In கிரிக்கெட்

Go Aussie Go!!!

ஆஷஸ் தோல்வியால் கொஞ்சம் மனம் தடுமாறியிருந்தேன், ஆனால் அடுத்த பத்தாண்டுகளுக்கான ஒரு அணியை உருவாக்கிக் கொண்டிருக்கும் பொழுதும் நிகழும் (ஏ)மாற்றங்கள் தான் என மனதை தேற்றிக் கொண்டிருந்தேன். அதை இங்கிலாந்து அணியுடன் விளையாடிய ஒருநாள் போட்டிகளில் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள் ‘செல்ல’ ஆஸ்திரேலிய அணியினர். ஏழாவது போட்டியை ஜெயிக்கவில்லை என்கிற வருத்தம் கொஞ்சம் அதிகமாய்த் தெரிந்தது, அந்த போராட்ட வெறி பிடித்திருந்தது.

இப்பொழுது சாம்பியன்ஸ் ட்ராபிக்கான போட்டிகளுக்காக சௌத் ஆப்பிரிக்கா வந்திருக்கிறார்கள். கப் எங்களுத்தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை, அதுவும் 6 - 1, என்கிற விதத்தில் இங்கிலாந்தை வென்ற பிறகு எந்தக் கவலையுமில்லை. அதுவும் முதல் போட்டி வெஸ்ட் இன்டீஸ் உடனாம், என்ன கொடுமைங்க இது சரவணன். அட்லீஸ்ட் 450 ஆவது அடிக்கணும், அதுக்கு ஆஸ்திரேலியா டாஸ் ஜெயிக்கணும்.

சாம்பியன்ஸ் ட்ராஃபியை வென்று பச்சாப் பசங்களிடம் இருந்து நம்பர் ஒன் ரேங்கிங்கை எடுத்துக் கொண்டு, மீண்டும் நெருங்க முடியாததாய்ச் செய்வார்கள் என்ற நம்பிக்கையிருக்கிறது. மீண்டும் ஒரு முறை பயன்படுத்துகிறேன் என்றாலும், ‘ஷரத் கோடோம்பே லகாதேங்கே கடோர். ஷெகரோம்பே நஹி’ என்பது போல் போட்டிகளிலில்லாத ஆடுகளத்தில் ஆட்டுக்குட்டிகளை அடித்து நகர்த்த வாழ்த்துக்கள்.இன்னும் ஒரு கோப்பை வைக்கத்தான் இடம் இல்லை ;)

Read More

Share Tweet Pin It +1

3 Comments

In சினிமா

உன்னைப் போல் ஒருவன்

முதலில் கமல்ஹாசன் எதற்காக இந்தப் படத்தை எதற்கு இந்தியில் இருந்து எடுத்துச் செய்தார் என்று உண்மையிலேயே தெரியவில்லை, மூன்று மாதத்தில் ஒரு படத்தை எடுத்து முடித்து வெளியிட்டு கொஞ்சம் காசுபார்க்கலாம் என்ற எண்ணத்தில் செய்திருந்தால் சரிதான். மற்றபடிக்கு மொக்கையாக இருக்கிறது படம். இதற்கு மேல் எதுவும் சொல்ல விருப்பமில்லை இந்தப்படத்தைப் பற்றி.

PS : நான் A Wednesday படம் பார்க்கவில்லை.

