In நாட்குறிப்பு

பெங்களூரு பெர்னார்டோ பெர்ட்டோலுச்சி அஞ்சாதே ஃபார்வேர்ட் மெயில் எண்கள் BSE NSE சுஜாதா சிறுகதைகள் pdf photos ஜல்லி

பெங்களூரு பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கிறது, வண்ண வண்ணப்பூக்களுடன் வசந்த காலம் என்று நினைக்கிறேன். மஞ்சள், ஊதா, சிகப்பு, வெள்ளை நிறப்பூக்களுடன் தினமும் உணவருந்தச் செல்லும் அல்சூர் ஏரியை ஒட்டிய சாலை மனதை ரம்மியப்படுத்துகிறது. அதைப்போலவே சீதோஷனநிலையும், உடலை வருத்தாத மெல்லிய குளிருடன் பெங்களூரு தன் கோடைக்காலத்திற்காகத் தயாராகிவருகிறது. அல்சூரும் மகாத்மா காந்தி சாலையும் இணையும் இடத்தில் புதிதாய் ஒரு தியேட்டர் வந்திருக்கிறதாம், கடைசி சில மாதங்களாகவே வாரக்கடைசி கொஞ்சம் பிஸியாய் இருந்ததால் இந்த வாரம் சென்றுவரலாம் என்றொரு உத்தேசம் இருக்கிறது.

பெர்னார்டோ பெர்ட்டோலுச்சியின் The Last Emperor படம் ரொம்பக் கால தேடலுக்குப் பிறகு கிடைத்தது, Last Tango In Paris மற்றும் The Dreamers புகழ் பெர்ட்டோலுச்சியின் படமா என்ற ஆச்சர்யத்தைக் கிளப்பினாலும் அருமையான படம் பார்த்த நிறைவைத்தந்த படம். 9 ஆஸ்கர் விருதுகள் பெற்றது, Best Picture, Best Director உள்ளிட்டு. இந்தப்படத்தை அப்படியே தொடர்ந்து கொஞ்சம் தேடிக்கொண்டிருக்க சீனாவைப் பற்றிக் கொஞ்சம் படிக்க முடிந்தது. Last emperorன் கடைநிலை மனிதனாக transformation மிக அற்புதமாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. நேரம் கிடைத்தால் இதைப் பற்றியும் கொஞ்சம் எழுத ஆசை.

இதே இயக்குநரின் Stanley Kubrick's The eyes wide shut படமும் எடுத்துவந்தேன் இந்த முறை, ஒரு முறை பெர்ட்டோலுச்சி ஸ்டான்லி க்யூப்ரிக் இந்தப்படத்தை piece of shit என்று சொன்னார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்(அது உண்மை/இல்லை என்று வாதங்கள் உண்டு). ஆனால் டாம் க்ரூயிஸ்/நிக்கோல் கிட்மன் நடித்த இந்தப்படம் சொல்லும் கதை ரொம்பநாளா எனக்குள் ஒரு சிறுகதை/தொடர்கதைக்கான தீமாக இருந்து வந்தது. ரொம்ப காலம் முன்பு டாம் க்ரூயிஸ் 'நடித்த' படத்தில் சேர்க்கலாம் என்று நினைக்கிறேன்; நிக்கோல் கிட்மன் pot அடிச்சிட்டு பேசும் ஒரு இரவுக் காட்சியில் படம் காண்பிக்கிறார். பெர்ட்டோலுச்சியின் Kubrick's டச் மிஸ்ஸிங் என்றாலும் நன்றாகத்தான் இருக்கிறது இந்தப் படம்.

அஞ்சாதே பார்த்தேன்! ஏற்கனவே ஏகப்பட்ட ரிவ்யூக்கள் எழுதி படம் கிழிக்கப்பட்டுவிட்டதால் என்னுடைய 2 cents மட்டும். நிச்சயமாய் பிரசன்னாவைப் பாராட்ட வேண்டும் துணிந்து இப்படிப்பட்ட ஓரு கேரக்டரில் நடித்ததற்கு. குத்துபாட்டு, ட்ரீம் சாங்க், க்ளைமாக்ஸ் ஃபைட் என்று கோலிவுட்டிற்குத் தேவையான அத்தனை மசாலாக்களுடன் தயாரிக்கப்பட்டாலும் கொஞ்சம் இயல்பாய் எடுத்தால் எப்படி படம் வித்தியாசப்படும் என்பதற்கு இந்தப்படம் ஒரு உதாரணம். உண்மைத்தமிழனுக்கு No country for old manன் வெற்றிக்கு மிகமுக்கியமான ஒரு காரணம் படத்தின் எந்த நிமிடத்திலும் நிஜத்தில் இதுபோல் நடக்கமுடியாது என்ற எண்ணமே வராமல் கொண்டு செல்வதுதான் என்று சொல்லிக் கொள்கிறேன்.

