In கொடசாத்ரி நாட்குறிப்பு புகைப்படங்கள் லொள்ளு

ங்கொய்யால

கேள்வி கேட்பவர் - சார்! சமீபத்தில் மோகன்தாசு கரம்சந்த் காந்தி செத்துப் போனதப் பத்தி உங்களுக்கு இருக்கிற மனவருத்தங்களைப் பதிவு செஞ்சீங்களே! ஏன்?

பதில் சொல்பவர் - காந்தி செத்துப் போனதப் பத்தி எனக்கு ஒரு ஒப்பீனியன் இருக்கில்லையா அதை என்ன செய்யறது. அதான் வைச்சேன்!

கே.கே - காந்தி செத்துப் போய் 60 வருஷம் ஆய்டுச்சே அதை இப்பத்தான் வைக்கணுமா?

ப.சொ - இங்கப் பாருங்க காந்தி செத்துப் போனதிலிருந்து நான் பிஸியா இருக்கேன் - ப்ளாக்கில் 'குசு' விட்டதையெல்லாம் எழுதும் அளவிற்கு எனக்கு நேரம் கிடையாது. பாருங்க. காந்தி செத்துப் போனது தெரியும். காந்தி செத்துப் போனதில் இருந்து வரும் விமர்சனங்கள் எல்லாம் படிச்சிட்டு வர்றேன். ஆனால் பிசியா இருக்கேனே, உங்கள மாதிரி வெட்டியாவா இருக்கேன் சொல்லுங்க.

கே.கே - அதுக்காக காந்தி சாவுக்கு வருத்தம் தெரிவிக்கிறது ஓவரா தெரியலையா உங்களுக்கு?

ப.சொ - யோவ்! தமிழ்ல தான சொல்றேன்! காந்தி செத்தது மனசை உறுத்துற விஷயம். அவர் மரணத்தோடு சம்மந்தப்பட்டு எனக்கான கொள்கைகள் இருக்கு. என்ன காரணமானாலும் அதை ஒதுக்க முடியாது. ஆயிரம் தான் காந்தியோட சில விசயங்களில் உடன்பாடு இல்லாட்டாலும் காந்தி சாவு வருத்ததிற்குரியது! அதுமட்டுமில்லாமல் நான் என்ன நினைக்கிறேன்னு பதிவு செய்து வைக்கணும் இல்லையா?

கே.கே - அதுக்காக அறுபது வருஷம் கழிச்சா?

ப.சொ - ங்கொய்யால, காந்தி செத்ததைப் பத்தி நான் என்ன நினைக்கிறேன் தெரிஞ்சிக்கிறதுக்கு என்னையறிந்த நண்பர்கள் எவ்வளவோ பேர் இருக்காங்க அவங்களுக்காகத்தான் வைக்கிறேன். வந்துட்டாங்க்ய கேள்வி கேட்டுக்கிட்டு.

PS: இப்பல்லாம் வாரத்துக்கு ஒரு பதிவு போடுறதுக்குள்ளையே நுரை தள்ளுது. இரண்டு மூணு மாசத்துக்கெல்லாம் பதிவே எழுதாம இருந்தா எப்படியிருக்கும் என்று யோசித்ததால் வந்த விளைவு. மேற்சொன்ன கற்பனை உரையாடல், யாரையும் குறிப்பிடுவதல்ல.

------------------------------


இடையில் வந்து மூன்று நாட்கள் இடைவெளியில் கொடசாத்ரி சென்று வந்தோம். கொடசாத்ரி பெங்களூரில் இருந்து 500 கிமீ இருவழி 1000 கி.மீ. ஊர் சுற்றுவது தான் எனக்கொன்றும் புதிதில்லையே, ஆனால் இந்த முறை  கொஞ்சம் மாற்றம் தோழர் Comet வாங்கியிருந்ததால் வெட்டியாக நின்று கொண்டிருந்தTB(Royal Enfield - Thunderbird (350 cc))யில் நீர் வாறீரா என்று கேட்டார். அதற்கு முன் ஒரு 1000 கி.மீ அவருடன் அந்த வண்டியில் சென்றிருந்தாலும் ஓட்டியதில்லை. அதுமட்டுமல்லாமல் 400D வாங்கியதில் இருந்து ரிஸ்க் எடுக்க பயந்து கொண்டு அவருடன் TBயில் போகக்கூட இல்லை. ஏனென்றால் இதுபோல் 1000 கிமீ காட்டு வழி பயணங்களில் கீழே விழுவது என்பதெல்லாம் சர்வ சாதாரணமானது. துடைத்துவிட்டுக் கொண்டு திரும்பவும் பில்லியனில் உட்கார்ந்து கொள்ள வேண்டும்.

