றிய ஆர்வம் இன்னும் அதிகமானது.

 Dyslexia என்ற நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனைப் பற்றிய கதையிது. படத்தின் தொடக்கத்தில் அந்தப் பையனின் பெயரைப் போட்டு பின்னர் அமீர்கான் பெயர் போடுவதெல்லாம் எனக்குப் பெரிய விஷயமாகப் படவில்லை. ஏனென்றால் இந்தப்படத்தைப் பார்க்கும் அத்தனை பேருக்கும் அந்தச் சிறுவன் தான் ஹீரோ என்பது தெரியும் அப்படியிருக்க அமீர்கானின் பெயரைப் போடாமல் அவர் தன் பெயரைக் காப்பாற்றிக்கொண்டார் என்று தான் சொல்லவேண்டும்.

ஒரு அற்புதமான படத்தைக் கொடுத்ததற்காக அமீர்கானை, டைரக்டராக, தயாரிப்பாளராக நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும். படம் மனதைக் கவர்வதாக, பிசைவதாக, கண்ணீர் சிந்த வைப்பதாக இருக்கிறது. நான் படம் பார்த்து கண்ணீர் விடுவதெல்லாம் பெரியவிஷயம் இல்லை, ஏனென்றால் நிறைய படங்கள் பார்த்து கண்ணீர் விட்டிருக்கிறேன், ஆனால் ஒன்று கிளைமேக்ஸில் ஆயிருக்கும் இல்லாவிட்டால் படத்தின் ஏதோ ஒரு தருணத்தில் ஆய் இருக்கும். ஆனால் இந்தப் படம் என்னை கண்ணாடிக்குள் இருக்கும் கண்களைத் துடைத்தபடியே படம் பார்க்க வைத்தது.

அந்தப் பையனை தேர்ந்தெடுத்தது யாரென்று தெரியவில்லை, படத்தில் அமீர் கான் தவிர்த்து மற்ற அனைவரும் மிக இயல்பாகவே பொருந்துகிறார்கள். அந்தப் பையனின் அப்பா, அம்மா ஆகட்டும் அண்ணன் ஆகட்டும் ஆசிரியர்கள் ஆகட்டும்(அமீர் கான் தவிர்த்து) தேடிப்பிடித்து கோர்த்தது போல் இருக்கிறது. கதையின் ஓட்டத்தை தடுமாற வைக்காத இசை, பின்னணி இசை பாடல்கள் அனைத்துமே அருமையாக இருக்கின்றன. ஏற்கனவே கேட்ட பாடல்கள் தான்.

ஒளிப்பதிவு அருமையாக இருக்கிறது, படத்தில் வண்ணங்கள் ஒரு பகுதி என்பதால், ஒளிப்பதிவின் தேவை அதிகமாகயிருந்திருக்கும் நன்றாகச் செய்திருக்கிறார் காமராமேன். ஓவியங்கள் வரைந்தது யார் என்று தெரியவில்லை அருமையாக இருக்கிறது ஒவ்வொன்றும் அதிலும் கடைசியில் அந்தச் சிறுவன் வரைந்த ஒன்றும் அமீர்கான் வரைந்த ஒன்றும் பிரம்மாதமாகயிருக்கிறது.

லகே ரஹோ முன்னாபாய்க்கு பிறகு ஸ்டான்டிங் அப்ளாஸ் எனக்குத் தெரிந்து நான் பார்ப்பது இந்தப் படத்திற்குத்தான்.

தமிழ்க் குடும்பங்கள் அனைத்தும் சென்று பார்க்கவேண்டும் என்று கட்டளை ஒன்று போட்டால் நன்றாகயிருக்கும் ஆனால் பாவம் மக்களுக்கு இந்தி தெரியாதே(:)) ஜோக்ஸ் அபார்ட் நிச்சயம் படம் சொல்ல வரும் விஷயம் மொழிகளின் எல்லைகளைக் கடந்து அனைவரையும் சென்று சேரக்கூடியது. அதென்ன தமிழ்க்குடும்பங்கள் என்று சண்டைக்கு வராதீர்கள், வேண்டுமானால் கல்யாணம் ஆகி குழந்தைக்காகக் காத்திருக்கும் அனைவருமே பார்க்கவேண்டிய ஒரு படம்.

