In சினிமா சினிமா விமர்சனம்

Baise Moi - Kiss Me

முன்பே சொல்லியிருந்ததைப் போல் ஒரு படமோ ஒரு புத்தகமோ நமக்கு எப்படி அறிமுகமாகிறது என்பது முக்கியமான விஷயம். இந்த Baise-Moi படம் எனக்கு அறிமுகமானதும் வித்தியாசமான முறையில் தான்; என்னுடைய ப்ரான்ஸ் நாட்டு தொடர்புகளைப் பற்றி நான் முன்பே எழுதியிருக்கிறேன் ஏதோ ஒரு வகையில். அப்படிப்பட்ட ஒரு நபர் என்னுடைய பதிவுகளையும் படிப்பதுண்டு; நான் பெண்ணியம் பற்றி பதிவுகளில் சண்டைப் போட்டுக்கொண்டிருப்பதைப் படித்தவர் இந்தப் படத்தை சிபாரிசு செய்தார்.அவரிடம்(மட்டும்) நான் பெண்ணியத்தைப் பற்றிய விவாதத்தை செய்ய மாட்டேன்; கிழித்தெரிந்துவிடுவார் என்று தெரியும். ஆனாலும் சுத்திச் சுத்தி பேசுவேன்.

"இங்கப்பாருங்க எந்த ஒரு விஷயமும் இந்தியாவில் செல்லுபடியாக வேண்டுமானால் இந்தியனைஸ்ட் செய்யப்பட வேண்டும். நாம இந்தியாவில் சாப்பிடும் பீட்ஸா இருக்கே அதை அமேரிக்காவிலோ இல்லை அதன் தாயகமான இத்தாலியிலோ கொடுத்தால் சாப்பிடவே மாட்டார்கள் ஏன் தெரியுமா? நாம் சாப்பிடும் பீட்ஸா இந்தியாவிற்காக செய்யப்பட்டது நம்முடைய மசாலாக்கள் போடப்பட்டு செய்யப்பட்டது. அவன் லத்தின் அமேரிக்காவிலோ, அமேரிக்காவிலோ செல்லுபடியாகும் பீட்ஸாவை அப்படியே இந்தியாவில் கொண்டுவந்தால் அது ஊத்தி மூடியிருக்கும்.

அதைப் போலத்தான் மேற்கத்திய நாடுகளில் பயன்படுத்தப்பட்ட வெற்றி பெற்ற கொள்கைகளும் கட்டுமானங்களும். இந்தியனைஸ்ட் செய்யாமல் இங்கே ஒன்றுமே வெற்றி பெற முடியாது. அப்படி செய்தீர்களேயானால் அது படுதோல்வியில் முடியும். அது புரட்சியாக இருந்தாலும் சரி பெண்ணியமானாலும் சரி." நான் வைத்த இந்த பாய்ன்ட்டை அவர் ஏற்றுக் கொண்டார். ஆனால் பல சமயம் இந்தியனைஸ்ட் செய்யும் பொழுது அந்தக் கொள்கை அப்படியே மாறிவிடுகிறது என்றும் புலம்பினார்.

ஏன் இதைப் பற்றி Baise-Moi பற்றி எழுதும் பொழுது சொல்கிறேன் என்றால், நான் பெண்ணியம் பற்றிய விமர்சனங்களை வைத்திருக்கும் பொழுது எனக்கு இந்தப் படத்தை அந்த நபர் அறிமுகப்படுத்தியிருந்தார். படம் பார்த்ததும் எனக்கு வந்த உணர்வுகளைத்தான் நான் சொல்லியிருந்தேன் அதனால் தான் அந்த வரிகள்.

சரி படத்தைப் பற்றி, ஏற்கனவே டிசே தமிழன் இந்த நாவலைப் பற்றி(இந்த படம் ஒரு நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது நாவலை எழுதியவர் துணை இயக்குநராய் இருந்து இந்தப் படம் எடுக்கப்பட்டது) எழுதியிருந்தார். இந்தப் படம் 1973க்குப் பிறகு ப்ரான்ஸ் நாட்டில் தடை செய்யப்பட்ட படம் என்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயம். ஏனென்றால் உலகின் கலாச்சார தலைநகரம் என்று பெயர் பெற்ற ப்ரான்ஸைப் பற்றிச் சொல்லும் பொழுது அதனுடைய சுதந்திரம் மிக முக்கியமான ஒன்றாக வைக்கப்படுகிறது அதாவது எழுத்து, பேச்சு சுதந்திரங்கள். அப்படிப்பட்ட ஒரு நாட்டில் தடை செய்யப்பட்ட ஒரு படம் என்ற Tag உடன் என்னிடம் அறிமுகம் ஆனது இப்படம்.

விளிம்பு நிலை பெண்களின் வாழ்க்கையை காட்டுவதாக படம் அமைந்திருக்கிறது, நாவலை எழுதியவர்(இயக்குநர்) மற்றும் இந்தப் படத்தில் நடித்த நடிகைகள் இருவரும் இந்த பின்னணியில் இருந்து வந்தவர்கள் ஆதலால் தத்ரூபமாக அம்மக்களைப் படம் பிடிப்பதாய் இருக்கிறது படம். இந்தப் படத்தை நாம் எந்த முறையில அணுகுகிறோம் என்பது மிகமுக்கியமான ஒரு விஷயமாகயிருக்கிறது. ஏனென்றால் இன்னமுமே கூட இது போன்ற ஒரு சூழ்நிலையை படமெடுக்க ப்ரான்ஸ் போன்ற நாடுகளில் மறுக்கிறார்கள் எனும் பொழுது, நம் நாட்டைப் பற்றி கேட்கவே வேண்டாம். இந்தப் பிரச்சனைகள் இல்லையா நம் நாட்டில் என்றால் - இருக்கிறது சொல்லப்போனால் நிறையவே என்ற பதில் தான் வரும்.

