In நாட்குறிப்பு

'சாட்டிங்' அரசியல் பற்றி சில வார்த்தைகள்

தமிழ்மணத்தின் சில பதிவுகள் படிக்க நேர்ந்தது, மனதை சில நாட்களாய் அரித்துக் கொண்டிருக்கும் சில விஷயங்களைப் பற்றி எழுதி தீர்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து சில வரிகள்.

பொதுவாக நான் சாட்டிங் செய்யும் நபர்கள் மிகக்குறைவு, ஏனென்றால் பதிவுலகைப் போலில்லாமல் சாட்டிங்கில் பேசும் பொழுது நடுநிலை ஜல்லி பெரும்பாலும் அடிக்க முயலாமல் நான் நினைப்பதைச் சொல்லிவிடுவேன் என்பதால் தான். அப்படிச் சாட்டிங் செய்யும் நபர்களைத் தேர்ந்தெடுப்பதும் கொஞ்சம் போல் யோசித்து தான். ஆனால் வாழ்க்கையின் எல்லா சமயங்களிலும் நாம் நினைப்பது நடந்துவிடுவதில்லை இல்லையா? என்னுடன் நண்பர்களாகயிருக்கும் அனைவருக்கும் கொஞ்சம் போல் என்னுடைய பர்ஸனல் வாழ்க்கை முதற்கொண்டு எதையும் மறைக்காமல் சொல்லும் பழக்கம் உண்டு, சிலசமயம் இது ரொம்ப மோசமாகி 'சுயதம்பட்டம்' என்று சொல்லும் அளவிற்கு நண்பர்கள் நினைப்பதுண்டு. ஆனால் என்னிடம் நேரில் நீங்கள் பேசினால் எதை என்னிடம் இருந்து பெறுவீர்களோ அது உங்களுக்கு சாட்டிங்கில் கிடைக்கும். ஒரு நன்கு தெரிந்த நண்பனொருவன் சொல்லும் செய்திகள் 'சுயதம்பட்டமாக' நமக்குப் படுவதில்லை குறைந்தபட்சம் எனக்கு. எனவே என்னுடன் சாட்டிங்கில் பேசுபவர்களிடம் அப்படி வெளிப்படுமாயிருக்கும்.

ஆனால் மிகச் சமீப காலமாக சாட்டிங் செய்யவே பயப்படும் நிலைக்கு ஆளானேன், நான் மிகவும் மதிக்கும் சில நபர்கள் கூட நான் அவர்களுடன் சாட் செய்த விஷயத்தை பொதுவில் வைத்து பேசியிருந்தார்கள். நிச்சயமாய் நான் யாருடனும் சாட் செய்த எதையும் பொதுவில் வைப்பதைப் பற்றி எனக்குப் பிரச்சனையில்லை தான் ஆனால் ஒரு வார்த்தை என்னிடம் கேட்டுவிட்டுச் செய்திருக்கலாம். பின்நவீனத்துவம் பேசுகிறோம் 'author is dead' என்று சொல்கிறோம் ஆனாலும் பர்மிஷன் கேட்கச் சொல்கிறேனே என்றால், பொதுவில் வைக்கும் பொழுது படிக்கும் அனைவரும் post modernist ஆகயிருப்பதில்லையே அதுதான் பிரச்சனை. அப்படிக் கேட்காமல் போட்ட பிறகு அந்த நபருடன் திரும்பவும் சாட்டிங்கில் பேசுவது என்பது என்னால் இயலாமல் போய்விடுகிறது. ஏனென்றால் பின்னர் நான் எது பேசினாலும் அது politically correctஆன வார்த்தைகளாகவும் சொற்றொடர்களாகவும் தான் இருக்கும், எங்கே இந்த நபர் திரும்பவும் போட்டுக் காண்பிச்சிருவாருன்னு! அது நாடகம் ஆகிவிடுவதால் அதைச் செய்வதற்கு பதில் அவருடன் உரையாடல் செய்யாமலே இருந்துவிடுதல் நலம் என்று நினைக்கத் தோன்றுகிறது.