நாம விழுந்தாலும் பரவாயில்லை காமெரா விழுந்தால் சரிவராது என்று தான் அவருடன் பயணம் மேற்கொள்ளவில்லை, ஆனால் இந்த ஆஃபர் நன்றாகயிருந்தது. என் சொந்த ரிஸ்கில் நான் TB ஓட்ட காமராவுடன் செல்ல வேண்டும் என்பது. சரி வண்டியக் கொடுங்க ஓட்டிப் பார்க்கிறேன் என்று சொல்லி வாங்கிவிட்டு இரண்டு கிமீ ஓட்டிப் பார்த்துவிட்டு 'வர்றேன் தல' என்று சொல்லி 1000 கிமீ ஓட்ட தயாரானேன். :) மூன்று நாட்களுக்கான உடைகள், வண்டிக்கான விஷயங்கள் எல்லாம் பையில், காட்டில் எங்கும் தங்க வேண்டி வந்தால் தங்குவதற்காக டெண்ட் ஒன்று. என்னுடைய ட்ரைபாட் எல்லாவற்றையும் கட்டியதும் ஒரு மஸ்த் லுக் வந்தது வண்டிக்கு.

பெங்களூரில் இருந்து குனிஹல், ஹசன், பெலூர், சிக்மகலூர், ஸ்ரீரிங்கேரி, ஆகும்பே, சோமேஷ்வர், கொல்லூர், கொடசாத்ரி, ஷிமோகா, பெங்களூர் என்று 1000 கிமீ தூர பயணம். ஆகும்பேயிலும், கொடசாத்ரியிலும் Travelers Bungalowவில் இரவு தங்கியிருந்தோம்.

இதில் குறிப்பிட வேண்டியது கொடசாத்ரி மலை அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்குப் போகும் 20 கி.மீ தொலைவு நான் TBக்கு புதியது என்பதால் என்னை கொல்லூரிலேயே வண்டியை விட்டுவிட்டு ஜீப்பில் வரச்சொல்லிவிட்டனர், இதில் தோழர் வேறு Cometஐக் கொண்டுபோய் மலைப்பாதையின் கொமட்டில் குத்தியதால், அவரும் வர இந்த அதிர்ச்சி நிகழ்வால் பாதிக்கப்பட்ட இன்னும் இரண்டு நபர்களும் ஜீப்பில் வர மொத்தம் கிளம்பிய ஏழு வண்டிகளில் கொடசாத்ரிக்கு ஏறியது மூன்று பைக்கள் தான். இன்னொரு Cometம், இரண்டு கரீஸ்மாக்களும். எனக்கு அந்த மலைப்பாதையில் வண்டியில் ஏறவேண்டும் என்பதெல்லாம் பெரிய ஆசை கிடையாது, ஆனால் மற்ற இரண்டு பல்ஸர் காரர்களுக்கும் அந்த ஆசை உண்டு ஆனால் வழிப்பாதையைப் பார்த்துவிட்டு இதிலெல்லாம் வண்டியை ஓட்ட முடியாது என்ற முடிவிற்கே வந்துவிட்டனர்.

சொல்லப்போனால் ஜீப்பில் உட்கார்ந்து கொண்டு அந்த மலை மேல் ஏறி கீழிறங்கியதே பெரிய விஷயமாய் பட்டது செய்து முடித்ததும். அசாத்திய திறமை இல்லாமல் அந்த மலையில் நடந்தே ஏறமுடியாது எனும் பொழுது டூவீலர் ஓட்டுவதோ ஜீப் ஓட்டுவதோ அசாதாரணம். ஏன் சொல்கிறேன் என்றால் நாங்கள் கொடசாத்ரி மலைமேல் ஏறி சன்செட் பாய்ண்டிற்கு போக அழுப்புப் பட்டுக் கொண்டு அங்கிருந்தே சன்செட் பார்த்துமுடித்த பிறகு வந்த ஒரு கும்பல் இரண்டு ஜீப்களிலும் ஒரு ஜிப்ஸியிலும் வந்தது. அதில் ஒரு ஜீப்பை ஓட்டிக் கொண்டு வந்தது ஒரு பெண்! மூன்று வருடங்களுக்கு எல்லாம் முன்பென்றால் உடனே கீழேயிறங்கி TBயை எடுத்துக் கொண்டு மேலே வந்திருப்பேன், ஆனால் இப்ப அதையெல்லாம் செய்யறதில்லை. ஹாஹா.