வெகுசீக்கிரம் நான் பிஸ்ட் ஆஃப் ஆவதில்லை, ஆனால் சில சமயங்களில் ஃபார்வேர்டாக வரும் மெயில்கள் என்னை அந்த நிலைக்கு கொண்டு போய் தள்ளிவிடுவதுண்டு. அப்படி இன்றைக்கு வந்த ஒரு மெயில் ஆனால் அதை வெளியில் விட்டு பிரபலப்படுத்த வேண்டாம் என்ற எச்சரிக்கை உணர்வுடன் தவிர்த்துவிட்டேன். :)

எண்கள் இப்பொழுது பெரிய அளவில் கனவில் வந்து தொந்தரவு செய்கின்றன, பத்தாவது பன்னிரெண்டாவது படித்த பொழுது மாதத்தேர்வு முடிந்ததும் அந்த மாதம் பெற்ற மதிப்பெண்கள் கனவில் வந்து கிலியை ஏற்படுத்தியதுண்டு. கல்லூரியில் கொஞ்ச காலம் வரை பர்சன்டேஜ் என்கிற ஒரு நம்பர் உங்கள் அடையாளமாகவே இருக்கும் எனக்கும் இருந்திருக்கிறது. 60+, 70+ என்று அந்த நம்பரும் வந்து அடிக்கடி பயமுறுத்தும் இப்பொழுதெல்லாம் ட்ரேடிங்க் எண்கள், ரிலையன்ஸ் பெட்ரோலியம் 160 வாங்கினமா 170க்கு விக்கணும் நாளைக்கு 175க்குப் போகுமா தெரியலையே? நம்முடைய பாரதி ஏர்டெல் ஸ்டாக்ஸ் 860களில் இருக்கே இப்போ பொத்துன்னு விழுந்து 800களில் ஊசலாடுதே பேசாம 800க்கு வித்துட்டு நஷ்டத்தை புக் பண்ணிக்கலாமா? ரிலையன்ஸ் நேட்சுரலஸ் 94க்குப் போச்சுதே அப்ப வாங்கியிருக்கலாம் இன்னும் கம்மியாகும் என்று பார்த்திருக்க வேண்டாம் என்று, கனவில் BSE, NSE, Sensex, Nifty எண்கள் வந்து பெரும் கழுத்தறுப்பைச் செய்கிறது. யாரும் ரிச்சர்ய்ட் கி(ய்)ர் நடித்த Bee Season பார்த்திருக்கிறீர்களா, அந்தப்படத்தில் வரும் பெண்ணிற்கு எழுத்துக்கள் தோன்றுவது போல இப்பொழுதெல்லாம் கண்களை மூடினால் எனக்கு எண்கள் தோன்றுகிறது. Bee Season பார்த்துக் கொண்டிருந்த பொழுது எனக்கு Searching for bobby fischer படம் தான் நினைவில் வந்தது. இன்னொரு முறை பார்க்கணும் போல் இருக்கிறது கவிதை மாதிரியான படம் அது.

சுஜாதாவுடைய சிறுகதைகள் தொகுப்பை writersujatha.com வெளிவிட்ட பொழுது வாங்கியிருக்கிறேன். esnipsல் போட்டு வைத்த நினைவு மட்டும் இருந்தது. இன்று எதேட்சையாக தேடிக்கொண்டிருந்த பொழுது கிடைத்தது மொத்தத்தையும் போட்டிருந்தேனா இல்லை கொஞ்சம் மட்டும் போட்டிருந்தேனா நினைவில் இல்லை. இங்கே கிடைக்கும்.

இடையில் ஒரு முறை வேடந்தாங்கல் வந்திருந்த பொழுது எடுத்தப் படம்காஷ்மீர் பயணத்தின் பொழுது, ஸ்ரீநகரில் இருந்து ஜம்மு காரிலோ, பஸ்ஸிலோ வர ரொம்பவும் பயந்து போய் ப்ளைட்டில் வந்தேன் அப்பொழுது ஏர் ஹோஸ்டஸ்களை சரியாக வெறுப்பேற்றி, எடுத்த காஷ்மீர் Lanscape ஒன்று

Kashmiri Mountains

காஷ்மீர் பற்றி எழுத வேண்டியது ஒன்று பாக்கியிருக்கிறது, No country for old man எழுதணும், Hampi போய் வந்து ஏகப்பட்ட படங்கள் இருக்கு அதற்கு ஒரு பதிவு எழுதணும் ம்ஹூம் நேரம் சுத்தமாகயில்லை. ஏகப்பட்ட வேலை. ஒரு வாரத்திற்கு ஒரு பதிவு கூட போடலைன்னு நினைச்சா ரொம்ப சந்தோஷமாயிருக்கு இது என்ன வியாதின்னு தெரியலை!