Read More

Share Tweet Pin It +1

22 Comments

In சினிமா

Wanted

உன்னைப் போல் ஒருவன் வெளியாகியிருக்கும் நிலையில், Wanted படத்திற்குச் செல்ல வேண்டிய கட்டாயம். நண்பர்கள் வற்புறுத்த மறுக்கயியலாமல் சென்றிருந்தேன். சில வருடங்களுக்கு முன்பு போக்கிரி பார்க்கலாம் போங்க என்று போக்கிரி படத்திற்கு விமர்சனம் எழுதிய நினைவு இன்றும் நன்றாக இருக்கிறது. அறிவுஜீவிகள் மத்தியில் பொதுவாய் மறுக்கப்பட்ட படம் எனக்கு பிடித்துத்தான் இருந்தது அதை எழுதியும் வைத்திருந்தேன்.படத்தில் உயிர் இல்லை, சல்மான் வருகிறார், சண்டை போடுகிறார் எல்லாம் சரி தான் ஆனால் அந்த ஃபீலிங் இல்லை, விஜய் போக்கிரியில் ஒவ்வொரு வசனம் பேசும் பொழுதும் அஜித்தை எதிர்த்து பேசுவதைப் போலவும் அடிக்கும் ஒவ்வொரு அடியும் அஜித்தை அடிப்பது போலவும் இருக்கும். அது இங்க மிஸ்ஸிங். இந்தப் படம் பார்த்தப் பிறகு தான் நினைத்துக் கொண்டேன் விஜய்கிட்டவும் ஸ்கிரீன் பிரசன்ஸ் இருப்பதாய். சல்மான் ஆரம்பத்திலிருந்தே எய்ட் பேக்ஸ் மெயிண்டெய்ன் செய்பவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், உடம்பு இன்னும் அவர் சொன்ன பேச்சு கேட்கிறது போல, ஆனால் என்ன டான்ஸ் ஆடத்தான் வரமாட்டேங்கிறது. எல்லா நல்ல போக்கிரி பாட்டும் படு மொக்கையா இருக்கு இந்தப் படத்தில். போக்கிரி படம் எவ்வளவு தேவலாம் என்றாகிவிட்டது.

அசினுடன் ஆயிஷா தாக்கியாவை ஒப்பிட முடியுமான்னு தெரியலை, எனக்கு இரண்டு பேரையுமே பிடிக்காது. அதென்னமோ அசினை ஆரம்பத்திலிருந்தே நான் ரசிக்கலை, கொஞ்சம் தொட்டுக்கொள்வது போல் ரசித்தது என்றாலும் அது தசாவதாரத்திலே தான். தாக்கியா ‘முன்’னாள் அழகி மந்த்ரா வாகு, சில சமயம் க்ளோசப்பில் ‘அது’ மட்டுமே தெரிந்து, அவரைப் பார்ப்பதற்கென்றே சினிமாவிற்கு வந்திருந்த நண்பர்கள் தூக்கத்தை நிச்சயம் கெடுத்திருக்கும். எனக்கு சமர்த்தா இருந்தா தான் பிடிக்கும் அதிகப் பிரசங்கி‘களை’ நான் விரும்புவதில்லை. தமிழில் இருந்ததான்னு ஞாபகம் இல்லை, தாக்கியா - சல்மானிடம் ‘என்னைச் சாப்பிடு’ன்னு சொல்ல நண்பர்கள் எனக்கு எனக்கு என்று அலைந்து கொஞ்சம் ஓவர் தான். சரி தாக்கியாவை கொஞ்சம் சமீரா ரெட்டி, பிரியங்கா சோப்ராவிற்குப் ‘பின்’வரிசையில் வைக்கலாம், பாந்தமாய் இருக்கிறாரே என்றால் வைரமுத்துவின் வரிகள் தான் நினைவில் வந்து படுத்துகிறது. “சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றிப் போனேன், ஆஹா அவனே வள்ளலலடி” சரிதான், ஆனால் மீதி மெல்லிடை மட்டும் அல்லாமல் மொத்தமாவே கஞ்சனாயிருந்துட்டான் கடவுள். ஜீன்ஸில் பார்த்தால் ஒன்னையுமே காணோம். அளவு மீறுகிறது இங்கையே நிறுத்திக் கொள்கிறேன் ;).இசை மிக மோசம், பேக்ரவுண்ட் ஸ்கோர் கொஞ்சம் காதைக் கிழிக்கும் வகையில் இருந்தாலும் போக்கிரி விறுவிறுப்பாய் போக உதவியது. ம்ஹூம் இங்கே பெரும் தலைவலியாய் இருந்தது. இடைவேளைக்குப் பிறகு சட்டென்று வந்தது போலிருந்த க்ளைமாக்ஸ் இங்கே மிஸ்ஸிங், இடைவேளை இழுத்தடிக்கப்பட்டிருப்பதாய்த் தோன்றியதற்கு முக்கியக் காரணம் இசை தான்னு நினைக்கிறேன்.

இயக்கத்தைப் பத்தியெல்லாம் சொல்றதுக்கு ஒன்னுமில்லை, அதே தமிழ் காப்பி. இந்தப் படத்தை தியேட்டரில் போய்ப் பார்ப்பதற்கு போக்கிரியை இன்னொரு முறை டிவிடியில் பார்க்கலாம்.

Read More

Share Tweet Pin It +1

5 Comments

Popular Posts