பின்னர் அவர்களும் எங்களைப் போலவே திங்கட்கிழமை காலை கொடசாத்ரியில் இருந்து கிளம்பி, கீழே வந்து பெங்களூர் வந்தார்கள். காலை 11லிருந்து இரவு 2 மணி வரையான அந்த பயணத்தில் நாங்கள் சந்தித்துக் கொண்டேயிருந்தோம். அவர்கள் சாயா சாப்பிடும் சமயத்தில் நாங்கள் ஓவர்டேக் செய்வது நாங்கள் சாயா சாப்பிடும் நேரத்தில் அவர்கள் ஓவர்டேக் செய்வது என வெறும் சாயாவும் ஓவர்டேக்குமாக சென்றது. அன்றைக்கு இருந்த களைப்பில் ஒன்பது மணிக்கெல்லாம் தூக்கக் கலக்கம் வேறு. சத்தமாய்(TBயின் சத்தத்தையும் தாண்டி) பாட்டு பாடிக் கொண்டே வண்டி ஓட்டினேன், ஏறக்குறைய எல்லாரும் இது போல் ஏதோ ஒன்றை செய்து கொண்டிருந்தனர் என்று கேள்விப்பட்டேன். ஒருவர் தனக்குத்தானே ரன்னிங் கமெண்ட்டரி மற்றும் பாட்டு என. எப்படா ஐம்பது கிமீ தாண்டும் சாயா குடிக்கலாம் என காத்திருந்தோம். அருமையான பயணம் அது. யாருமில்லாத ரோட்டில் மணிக்கு 80/90 கிமீ வேகத்தில் ஏழு பேரும் குறிப்பிட்ட இடைவெளியில் வந்த பயணம் மனதை ரம்மியப்படுத்தியது.

தும்குரில் Coffee dayயிலும் அந்த ஜீப் மக்களை சந்தித்தோம், அங்கிருந்து பெங்களூர் வரை எல்லோரும் ஒன்றாகத்தான் வந்தோம் ஏனென்றால் அத்தனை கண்டெய்னர்கள். ஒரு அற்புதமான பயணம்.

சில கொடசாத்ரி புகைப்படங்கள்Sunset

IMG_6232

IMG_6249

Pepper Garden

'Smart' Boy

'Smart' boy

Landscape

பாரதி கண்ட 'ஜீப் ஓட்டும்' பெண்

Johnyமேலும் கொடசாத்ரியில் பயணத்தில் எடுத்த படங்கள், எந்தவிதமான Post productionம் இல்லாமல் இங்கே அதனால் Only for personal use.

Life of others என்றொரு ஜெர்மன் படம் பார்த்தேன், கிழக்கு/மேற்கு என்று ஜெர்மனி பிளவுபட்டு இருந்த காலக்கட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். என்னைக்கேட்டால், "Sonata for good man" என்பதையே தலைப்பாக வைத்திருக்கலாம் என்று சொல்வேன். அருமையான படம், ஈரானிய படங்களைப் போல "பிரச்சனைகளை நேரடியாகச் சொல்லிச் செல்லாமல் மறைமுகமாக மெல்லிய புன்னகையை பரவவிட்டு" சொல்லிச் செல்கிறது படம்.

லெனின் ஒரு முறை பீத்தோவானின் சிம்பொனியைக் கேட்டுவிட்டு சொன்னதாக மாக்ஸிம் கார்க்கி நினைவு கூர்ந்த, "இந்த இசையைக் கேட்பதைத் தொடர்ந்தால் நான் என் தொடங்கியிருக்கும் புரட்சியை முடிக்க முடியாது போலிருக்கிறது" என்றாராம்.

Maxim Gorky's anecdote about Lenin listening to Beethoven's Appassionata Gorky wrote:
I know of nothing better than the Appassionata and could listen to it every day. What astonishing, superhuman music! It always makes me proud, perhaps naively so, to think that people can work such miracles!" Wrinkling up his eyes, Lenin smiled rather sadly, adding: "But I can't listen to music very often. It affects my nerves. I want to say sweet, silly things and pat the heads of people who, living in a filthy hell, can create such beauty. One can't pat anyone on the head nowadays, they might bite your hand off. They ought to be beaten on the head, beaten mercilessly, although ideally we are against doing any violence to people. Hm—– what a hellishly difficult job!