ஆனால் ஒரு படம் சமுதாயத்தை மாற்றிவிடுமா தெரியவில்லை, ஓவியத்தின் மூலம் போட்டிகளின் உலகத்தின் கத்திச் சண்டை போட முடியுமா தெரியவில்லை. படத்தை மசாலா தடவித்தான் எடுத்திருக்கிறார் அமீர்கான், படத்தின் முடிவு எனக்கு ஆச்சர்யத்தை அளித்தது இதைத் தவிர்த்து ஒரு முடிவை இந்தப் படம் வைத்திருக்கவே முடியாதா என்ற கேள்வியும் எழுகிறது. அவ்வளவே. குஜராத்தில் இந்தப் படம் ஓடுகிறதா என்று தெரிந்து கொள்ள ஆசையாகயிருக்கிறது. அமீர்கான் 'கஜினி' ரீமேக் போன்ற பக்வாஸ் படங்களை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டு இது போல் இறங்கலாம் என்று மனம் சொன்னாலும் அவருடைய பொருளாதாரம் அதற்கு அனுமதிக்காதென்றே நினைக்கிறேன். எல்லோரும் ஒரு முறை பார்க்கவேண்டிய படம் என்பதைத் தவிர சொல்ல ஒன்றுமில்லை, அம்மாவையும் அப்பாவையும் அழைத்துவந்து காண்பிக்க வேண்டும் என்ற ஆசையும் ஆவலும் எழுகிறது.

படம் பார்த்து முடித்ததும் நிச்சயமாய் சொல்லலாம் அமீர்கான் என்னமோ கிழித்துத்தான் இருக்கிறார் என்று. ஆனால் அது அழகான ஓவியமாக இருக்கிறது.

Related Articles

11 comments:

 1. இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளர் சேது என்று போட்டிருந்தது. அவரை பற்றிய விவரங்கள் தெரியவில்லை.

  ஆசிரியர்களின் நடிப்பு கொஞ்சம் அதிகப்படியானது.

  மேலும் அம்மாவாக நடித்தவரின் நடிப்பிலும் இயற்கைத்தனம் கொஞ்சம் குறைவு.

  மற்றப்படி இவ்வளவு தைரியமாக இந்த படத்தை எடுத்ததற்கு அமீர்கானை பாராட்டலாம்.


  லகானும் மசாலா கலந்த ஒரு படம் தான். அதையும் ஒரு முறை எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் போய் பாருங்கள்.

  ReplyDelete
 2. \படத்தின் முடிவு எனக்கு ஆச்சர்யத்தை அளித்தது இதைத் தவிர்த்து ஒரு முடிவை இந்தப் படம் வைத்திருக்கவே முடியாதா என்ற கேள்வியும் எழுகிறது. \\

  சேம் பிளட்..;)

  ReplyDelete
 3. இனிய மோகன்தாஸ்,

  குஜராத்தில் வெளியிடுவதில் சில தடைகள் இருந்திருக்கின்றன. அதன் பிறகு அந்தச் செய்திகளில் ஆர்வம் செல்லவில்லை.

  முடிவாக படம் நன்றாக இருக்கிறது என நீங்கள் சொல்வதாக எனக்குத் தோன்றுகிறது.

  அன்புடன்
  ஆசாத்

  ReplyDelete
 4. அந்த ஓவியங்களை வரைந்தவர், படத்தின் writer & creative director அமோல் குப்தே.

  புத்திசாலித்தனமான படங்களையே பார்த்து சிலாகித்த என் மனசு, இது போன்ற நேர்மையான படங்களை ஜீரணிக்க சிரமப்படுகிறது :-)

  கதை சொல்லியின் பார்வையில் ஒழுக்கமாகத் தெரிந்திருக்கக் கூடிய கதாபாத்திரங்கள் - கண்டிப்பு நிறைந்த அப்பா, குழந்தைகளுக்காக கேரீயரைத் துறந்த அக்கறையும் கனிவுமான அம்மா, நல்லா சொல்லிக் குடுக்கும் ஆசிரியர்கள் எட்செட்ரா - , இஷான் பார்வையிலே கேரிகேச்சர் போலத் நமக்குத் தோற்றம் அளிக்கிறார்கள். ரைட்டர் ஜொலிக்கிறார், முதல் பாதியில். இந்த மாதிரி சிறுவனின் பாய்ண்ட் ஆஃப் வியூவிலே, பாசாங்கில்லாமல் வந்த இந்தியப் படங்கள் யாவை என்று யோசித்துப் பார்க்கிறேன். ஒண்ணும் சிக்கவில்லை.