Related Articles

19 comments:

 1. மோகன் தாஸ் .. காஷ்மீர் புகைப்படங்கள் அட்டகாசம் .. அதிலயும் இந்த படம் .. மனசை கொள்ளை கொல்லுது .. முழு படத்தையும் குடுத்திருக்கலாம் ..

  ReplyDelete
 2. மோகன்

  கோடை காலம் பற்றிய பயம் பூக்களைப் பற்றி நினைச்சவுடனே பறந்து போயிடுச்சி..பூக்கத் துவங்கும் காலம் ஏப்ரல் மே தான நல்லவேளை ரொம்ப பயந்திட்டு இருந்தேன் :)

  The last emperor எனக்கும் பிடிச்ச படங்களில ஒண்னு..அப்புறம் eyes wide shut ஐ இயக்கினது stanely kubric..அவரோட கடைசிப் படம் இது... முடிக்கும் முன்பே இறந்து போயிட்டதால spielberg முடிச்சி கொடுத்தாராம்..

  இப்படி கசாமுசா ன்னு ஓடுற சிந்தனைகள் அப்படின்னா எனக்கு நினைவுக்கு வர்ரது eternal sunshine of spotless mind படந்தான் ..செம படம் இல்ல அது ...

  ReplyDelete
 3. அய்யனார்,

  ஆமாம் அது ஸ்டான்லி க்யூப்ரிக், எழுதும் பொழுது நடந்துவிட்ட தவறு.

  இல்லை ஐய்ஸ் வைட் ஷட் முடித்துவிட்டுத்தான் இறந்தார்.

  ஸ்பீல்பெர்க் இயக்கியது AI படம்.

  மாற்றிவிடுகிறேன்.

  ReplyDelete
 4. மதி,

  அய்யனார் சொன்னார். மாத்தியிருக்கிறேன்.

  Sorry for the Typo, டீம்லீடர் இப்ப பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறார் அதனால் அவர் பார்க்காதப்ப டைப் பண்ணுவது கொஞ்சம் கஷ்டமாகயிருக்கிறது.

  ReplyDelete
 5. யாத்ரீகன்,

  நன்றிகள்.

  படம் இப்ப பெரிசா வருதா பாருங்க. அங்கே க்ளிக் செய்தால் ப்ளிக்கர் போகும் அதில் பெரிய படம் பார்க்கலாம்.

  ReplyDelete
 6. யாத்ரீகன்,

  அப்படித்தான் இப்ப செய்திருக்கிறேன் பாருங்க, இரண்டாவது தடவையும் ஒரு தவறு நடந்துவிட்டது முழுபடத்தின் லிங்கைப் ப்ளாக்கில் போட்டுவிட்டேன்.

  இப்ப சரியா போட்டிருக்கேன்.

  இப்ப அந்த புகைப்படத்தில் க்ளிக்கினால் ப்ளிக்கருக்குப் போகும். போகுது!

  ReplyDelete
 7. //
  BSE, NSE, Sensex, Nifty எண்கள் வந்து பெரும் கழுத்தறுப்பைச் செய்கிறது. யாரும் ரிச்சர்ய்ட் கி(ய்)ர் நடித்த Bee Season பார்த்திருக்கிறீர்களா, அந்தப்படத்தில் வரும் பெண்ணிற்கு எழுத்துக்கள் தோன்றுவது போல இப்பொழுதெல்லாம் கண்களை மூடினால் எனக்கு எண்கள் தோன்றுகிறது.
  //

  மொதல்ல அப்பிடித்தான் இருக்கும்


  அப்புறம்

  அப்புறம்

  அப்புறம்  பழகிப்போயிடும்

  :))))))

  ReplyDelete
 8. //இல்லை ஐய்ஸ் வைட் ஷட் முடித்துவிட்டுத்தான் இறந்தார்.//

  Kubrick died before Eyes Wide Shut was complete. Tom Cruise finished it - literally and figuratively.

