In சுய சொறிதல்

சிக்கன் பிரியாணியும் பின்நவீனத்துவமும்

அன்பு அண்ணன் ஆசிப் மீரான் வீட்டுத் திருமணத்திற்கு வரச்சொல்லி இரண்டு மாதங்களுக்கு முன்பே சொல்லியிருந்தார் :( நான் டிக்கெட் எதுவும் எடுக்காமல் ஊர் சுற்றிக் கொண்டிருந்ததாலும் கடைசி சமயத்தில் திருச்சி சென்றுவர வேண்டிய ஒரு அவஸ்தையான நிலையில் சிக்கிக் கொண்டாலும் கல்யாணத்திற்கு வரணும் என்று மிரட்டி வைத்திருந்ததை நினைவில் வைத்திருந்தேன்.

வெள்ளிக் கிழமை ப்ராஜக்ட் நல்ல முறையில் First Phase முடித்திருந்ததால், Wonder Laவில் கொட்டமடித்துவிட்டு, பின் இரவு ஓல்ட் மதராஸ் ரோட்டில் உள்ள 'ஹக்கா' என்கிற சீன உணவகத்தில் dinner முடித்து விட்டு திருச்சி கிளம்பிய பொழுது மணி பதினொன்று.

டிக்கெட் எதுவும் ரிசர்வ் செய்து வைத்திருக்கவில்லையாதலால், மடிவாலா வந்து கிடைத்த பஸ்ஸில் ஏறி ஓசூர் வந்து பின்னர் ஓசூரில் அதிர்ஷ்டவசமாக கிடைத்த வொல்வோவில் சேலம் வரை வந்து பின்னர் சேலத்தில் இருந்து திருச்சி தமிழ்நாடு அரசுப் பேருந்து, காலை 8 மணிக்கு வீடு வந்து சேர்ந்த பொழுது பத்து பேர் தோளில்(சும்மா தாங்க :)) உட்கார்திருப்பதைப் போன்றிருந்தது. ஆனால் அரசாங்கத்தின் அரை நாள் விடுமுறையை அனுசரித்து அதற்கு முன்னமே செய்ய வேண்டிய வேலையை எல்லாம் செய்துவிட்டு கேபிஎன்னில் உட்கார்ந்தால் காலை சென்னை.

திருமண மண்டபத்திற்கு நான் வந்த பொழுது, லக்கிலுக்கும், பாலபாரதியும் மட்டும் இருந்தார்கள். பின்னர் சிறிது நேரத்தில் ஆசிப் வந்துவிட, மண்டபத்திற்கு கீழிருந்த சரவணபவனில் கொஞ்சம் உரையாடல் நடந்தது. அடல்ஸ் ஒன்லி வகை உரையாடல்கள் என்பதுவும் கொஞ்சம் சப்தம் அதிகமாகிவிட்டது என்பதும் சப்ளையர் வந்து அமைதியாக உரையாடும்படி சொன்னதும் தான் புரியவந்தது :).

அங்கே சொல்லப்பட்ட கதைகள் இரண்டும்(யார்னு நான் சொல்ல்லைப்பா :)) 'ச்சீ' வகை கதை என்பதால் சென்ஸார் செய்யப்பட்டு பதிவிடப்படலை. தனிப்பட்ட முறையில் என்னைச் சந்திக்கும் நபர்கள் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் :). இந்த இடைவெளியில் வால்பையனும், டோண்டு ராகவனும் வந்தார்கள் நமக்கு இருவருமே அத்தனை பழக்கம் இல்லை என்பதால் கப்சிப்.

பின்னர் அண்ணாச்சி மேலே திருமண மண்டபத்திற்கு சென்றுவிட நந்தா, பைத்தியக்காரன் இருவரும் வந்தார்கள். அவர்களுடன் அரட்டை அடித்தபடியே மண்டபத்திற்குச் சென்ற பொழுது அங்கே மேலும் நிறைய நண்பர்கள் இருந்தார்கள். எனக்கும் நினைவில் இருக்கும் வரையில் சொல்கிறேன், விட்டுப்போனவர்கள் கிட்ட மாப்பு. மரத்தடி தோழர்கள் ஹரன் பிரசன்னா, நடராஜன் ஸ்ரீநிவாசன் மற்றும் கென், அருட்பெருங்கோ, உண்மைத்தமிழன், இளவஞ்சி, லக்ஷ்மி, வளர்மதி, க்ருபா சங்கர் போன்றோர் வந்திருந்தனர். ஆசிப் மீரான் வீட்டு திருமணத்திற்கு நிறைய நபர்கள் வந்திருந்தார்கள். எனக்கு அவர்களின் பெயர்களும் அவர்கள் யார் என்றும் அதிகம் தெரியாததால் அந்த விஷயத்தில் மூக்கை நுழைக்கவில்லை.