  முதலிலே அமோல் குப்தே இயக்கினார். ஸ்க்ரிப்ட்டில் உள்ளதை திரையில் கொண்டு வரத் தெரியவில்லை அவருக்கு என்று, ஆமீர்கானே இயக்கி முடித்தார்.

  எல்லாரும் அமீரை ஆஹா ஓஹோ என்கிறார்கள், என்னோட ஓட்டு குப்தேவுக்கு

  ReplyDelete
 5. Manjoor Rasa,

  From a teacher's family I know teachers like them.

  Yeah! mother character some what a bit over acted/reacted. But like what you said we should congratulate Amir Khan for his boldness.

  ReplyDelete
 6. Aasath Bai,

  Yep, the film was a good one. But I guess Asif Meeran some what over reacted for the film :).

  ReplyDelete
 7. Prakash,

  I too have seen that Creative Director & Writer in screen, and bit confuesed about the direction part though.

  Thanks for the information.

  I have seen one french film, forgotten the name. The director of that film just screened the confusions what the hero will have. You can feel his confusions. Like what this boy feels when he thinks about maths, numbers and etc. I will find out the name of film and let you know.

  One more by Gael Garcia Bernal, "The Science of Sleep" in this also you feel that same kind of concept.

  //புத்திசாலித்தனமான படங்களையே பார்த்து சிலாகித்த என் மனசு, இது போன்ற நேர்மையான படங்களை ஜீரணிக்க சிரமப்படுகிறது :-)//

  I agree with this.

  //எல்லாரும் அமீரை ஆஹா ஓஹோ என்கிறார்கள், என்னோட ஓட்டு குப்தேவுக்கு//

  and this. :)

  ReplyDelete
 8. ஆசாத்ஜி, இங்கிட்டு பிரச்சனை ஒண்ணுமில்லை. படம் ஓடு ஓடுன்னு ஓடிக்கிட்டு இருக்கு. பரோடாவில் மட்டும் இரண்டொரு நாள் தாமதமாய் வந்தது என்று நினைவு. ஆனால் இதுக்கு முன்பு அமீர், கஜோல் நடித்த படம் இங்கு தடை செய்யப்பட்டதாமே?
  அதுதாங்க கஜோல் கண் இல்லாம நடிச்சிதே அந்த படம்

  - ramachandranusha

  ReplyDelete
 9. மோஹன்.....எல்லோரும் இந்த படத்தை பற்றி விமர்சனம் எழுதியாச்சு.எனக்கு ஒரே ஒரு வினா......are they showing this boy afflicted with dyslexia to be extremely talented in painting??
  cos i ve seen those neglish movies which depict kids afflicted with autism (totally different from dyslexia)to be extemely good with numbers.(rain man and nother movie with bruce willis.i forget the name....)which is untrue......this has misguided many parents.......the kids can just be like anyother kid..........!!

  ReplyDelete
 10. ராதா எக்ஸாக்ட்லி, ஆமாம் எனக்கும் அதே வினா தான் எழுந்தது. நான் ஆட்டிஸம் பற்றியும் ரெய்ன் மேன் பற்றியும் முன்பே எழுதியிருக்கிறேன். பிஎச் இஎல் ல் எனக்குத் தெரிந்து இந்த வகைக் குழந்தைகளைத் தெரியும் என்பதால், எதிலும் ஸ்பெஷலாக இல்லாமல் இருக்கும் குழந்தைகளையும் தெரியும்.

  நான் கேட்க நினைத்த கேள்வியும் இதுதான். ஆனால் எனிதிங் இஸ் பெட்டர் தேன் நத்திங் என்பதைப் போல் எடுத்துக்கொண்டு விட்டேன்.

  கிளைமாக்ஸ் பற்றி சொல்லியிருந்ததில் உள்ளுறையாகச் சொல்ல நினைத்தது இதுதான், ஒரேயடியாகப் படத்தின் குறையாக இதைச் சொல்ல விருப்பம் இல்லை. அவ்வளவே.

  ReplyDelete

Popular Posts