  ReplyDelete
 9. மோஹன்,
  நீரின் மீது பறக்கும் பறவையின் நிழலும் சேர்ந்து படத்தில் வரும்படி எடுத்திருப்பது அருமை, அனேகமாக அப்பறவை painted stork or flamingo ஆக இருக்கும் என நினைக்கிறேன்.

  வேடாந்தாங்களிள் உள்ள டவரில் இருந்தா இப்படி ஏரியல் வியூ கிடைக்கிறது? ஆச்சரியம் தான்.

  ReplyDelete
 10. //இதே இயக்குநரின் Stanley Kubrick's The eyes wide shut படமும் எடுத்துவந்தேன் இந்த முறை, ஒரு முறை பெர்ட்டோலுச்சி ஸ்டான்லி க்யூப்ரிக் இந்தப்படத்தை piece of shit என்று சொன்னார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்//

  பெர்ட்டோலுச்சி ஸ்டான்லி க்யூப்ரிக் ஐ வழிமொழிகின்றேன். நிக்கோல் ஜோடி, பகவத் கீதா ஸ்லோகம், குழப்பம் என்று தூவியிருந்தார்.
  பெர்ட்டோலுச்சி ஸ்டான்லி க்யூப்ரிக் ஐ வழிமொழிகின்றேன். நிக்கோல் ஜோடி, பகவத் கீதா ஸ்லோகம், குழப்பம் என்று தூவியிருந்தார்கள். தியேட்டருக்கு வந்தபோதே பார்த்திருந்தேன், மகா இயக்குனர்கள் சிலரின் அந்திம காலப்படங்கள் குழப்பமாகத்தான் இருக்குமோ.


  தியேட்டருக்கு வந்தபோதே பார்த்திருந்தேன், மகா இயக்குனர்கள் சிலரின் அந்திம காலப்படங்கள் குழப்பமாகத்தான் இருக்குமோ.

  ReplyDelete
 11. Anony,

  //Kubrick died before Eyes Wide Shut was complete. Tom Cruise finished it - literally and figuratively.//

  இது விக்கிபீடியாவில் கொடுக்கப்பட்டிருக்கும் ஸ்டான்லி க்யூப்ரிக்கின் மரணம் பற்றிய பத்திகள்.

  Death

  In 1999, four days after screening a final cut of Eyes Wide Shut for his family, the lead actor and actress, and Warner Brothers executives, the seventy-year-old director Stanley Kubrick died of a heart attack in his sleep. He was buried next to his favorite tree in Childwickbury Manor, Hertfordshire, England, U.K.[5]

  ReplyDelete
 12. சிவா,

  :)

  வவ்வால்,

  ஆமாம் சரியாகச் சொன்னீர்கள் இது டவரில் இருந்து பிடித்ததுதான். என்னிடம் அந்த தடவை இருந்தது பெரிய ஸூம் உடைய லென்ஸ் அல்ல. இந்தப்படமும் முழுவதுமாக crop செய்யப்பட்டது.

  ReplyDelete
 13. பிரபா,

  piece of shit என்று சொன்னது எடுத்த டைரக்டர் தான், பெர்ட்டோலுச்சி இல்லை அது typo.

  அதுமட்டுமல்லாமல் ஸ்டான்லி க்யூப்ரிக் அப்படிச் சொல்லவில்லை என்றும் சொல்கிறார்கள்.

  ReplyDelete
 14. //உண்மைத்தமிழனுக்கு
  No country for old manன் வெற்றிக்கு மிகமுக்கியமான ஒரு காரணம்,

  "படத்தின் எந்த நிமிடத்திலும் நிஜத்தில் இதுபோல் நடக்கமுடியாது என்ற எண்ணமே வராமல் கொண்டு செல்வதுதான்"

  என்று சொல்லிக் கொள்கிறேன்.//

  தம்பீபீபீபீபீபீபீ..

  உன் கருத்துப்படி இந்தப் படம் நிஜமா நம்ம கண்ணு முன்ன நடக்குற மாதிரி கொண்டு போயிருக்காங்கன்னு சொல்ல வர்ற.. கரெக்ட்டு.. ஒத்துக்குறேன்..

  அந்தப் பணம் என்னாச்சு? மோஸ் என்ன ஆனான்..? இந்தக் கதையின் ஷெரீப்பின் பங்கு என்ன என்பது பற்றி எனக்குத் தெரியல ராசா..

  விரிவான பதிவை எப்பப் போடுவ..?

  ReplyDelete
 15. உண்மைத் தமிழன்,

  சரி உங்களுக்காக சுருக்கமா எழுதப்பார்க்கிறேன் ஒரு தடவை.