ஸ்ரீநிவாசன் அவர்களுடன் கேஆர்எஸ், தமிழச்சி, தசாவதாரம், ஸ்ரீரங்கம், நாமம், சிதம்பரம், மானக்ஷா பின்னர் மாற்றம், கல்யாணம், கவிதை என்று நிறைய விஷயங்கள் பேசிக் கொண்டிருந்தேன். இடையிடையில் ஹரன் பிரசன்னாவும் நுழைந்து கொண்டிருந்தார். அவர் பையன் பயங்கர சுட்டி இரண்டு பலூன்களை உடைத்துவிட்டிருந்தான் அதற்குள்.

இளவஞ்சி வந்தார், அவரிடம் சிகை மாற்றம் பற்றி கொஞ்சம் ஜல்லி அடித்துவிட்டு முந்தைய பதிவு ஒன்றில் என்னைக் காலை வாறிவிட்டதைக் கவனித்ததையும் அதை பின்பொருநாள் கவனித்துக் கொள்வதாகச் சூழுறைத்துவிட்டு அவருடைய குட்டிப் பெண்ணிடம் அறிமுகம் செய்து கொண்டேன் :). முடி இறக்கிய பிறகும் 'பயங்கரமா' இருந்ததாலோ என்னவோ பயந்து போனதால் வெட்கப்பட்டுக் கொண்டு ஒளிந்து கொண்டாள். சிறு குழந்தைகள் பத்து பதினைந்து பேர்களுடன் பழக்கம் உண்டு என்பதால், இந்த மாதிரி அறிமுகமே கொஞ்சம் வெட்கப்பட வைப்பது தான் என்று தெரிந்ததால் சிரித்துக் கொண்டே நகர்ந்துவிட்டேன். இளவஞ்சியுடன் கொஞ்சம் பேசிவிட்டு பின்னர் நண்பர் வளர்மதி, பைத்தியக்காரன், நந்தா, கென் உடன் இலக்கியம்(ஆமாய்யா ஆமாம்! நானும் ரௌடி என்று சொல்லிக் கொண்டு 'வடிவேல்' போலீஸ் ஜீப் ஏறும் காட்சியை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.) பேச புறப்பட்டேன். பயங்கரமான செட்டிங்கில் இலக்கியம் 'பின்'நவீனம், வாழ்க்கை, இலக்கியம் என்று ஏகப்பட்ட விஷயங்கள் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். நந்தாவிற்கு மட்டும் "'பிரியாணி' காலியாகிறது உடனடியாக வரவும்" என்று நாலைந்து தொலைபேசி அழைப்புகள் :). இலக்கியம் பேசி செவிக்கு உணவு அதிகமானதால் நான் வயிற்றுக்கான உணவு பற்றி கவலைப்படவில்லை.

நானும் என் முகமூடியை விட்டு வந்து பசிக்குது வாங்கய்யா போகலாம்னு எப்படி சொல்றது. இடையில் ஹெல்மெட் எடுக்கிறேன் பேர்வழி என்று சென்ற கென் 'பிரியாணி காலி' என்ற செய்தியுடன் வந்ததால் பிரியாணி சாப்பிடும் ஆசையில் வந்த நந்தாவிற்கு காதில் புகை. ஆனால் அப்படியொன்றும் நடக்காமல் நாங்கள் இலக்கியம் பேசி முடித்துவிட்டு மேலே மண்டபத்திற்குச் சென்ற பொழுது, எங்கள் அனைவருக்குமான பிரியாணி இருந்தது. ஆசிப் அண்ணாச்சியே அப்பொழுதுதான் சாப்பிட்டுக் கொண்டிருந்தார், தன் பெண்ணிற்கு உணவு ஊட்டியபடியே. புது ஜெனரேஷன் மக்கள் எப்பொழுதுமே அதற்கு முந்தைய ஜெனரேஷன் ஆட்களுக்குப் பிரச்சனைதான். சாப்பிட்டு முடித்துவிட்டு ஆசிப்புடனும், அவரது குட்டி மகளுடனும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு ஆசிப்பிற்கு விடை கொடுத்துவிட்டு கீழிறங்கியதும் வளர்மதி வீட்டிற்குச் சென்று அங்கு பத்து நிமிடம் போல் இலக்கியம் மீண்டும் பேசிவிட்டு பெங்களூருக்கான டிக்கெட் புக் செய்துவிட்டு, 11 மணி வரை என்ன செய்யலாம் என்று நினைத்து சின்மையா நகர் வந்து டைப் அடித்துக் கொண்டிருக்கிறேன்.