கதை இதன் பின்னாலேயே சுழல்கிறது, மிக முக்கியமான ஒரு முடிச்சி இதன் பின்னணியில் நிகழ்கிறது. க்ளைமாக்ஸில் "Sonata for good man" புத்தகத்தை வாங்கும் படத்தின் ஹீரோவிடம் கடையின் உரிமையாளர், கிஃப்ட் ராப்பர் சுற்றித் தரவா என்று கேட்கும் பொழுது, ஹீரோ சொல்லும் இல்லை இந்தப் புத்தகம் எனக்காக என்று சொல்கிறார். உண்மையில் யாருக்கும் தெரியாமல் அந்தப் புத்தகம் அவருக்காக சமர்ப்பணம் செய்யப்பட்டது தான். மெல்லிய நகைச்சுவை ஒன்று எப்பொழுதுமே படம் முழுவதும் நம்முடன் தொடர்கிறது. அருமையான படம் பார்க்கத் தவறாதீர்கள். Adults only தான் என்றாலும் மோசமில்லை மனைவியையோ காதலியையோ அழைத்துச் செல்லலாம். :)

Related Articles

9 comments:

 1. தம்பீபீபீபீபீபீ மோகன்..

  இந்தப் படத்தை சென்ற உலகத் திரைப்பட விழாவில் நானும் பார்த்தேன்.

  மனதைத் தொட்டத் திரைப்படம்.

  கடைசிக் காட்சியில் அந்தப் புத்தகத்தின் அட்டையைப் புரட்டிக் காட்டியவுடன் எழுந்த கைதட்டலில் அரங்கமே ஆடிப் போனது..

  மொத்தப் படத்தின் கதையையும் அந்த ஒரே ஒரு காட்சியில் செதுக்கியிருந்தார்கள்.

  எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன். ஆனால் நேரம்தான் கிடைக்கவில்லை.. கிடைத்ததும் எழுதுகிறேன்.

  பட்.. இப்படி 1000 கி.மீ. தூரம் வண்டியில் பயணம் செய்வது உடலுக்கு உசிதமல்ல தம்பி.. வாடகை காரையாவது எடுத்துச் சென்றிருக்கலாம்..

  புகைப்படங்கள் அருமைதான்.. உன்னுடைய போட்டோகிராபி பற்றி சொல்லவும் வேண்டுமா என்ன..?

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. மோஹன்,

  //இப்பல்லாம் வாரத்துக்கு ஒரு பதிவு போடுறதுக்குள்ளையே நுரை தள்ளுது.//

  எனக்குல்லாம் ஒரு மாதத்திற்கு 2-3 பதிவுப் போடவே நொரை தள்ளுது!(பெரும்பாலும் நான் நினைத்ததை எனக்கு முன்னர் மற்றவர்கள் பதிவாக போட்டு விடுகிறார்கள், நான் பின்னூட்டம் போட்டு திருப்திப்பட்டுக்கொள்கிறேன்)
  எனது பொறாமையை தூண்டுபவர்களே தினம் சில பதிவுகளை வலையேற்றுபவர்களே, எப்படித்தான் முடியுதோ :-))

  //பெங்களூரில் இருந்து குனிஹல், ஹசன், பெலூர், சிக்மகலூர், ஸ்ரீரிங்கேரி, ஆகும்பே, சோமேஷ்வர், கொல்லூர், கொடசாத்ரி, ஷிமோகா, பெங்களூர் என்று 1000 கிமீ தூர பயணம். ஆகும்பேயிலும், கொடசாத்ரியிலும் Travelers Bungalowவில் இரவு தங்கியிருந்தோம்.//

  கொடுத்து வச்சவரய்யா , இப்படிலாம் காட்டுத்தனமாக ஊர் சுற்றுவது எனக்கு இன்னும் சாத்தியப்படவில்லை, ஆனால் அவ்வப்போது அருகாமை பகுதிகளுக்கு காரணமே இல்லாமல் போய் வருவேன்.

