In நாட்குறிப்பு

நான் என்ன கேக்க ஜாத்தாவுன்னா?

ஹிந்தி பற்றி ஏற்கனவே நிறைய பேசியிருக்கிறேன், இன்னிக்கு புதுசா ஒன்னும் சொல்லிடப்போறதில்லை தான். இந்த முறை டெல்லி சென்றிருந்த பொழுது பழைய கம்பெனி நண்பர்களைச் சந்தித்தேன், அது ஏற்படுத்திய தாக்கத்தில் நிச்சயம் ஒரு பதிவே எழுதலாம் நிச்சயம் எழுதுகிறேன். ஆனால் அங்கே நண்பர்கள் சொன்னது "உன்னுடைய ஹிந்தி இப்ப நல்லாயிருக்கு!". நான் சமீப காலமாக ஏறக்குறைய மூன்றாண்டுகளுக்கு சுமார் இப்படி ஒன்றைக் கேள்விப்படவேயில்லை என்பதால் முதலில் என்னை ஆச்சர்யப்படுத்தியது. புனேவிலும் சரி பெங்களூருவிலும் சரி என்னுடைய ஹிந்தி என்பது எப்பொழுதும் என்னுடன் பேசுபவர்களுக்கு ஆச்சர்யம் அளிக்கக்கூடியது தான், தமிழ்நாட்டிலிருந்து வந்து எப்படி நீ ஹிந்தி பேசுற என்று ஏகப்பட்ட கேள்விகள் வந்திருக்கிறது. ஆனால் யாரும் உன் ஹிந்தி இப்ப நல்லாயிருக்கு என்று சொல்வதில்லை, ஏனென்றால் அவர்களுக்கு என் ஹிந்தியின் தொடக்க காலம் பற்றிய அறிமுகம் இல்லாமல் இருப்பது தான்.
 
ப்ராத்மிக் முடிக்காவிட்டாலும் நான் ஹிந்தியில் எழுதியிருப்பதை படிக்கக்கூடியவன், அத்தனை வேகமாக என்றில்லாவிட்டாலும் ஓரளவு வேகத்திற்கு. ஆனால் ராஷ்ட்ரபாஷா(இதன் தமிழ்பெயர்ப்பு பற்றிய கேள்விகளுக்கு நான் இப்பொழுது வரவில்லை அந்த படிப்பின் பெயர் அது அவ்வளவே!) வரை படித்த தமிழ்மக்கள் கூட ஹிந்தியில் சரளமாகப் பேச மாட்டார்கள் என்பதை என் குறைந்த பட்ச அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். ஏனென்றால் படிப்பு ஹிந்திக்கும் பேசும் ஹிந்திக்கும் வித்தியாசம் நிறைய உண்டு. நான் டெல்லியில் இருந்த பொழுது என்னைவிடவும் பெரிய அதிகாரிகளிடம் ஹிந்தியிலும் என் அளவில் அல்லது என்னை விட குறைந்த பதவியில் வேலை செய்பவர்களிடம் ஆங்கிலத்திலும் பேசிக்கொண்டிருந்தேன். சொல்லப்போனால் என் உள்ளுணர்வு அறியாமல் இதை செய்து வந்தேன் இதற்கு முக்கியக் காரணம் என் ஆங்கிலத்தைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை. ஒருமுறை என்னைவிட குறைந்த பதவியில் வேலை பார்க்கும் பெண் ஒருவர் சொல்லப்போய் எனக்கு இந்த விஷயம் புரிந்தது; பின்னர் இதை அப்படியே மாற்றிக்கொள்ள முயன்றேன். அதன் விளைவே நான் இன்றைக்கு கற்றிருக்கும் ஹிந்தி. டெல்லியில் இருந்த கடைசி சில மாதங்களில்(2003) எல்லாமே ஓரளவிற்கு சமாளிக்கக்கூடிய அளவில் ஹிந்தி பேசினேன்.
 