பதிவை சுயசொறிதல் என்று வகைப்படுத்தப் போகிறேன் என்பதால் அதிலிருந்து சில விஷயங்களை மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.

Related Articles

10 comments:

 1. யோவ் தாஸு..

  என்னது சிக்கன் பிரியாணியா?! அது மட்டன் ஓய்! தலைகால் புரியாம பாத்திகட்டறதுங்கறது இதுதானா?

  பாதில எங்கய்யா போனீர்? இப்ப வரைக்கும் உம்ம போன் வேற பெம்பரரிலீ நாட் ரீச்சபிள்...

  ReplyDelete
 2. Sorry!!! Sorry for the confusion.

  Grrrr.

  I went to discuss about literature and post-modernism guru!

  I didnt brought my mobile with me Ilavanji. :( forgotten.

  ReplyDelete
 3. ஏப்பா,

  அதுக்குள்ளயேவா! (பதிவச் சொல்றேன்)

  பசிய அடக்கிட்டு பேசிக்கிட்டிருந்துட்டு, சிக்கன் பிரியாணியா மட்டன் பிரியாணியான்னு தெரியாத அளவுக்கு ... இளவஞ்சி சொன்ன மாதிரி பாத்திகட்டி அடிச்சிருக்க ;)

  கொஞ்சம் தொப்பைய தடவிப்பாரு (வாதிபி ஜீரணோபவ!) மேன்னு கத்துதா இல்ல கொக்கொக் கொக்கொன்னு சத்தம் கெக்குதான்னு ...

  கண்டிப்பா உனக்கு கொக்கொக் கொக்கோவும் அப்பாலிக்கு “சோலிக்கி பீச்சே க்யாக்ஹே”வும்தான் கேக்கும்னு நினைக்கிறேன்.

  அன்புடன்
  வளர் ...

  ReplyDelete
 4. சாப்பிட்டது கோழிகறி பிரியாணியா, ஆட்டிறைச்சி பிரியாணி என்பது கூட தெரியாதளவுக்கு நீங்கள் இலக்கியத்தில் ஆழ்ந்துவிட்டீர்கள் என்று நம்புகிறோம்.

  ReplyDelete
 5. ஆட்டுக்கறியைக் கோழிக்கறியாக எழுதுவது வெறும் sorry சொல்லி தீர்த்துவிடக் கூடிய சாதாரணப் பிழை அல்ல. அதுவும் தலைப்பிலேயே அவ்வாறு சொல்வது அடிப்படைத் தவறாகும்.

  தேவனே இவர்கள் இன்னதைச் சாப்பிடுகிறோம் என்பதை அறியாமல் சாப்பிடுகிறார்கள்! இவர்களை மன்னியும்!!

  ReplyDelete
 6. வளர்மதி,

  //பசிய அடக்கிட்டு பேசிக்கிட்டிருந்துட்டு, சிக்கன் பிரியாணியா மட்டன் பிரியாணியான்னு தெரியாத அளவுக்கு ... இளவஞ்சி சொன்ன மாதிரி பாத்திகட்டி அடிச்சிருக்க ;)//

  எல்லாம் மயக்க நிலையிலேயே சாப்பிட்டதால் வந்த குழப்பம் தாங்க.

  //“சோலிக்கி பீச்சே க்யாக்ஹே”வும்தான் கேக்கும்னு நினைக்கிறேன்.//

  ஹாஹா

  ReplyDelete
 7. ஜோசப் பால்ராஜ்,

  //நீங்கள் இலக்கியத்தில் ஆழ்ந்துவிட்டீர்கள் என்று நம்புகிறோம்.//

  வரலாறு முக்கியம் அமைச்சரே! :)

  ReplyDelete
 8. நடராஜன்,

  //தேவனே இவர்கள் இன்னதைச் சாப்பிடுகிறோம் என்பதை அறியாமல் சாப்பிடுகிறார்கள்! இவர்களை மன்னியும்!!//

  ஹாஹா இது மேட்டர்! எனக்கும் சேர்த்து பாவ மன்னிப்பு கேட்டதற்கு நன்னி.

  ReplyDelete
 9. /
  இளவஞ்சி said...

  யோவ் தாஸு..

  என்னது சிக்கன் பிரியாணியா?! அது மட்டன் ஓய்! தலைகால் புரியாம பாத்திகட்டறதுங்கறது இதுதானா?
  /

  :)))))))))))))))))

  ReplyDelete

Popular Posts