
என் தோல்விக்கான படுகுழியைத்
தோண்டி நானே படுத்துக் கொள்கிறேன்
சிரிக்கும் காலத்தை புறக்கணிக்கும் யத்தனிப்பு
கழட்டியெறியும் ஒன்று
முகமூடியாகத்தான் இருக்கவேண்டுமென்று நகர்கிறேன்
முகமாக இருந்துவிடக்கூடாதென்ற பயத்துடன்
அவிழ்வதெது என்றறிவுடன்
எல்லாம் போலியாகிவிட்ட பொழுதொன்றில்
இல்லாமல் போனது முகமாகிவிடவே விரும்புகிறேன்
முகமூடிகளும் இல்லாமல் போய்விடும்
வியாபாரத் தந்திரத்துடன்
பொருந்தாமல் தடுமாறிய முகமூடியொன்று
முகமில்லாத பொருத்தத்தில் பொருந்தியதை
மொத்தமாய்ப் புறக்கணிக்கிறேன்
நேர்மையற்றவனாய்
metha first a
ReplyDeleteகவிதை நல்லா இருக்கு வாழ்துக்கள்.......
ReplyDeleteஇந்த முகம் / முகமூடி / dishonesty (எப்போதுமே முகமூடியுடன் தொடர்புடையது!) பற்றி நிறைய நிறைய எழுதப்பட்டாகிவிட்டதால் கொஞ்சம் சலிப்பாயிருக்கிறது.
ReplyDeleteகவிதை என்ற விதத்தில் நீங்கள் எழுதியிருப்பது என்னைக் கவரவே செய்கிறது.
எல்லாம் போலியாகிவிட்ட பொழுதொன்றில்
ReplyDeleteஇல்லாமல் போனது முகமாகிவிடவே விரும்புகிறேன்///
உண்மைதான்!!