பெங்களூரிலோ அல்லது புனேயிலோ பார்க்காத ஒன்று(இந்த விளையாட்டிற்கெல்லாம் தமிழ்நாட்டை நான் சேர்த்துக் கொள்ளவேயில்லை) டெல்லியில் பார்த்தேன், தப்பும் தவறுமாக ஹிந்தியில் பேசினாலும் புரிந்து கொண்டு சிரித்து கேவலப்படுத்தாமல் அதே சமயத்தில் நம்மை ஊக்கப்படுத்தும் மனப்பான்மை அது. நான் ஓட்டை(ரவிக்கு மட்டும் இது உழுந்த வடை கிடையாது!) ஹிந்தி பேசிக்கொண்டிருக்கும் பொழுது என்னை கேவலப்படுத்தியிருந்தால் என் ஈகோவிற்கு நான் ஹிந்தி பக்கம் கூட தலைசாய்த்திருக்க மாட்டேன். எங்கையோ போய்ட்டேன்; என் நண்பர்கள் உன் இந்தி இப்ப நல்லாயிருக்கு என்று சொன்னதும் எனக்கு தலை கால் புரியவில்லை. இப்பொழுதும் சில பல தவறுகள் செய்வேனாய்த்தான் இருக்கும் ஆனால் என் ஆரம்ப கால ஹிந்தியுடன் ஒப்பிட்டு அவர்கள் சொன்னது எனக்கு சந்தோஷத்தைத் தந்தது. இது எல்லாம் இப்பொழுது எப்படி நினைவில் வந்ததென்றால், ஒரு தமிழ் நண்பரும் ஹிந்திக்காரனும் இருக்கும் கேபினில் போய் என்னமோ கேட்டுக் கொண்டிருந்தவன் சட்டென்று சொன்ன "நான் என்ன கேக்க ஜாத்தாவுன்னா?" என்று பொதுவில் கேட்க பக்கத்தில் உட்கார்ந்திருந்த தமிழ் தெரிந்த கன்னட நண்பன் ஒருவன் சிரி சிரியென்று சிரித்ததும் தான் நான் செய்தது என்ன என்பது புரிந்தது.
 
------------------
 
சமீபத்தில் கேட்ட ஹேமா சின்ஹாவிற்கு கல்யாணம் ஆய்டுச்சாம் என்ற வரிகளில், சட்டென்று சின்னதாய், இதயம் இருக்கும் இடத்தில் ஏதோ ஒன்று உடைந்து நொறுங்குவதைப் போல் உணர்ந்தது என்ன மாயை என்று புரியவில்லை. எனக்கே அதை நினைத்ததும் சிரிப்பாய் வந்தது, அவளுக்கு இன்னமும் கல்யாணம் ஆகலை என்றாலும் ஏன் அப்படி உணர்ந்தேன் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். நண்பரொருவர் சினிமாவில் சேர்வதில் உனக்கு விருப்பம் உண்டா(ஏதாவது ஒரு வகையில் நடிகனாக மட்டுமல்ல, கதை வசனம் எழுத, இயக்க, ஒரு சீனில் வந்து தலைகாட்டி விட்டுப் போக) என்று கேட்ட பொழுது நான் முற்றிலுமாக மறுத்து இல்லை என்று சொல்ல, சினிமா நடிகைகளுக்காகவாவது செய்வேய்யா நீ என்று சொல்ல, நான் சினிமா நடிகைகள் பற்றி சொன்ன கருத்தில் கடுப்பாகிப் போய். நீங்க ஒரு "Misogynist" என்று சொல்லி புது வார்த்தை ஒன்றை அறிமுகப்படுத்தினார். நான் அவரிடம் என்னுடைய சினிமா நடிகைகள் பற்றிய கருத்து 'இவ்வளவுதான்' என்று சொன்னேன்.
 