  //அதில் ஒரு ஜீப்பை ஓட்டிக் கொண்டு வந்தது ஒரு பெண்!//

  புகைப்படத்தில் திரும்பிப்பார்க்கும் பெண் அவர் தானா :-))

  ReplyDelete
 3. உண்மைத் தமிழன்,

  பெங்களூர்த் தியேட்டரில் கை தட்டல்கள் இல்லை என்றாலும் நான் மனதார ரசித்த காட்சி அது. ஆனால் ஒரு மாதிரிக்கு அதை நான் எக்ஸ்பெக்ட் செய்தேன் தான். :)

  ஊர் சுற்றுவதைப் பற்றிய பெரிசுகளின் அட்வைஸ் இப்படித்தான் இருக்கிறது பெரும்பாலும் ஹாஹா நானும் இன்னும் கொஞ்சம் பெரியவன் ஆனதும் நீங்கள் சொல்வது போல் செய்து கொண்டு நீங்கள் செய்வது போல் அட்வைஸும் செய்வேனாயிருக்கும். :)

  ReplyDelete
 4. வவ்வால்,

  சிகரெட், தண்ணியடிப்பது போன்ற நல்ல பழக்கங்களில் இருந்து விடுபடும் பொழுது ஏற்படும் மகிழ்ச்சியாய் ஒரு வாரம் ப்ளாக் எழுதாமல் இருக்கும் பொழுது இருக்கிறது. கை கால் நடுக்கமெல்லாம் முதல் இரண்டாம் வருடங்களிலேயே விட்டுப் போச்சுன்னு வையுங்களேன்.

  தொடர்ச்சியாய் இரண்டு வாரம் ஊர் சுற்றியாச்சு. சந்தோஷமாயிருக்கு.

  ஆமாம் அதே பெண் தான். அப்பொழுது ரிவர்ஸ் எடுத்துக் கொண்டிருந்தாள், டயர் ஒழுங்கா சுத்துதா என்று பார்த்த பொழுது கிளிக்கியது அந்தப் படம்.

  ReplyDelete
 5. என்னது அதுக்குள்ள அடுத்த டூர் போய்ட்டு வந்தாச்சா?????

  ReplyDelete
 6. சென்ஷி,

  என்னமோ புரிஞ்சிடுச்சி போலிருக்கே!

  ReplyDelete
 7. சிவா,

  கூர்க் போய் வந்ததும் அடுத்ததாக ஒரு அவசர அழைப்பு வந்தது தட்டமுடியவில்லை போய்வந்தேன்.

  ReplyDelete
 8. அன்பு மோகன்தாஸ், தி லைப் ஆப் அதர்ஸ் படத்தைப் பற்றி உங்கள் பிளாக்கில் படித்த உடன் உடனே பார்த்தேன். எப்படி படம் கிடைத்தது என்றெல்லாம் கேட்க மாட்டீர்கள் எனில் நானும் ஒரு பொய் சொல்வதிலிருந்து தப்பிக்கலாம். ( நன்றி அ.முத்துலிங்கம் )

  சுதந்திரம் என்பது எவ்வளவு பெரிய விஷயம் என்பதைப் புரியவைத்த படமும் கூட. படத்தின் ஒவ்வொரு காட்சியும் அத்தனை தெளிவு. அந்நாளைய ஜெர்மனியின் அரசியல் சூழ்நிலையை முதல் பத்து நிமிடத்திலேயே காட்சிகள் சொல்லிவிடுவதும், மனசாட்சியுள்ள ஓரிரு அதிகாரிகள் எவ்வளவு பெரிய கொடுங்கோல் நாடாக இருந்தாலும் இருப்பதை காண்பிப்பதும் அழகு.

  நமது நாட்டில் தற்கொலையை கணக்கெடுப்பதை நிறுத்தி விட்டனர் என்பதைக் கேட்கும்பொது முதுகுத்தண்டு சில்லிடுகிறது. வீட்டை துவம்சம் செய்துவிட்டு பழுதுகளுக்கு நஷ்ட ஈடு பெற்றுக்கொள்ள ரசீது தருவதெல்லாம் எவ்வளவு கட்டுக்கோப்பான திட்டமிட்ட கும்பல்கள் அந்த அரசாங்க அதிகாரிகள் என்பதை காட்டுகிறது. மற்றபடி நல்ல இசையுடன், உறுத்தாத காமக்காட்சிகளுடன் அழகான திரைப்படமாக வந்திருக்கிறது. மீண்டும் ஒருமுறை பார்க்கவேண்டும்.

  பரிந்துரைத்தமைக்கு நன்றி.

  உங்கள் பதிவுகளை ஒவ்வொன்றாக படித்து வருகிறேன். மிக நன்றாக இருக்கிறது. முடிந்தால் ஒட்டுமொத்தமாக படித்துவிட்டு எனது எண்ணங்களை எழுதுகிறேன்.

  அன்புடன், ஜெயக்குமார்

  ReplyDelete

Popular Posts