இதில் கொடுமையிலும் கொடுமை என்னவென்றால் அப்படி பொதுவிலும் வைக்காமல் ஒரு குழுவாக பார்த்து அனுப்பி எழுதியதைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பது. என் கேள்வியெல்லாம் அப்படி ஒரு transcript உங்களுக்கு வருகிறதென்றால் நீங்கள், அந்த அனுமதி வாங்காமல் போடும் சாட்டிங் மெஸேஜைப் பற்றி அதை போட்டுக் கொண்டிருப்பவருக்கு கேள்வி கேட்க மாட்டீர்களா? ஏன்யா இப்படிப் போடுகிறீரே இது சரியா? எழுதியவரிடம் கேட்டீரா இப்படிப் போடப்போகிறோம் என்று? அதைப் பற்றி நாம் பேசும்/பேசப்போகும் விஷயங்கள் அவருக்கு அனுப்பி வைப்பீர்களா என்று. குறைந்தபட்சம் இப்படிச் செய்வது தவறு என்றாவது! ஆனால் இப்படிப்பட்ட விஷயத்தை நமக்கு நன்றாய்த் தெரிந்த நண்பர்களே செய்யும் பொழுது வருத்தமாகத்தான் இருக்கிறது. எழுதும் கருத்தை மட்டும் எடுத்துக் கொண்டு எழுதியவனை விட்டுவிடும் அளவிற்கு நமது சமுதாயம் வளர்ந்துவிட்டால் யாரிடமும் எந்தக் கேள்வியும் கேட்காமல் இதைச் செய்யலாம். ஆனால் முட்டுச் சந்துக்குள் ஆயிரம் அரசியல் செய்யும் நமக்கு அதெல்லாம் நடக்க ரொம்ப காலம் ஆகும்.

இங்கு யாரையும் பெயர் குறிப்பிட்டு சொல்லவில்லை தான் சொல்வதில் எனக்கு எந்தப் பிரச்சனையும் கிடையாது ஆனால் குறைந்தபட்ச நாகரீகம் கருதி அதை நான் செய்யவில்லை.

Related Articles

10 comments:

 1. மோகந்தாஸ் அய்யா!

  ஒரு முறை பில்லா படம் பற்றி நாம் சாட்டிங்கில் சண்டை போட்டதை அமுக பதிவில் போட்டேனே? அதற்காகவா இந்தப் பதிவு? :-(

  அதுகூட அனுமதி பெற்று போட்டதாக தானே நினைத்துக் கொண்டிருக்கிறேன்! :-((((

  ReplyDelete
 2. நல்ல நாகரீகம் ஐயா. அதை அவர்களிடம் சுட்டியிருந்தால் இன்னும் நாகரீகமாக இருந்திருக்கும். ஓ பதிவர்களுக்கு அறிவுரை சொல்ல முடியாமப் போயிடுமோ.

  ReplyDelete
 3. லக்கிலுக்,

  //அதுகூட அனுமதி பெற்று போட்டதாக தானே நினைத்துக் கொண்டிருக்கிறேன்! :-((((//

  நானும் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன் :) அதனால் இது உங்களைப் பற்றியது அல்ல!

  ReplyDelete
 4. அனானிமஸ்,

  அறிவுரை சொல்றதுதான் மேட்டர் என்று அதை எழுதலை என்றாலும் அதுவும் உள்குத்தாக இருக்கிறது போலும்.

  ReplyDelete
 5. அதை அவர்களிடம் சுட்டியிருந்தால் இன்னும் நாகரீகமாக இருந்திருக்கும்

  **

  இதைச் செஞ்சும் பதிவு போடலாமே

  ReplyDelete
 6. அனானி,

  என்னுடைய குறைந்த பட்ச நாகரீக எல்லைக்குள் நீங்கள் குறிப்பிட்டது வரவில்லை.

  அதற்கான தகுதி எல்லையை விட்டு வெளியில் அவர்கள் இருப்பதாக நான் நினைக்கிறேன். புரியுதா?

  ReplyDelete
 7. //அதற்கான தகுதி எல்லையை விட்டு வெளியில் அவர்கள் இருப்பதாக நான் நினைக்கிறேன். புரியுதா?//

  அவர்கள்னா யாரந்த அவர்கள்?

  தனிமடலிலாவது சொல்லவும். Curiosity is killing me :-)

  ReplyDelete
 8. மோகன் தாஸ்,

  பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். அபி அப்பா போஸ்ட்-ல பார்த்தேன். :-)

  ReplyDelete
 9. அட, இவ்வளவு பெரிய பதிவு போட்டுட்டு யாருன்னு சொல்லலைன்னா எப்படிங்க? அது நாந்தான். மன்னிச்சுருங்க. காரணம் கேட்டு பின்னூட்டம் வந்தா சொல்லுங்க.. அந்த சாட் ஸ்கிர்ப்டை போட்டு தனியாவே மன்னிப்பு கேட்டுகிறேன்

  ReplyDelete
 10. Hearty Wishes to ur B'day!

  ReplyDelete

Popular Posts