----------------
 
இன்னொரு நண்பர் ஒருவருடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கும் பொழுது கோணங்கியின் 'இருள்வ மௌத்திகம்' பற்றிய பேச்சு வந்தது. அந்த புத்தகத்தை நான் தேடிக்கொண்டிருப்பதாய்ச் சொன்னது பாவமாய் உச்சுக் கொட்டியவர், என்னைப் பார்த்து பரிதாபப்பட்டார் 'உன் நிலைமை இப்படி ஆய்டுச்சே' என்று. இருள்வ மௌத்திகம் என்றால் இருளில் முத்து என்றோ இருள் முத்து என்றோ இருளில் ஒளிரும் முத்து என்றோ பொருள் சொல்லலாம். ஒரு காலத்தில் எப்படி வேகவேகமாக நகரும் கதைகளின் மீது அதீத ஆர்வம் இருந்ததோ அப்படியே இப்பொழுதெல்லாம் வாசகனை ஒவ்வொரு சொல்லிலும் அதிர்ச்சியடைய ஆச்சர்யப்பட வைக்கக்கூடிய பிரதிகள் மீதான ஆர்வம் அதிகமாய் இருக்கிறது. 'இருள்வ மௌத்திகம்' சக்க தீனியாய் இருக்கும் என்று நினைக்கிறேன் எதிர்பார்க்கிறேன். நண்பர் சிரிக்கச் சிரிக்க கோணங்கி பற்றியும் புத்தகத்தையும் பற்றியும் தலைப்பைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார்.
 
-----------------
 
வெகுசில சமயங்களிலேயே தமிழ்ச் சினிமா ஹீரோயின்களை ஆரம்ப படத்தில் இருந்தே கவனிக்காமல் விட்டுவிட்டோமே என்று நினைத்திருக்கிறேன். அதில் கடைசியில் சேர்ந்தது
 

 
'குத்து' ரம்யா ச்ச 'பொல்லாதவன்' திவ்யா பொல்லாதவனின் 'எங்கேயும் எப்போதும்' பாடல் பார்த்ததில் இருந்தே இந்த உணர்வு இருந்தது. இடையில் அர்ஜூனின் படம் ஒன்று போட்டார்கள் சன் டிவியில் அதில் பார்த்ததும் என்னுடைய அந்த மேற்சொன்ன உணர்வு அதிகமானது.
 
-----------------
 
விகடனில் ப்ரொஃபைல் அப்டேட் செய்யச் சொல்லி கேட்டிருந்தார்கள், ரொம்பக்காலமாய் ஸ்கிப் செய்துகொண்டு போயிருந்தேன். சரி அப்டேட் செய்வோம் என்று நினைத்து பத்து பதினைந்து நிமிடங்கள் எடுத்துக் கொண்டு செய்தேன். மொக்கை மொக்கை பெரும் மொக்கை கடைசியில் ஒப்புக்கொள்ளாமல் மட்டுறுத்தப்பட்டுள்ளது. நானும் தயவு தாட்சண்யம் பார்க்காமல் மட்டுறுத்துபவன் என்ற முறையில் பிரச்சனையில்லை, ஆனால் இவர்கள் இப்படிச் செய்வார்கள் என்று தெரிந்திருந்தால் அந்த பத்து பதினைந்து நிமிடங்களை வேஸ்ட் செய்திருக்க மாட்டேன்.
 
ப்ரொபைல் அப்டேட் செய்தது எப்படி என்பதற்கு சில உதாரணங்கள்.
 
விகடனில் பிடித்தது: இலக்கியம் பகுதியில் இடம் பெறும் 'முடியலத்துவம்'
 
பிடித்த கலாச்சாரம் : சர்வ நிட்சயமாய் தமிழ்க் கலாச்சாரம் இல்லை.
 
இப்படி...
 
----------------------------------
 
 

Related Articles

6 comments:

 1. //விகடனில் பிடித்தது: இலக்கியம் பகுதியில் இடம் பெறும் 'முடியலத்துவம்'//

  நச்சுன்னு இருக்கு உங்க மொக்கை

  ReplyDelete
 2. அனானிமஸ் நன்றிகள்.

  ReplyDelete
 3. எக்ஸ்கியூஸ் மீ, ஏன் இந்த கொலைவெறி ??

  மகா மொக்கையா இருக்கே !!!!

  ReplyDelete
 4. ரவி உங்களுக்கான விடை இந்தப் பதிவில் இருக்கு

  http://imohandoss.blogspot.com/2008/01/blog-post_25.html

  நன்றி.

  ReplyDelete
 5. கடவுளே... உங்க போதைக்கு நான் ஊறுகாயா... :)

  ReplyDelete
 6. இதை நீங்க இப்பத்தான் படிக்கிறீங்களா?

  சரியாப்போச்சு!

  ReplyDelete

Popular Posts