  படத்தில் மோஸ் இறந்துவிடுகிறான், அந்த ஹோட்டலில் இறப்பது அவனே! அது போல் கடைசியில் அவன் மனைவியிடம் பேசிவிட்டு வெளிவரும் பொழுது அவன் ஷூவைப் பார்க்கிறான் இல்லையா? அதற்கு முந்தைய காட்சியொன்றியில் கொலையானவனின் இரத்தம் தன் கால்களில் பட்டுவிடக்கூடாது என்று கால்களைத் தூக்கி மேலே வைப்பான்.

  அதனால் அவன் மோஸின் மனைவியையும் கொன்றதாகச் சொல்லலாம் இதன் மூலம் பணம் Anton Chigurhற்கு போகலை என்று வைத்துக் கொள்ளலாம்.

  ஷெரிஃபின் வேலை என்ன என்பது தான் தலைப்பில் வருது பாருங்க No country for old man, படம் முடியும் பொழுது ஷெரிஃப் தான் ரிட்டய்ர்ட் ஆகப்போவதாகச் சொல்கிறார்(ஆகிவிட்டு அவர் மனைவியுடன் கடைசியில் பேசுவார்.)

  அவருக்கு தன்னால் அந்தச் சமூகத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்துவிடமுடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அது கடைசியில் அப்படியில்லை என்று சொல்கிறார் இயக்குநர். இதற்கு கடைசியில் Chigurh உயிருடன் தப்பிப்பது ஒரு உதாரணம்.

  படத்தில் நிறைய இடங்களில் என்ன நடந்திருக்கும் என்று உங்களை ஊகிக்கும் படி விட்டிருப்பார்கள், முதல் கடத்தல் பண்ட மாற்றத்தையே எடுத்துக் கொள்ளுங்களேன்.

  எனக்கு இந்தப் படத்தில் மிகவும் பிடித்திருந்தது Chigurhன் கதாப்பாத்திரமும் அதைக் கொண்டு சென்ற உத்தியும் தான். அவருடைய குரல் நடை உடை பாவனை எல்லாம் பிரமாதம்.

  Chigurh கெட்டவன், ஷெரிப் நல்லவர் ஆனால் இடையில் மோஸ் கதாப்பாத்திரம் நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் இடையில் ஊடாடும் ஒன்றாகப் படைக்கப்பட்டிருக்கிறது. மோஸின் கதாப்பாதிரமும் இதனால் முக்கியத்துவம் பெறுகிறது.

  ReplyDelete
 16. தம்பீ..

  உடனடி பதிலுக்கு மிக்க நன்றி..

  எனக்கும் சிகுர்த்தின் கேரக்டர் ஸ்கெட்ச் பிடித்திருந்தது. மிகச் சரியானப் பொருத்தமான தேர்வுதான் அந்த நடிகர்.

  இந்த இரட்டை இயக்குநர்களின் திரைப்படங்கள் அனைத்துமே இது போலத்தான் புரிந்து கொள்ள முடியாதவைகளாகத்தான் இருக்கும் என்று மதி கந்தசாமி அவர்களும், ஒரு அனானியும் எனது பதிவில் தெரிவித்தார்கள்.

  அயல்நாட்டுத் திரைப்படங்களில் பல்வேறுவிதமான நிலைகள் தென்படுகின்றன. அதில் துவும் ஒன்று என்று நினைத்துக் கொள்கிறேன்.

  மிக எளிமையாக புரிந்து கொள்ளக்கூடிய வகையில் வந்த திரைப்படங்களும் உண்டு. உதாரணம், அமெரிக்கன் பியூட்டி.

  இது மாதிரியும் சில திரைப்படங்களும் வருகின்றன.

  எல்லாமே திரைப்படத்துறையின் ஒரு வளர்ச்சியின் போக்குதான் எனில் சந்தோஷம்தான்..

  மீண்டும் ஒரு தேங்க்ஸ் தம்பி..

  ReplyDelete
 17. //piece of shit என்று சொன்னது எடுத்த டைரக்டர் தான், பெர்ட்டோலுச்சி இல்லை அது typo.//

  இருந்தாலும் எனது மன உணர்வும் பார்த்தபோது அப்படி இருந்ததைக் குறிப்பிட்டேன். நன்றி

  ReplyDelete
 18. The Dreamers சமீபத்தில்தான் பார்த்தேன். முழுவதுமாக அனுபவிப்பதற்கு 'சன்னாசி' போல் நிறைய படம் பார்க்கணும் போல!

  ReplyDelete

Popular Posts