எழுத்து வடிவத்தில் நம்மூர் ஆட்களில் இதைப் பற்றி எழுதுபவர்கள் இன்று இருக்கிறார்கள். ஜே.பி. சாணக்யா எனக்குத் தெரிந்த ஒருவர் இந்த விதத்தில்; ஆனால் பாலியல் விவகாரங்களை விளிம்பு நிலை மக்கள் துடைத்துப் போட்டுவிட்டுப் போகும் ஒரு விஷயமாகப் பார்ப்பதை நீங்கள் சாணக்யாவின் எழுத்துக்களில் பார்க்கலாம். (ஆனால் சமீபத்தில் பேசிக்கொண்டிருந்த ஒரு நபர் - சாணக்யாவின் எழுத்துக்களில் விளிம்பு நிலை மக்களைப் பற்றிய விஷயங்கள் மிகைப்படுத்தலானதும் கொஞ்சம் போல் போலியானதாகவும் இருப்பதாக சொல்லிக் கேள்விப்பட்டேன்.) ஆனால் 'ரா'வாக விளிம்பு நிலைப் பெண்களின் வாழ்க்கையைப் பற்றி இந்தப் படம் விவரிக்கிறது.

Baise Moi க்கு டிசே சொல்லியிருப்பதைப் போல் Rape Me நேரடியான அர்த்தமாக இருக்காதெனவும் Kiss Me தான் அர்த்தம் என்றும் இயக்குநரின் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.(ஆனால் தற்சமயங்களில் F*** Me என்ற அர்த்தமும் வருமாம்).

நடீன் என்ற பகுதிநேர விலைமாதுவிற்கும், மனு என்ற தன்னுடைய வாழ்விற்காக எதையும் செய்யத் தயாராயிருக்கும் ஒரு பெண்ணிற்கும் நடக்கும் விஷயங்களைப் பற்றிப் பேசுகிறது. இருவருமே ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தங்களைச் சேர்ந்தவர்களையே கொன்றுவிடும் நிலை. நடீன் தன்னுடைய அறைத் தோழியையும் மனு தன்னுடைய சகோதரனையும் கொன்றுவிட்டு செல்லும் வழியில் இருவரும் சந்தித்துக் கொள்கிறார்கள். பின்னர் இருவருக்கும் இருக்கும் ஒத்த பின்னணியால் சேர்கிறவர்கள். பணத்திற்காகக் கொள்ளையடிக்கிறார்கள், தேவைகளுக்காக செக்ஸ் வைத்துக் கொள்கிறார்கள், பின்னர் வெறிக்காக(சமுதாயத்தின் மேல்) கொலை செய்கிறார்கள். இப்படியே நீளும் கதையில் கடைசியில் ஒரு கடையில் கொள்ளையடிக்கும் பொழுது மனு கொல்லப்பட, மற்றவர்(நடீன்) தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கும் பொழுது பிடிபடுகிறார்.

இவ்வளவு தான் படம் படமாக்கியிருக்கும் விதம் உண்மையிலேயே அதிர வைக்கிறது. அவர்களின் 'ரா'வான தன்மை. எந்த நோக்கமும் இல்லாமல் இயங்குவது, கொலை செய்வது என்று ஆச்சர்யப்படவைக்கிறது படம். இந்த வகையான எடிட்டிங் முன்பே பார்த்திருக்கிறேன்; தனித்தனியாய் இருவரைப் பற்றியும் ஆரம்பிக்கும் படம். இருவரும் சேர்ந்ததும் ஒன்றாய் பயணிக்கிறது. படத்தில் இருக்கும் ஒரு ரேப் சீன் பெரும்பான்மையான நாடுகளில் அனுமதி மறுக்கப்பட்ட ஒன்று. உலகத்தின் பல பாகங்களில் இந்தப் படம் இன்னமும் அனுமதி மறுக்கப்பட்டுத்தான் இருக்கிறது; இந்தியாவிலெல்லாம் கேட்காதீர்கள்.

படம் பார்க்கும் பொழுது பெரும்பான்மையான நேரத்தில் ஒரு படம் பார்ப்பதைப் போன்ற உணர்வே எழுவதில்லை. இதற்கு இந்தப் படத்தை எடுத்த முறையும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன் - இயற்கையான வெளிச்சத்திலேயே இந்தப் படத்தை எடுத்தார்களாம். இதைப் போலவே முன்பே நினைத்த ஒரு படம் Battle of Algiers's. நாம் எவ்வளவு செக்யூர்டான வாழ்க்கை வாழ்கிறோம் என்பதைப் போன்ற உணர்வு இதைப் போன்ற படங்களைப் பார்க்கும் பொழுது கிடைக்கிறது.

இந்தப் படம் என்ன சொல்ல வருகிறது எதற்காக இப்படி ஒரு படம் எடுக்கப்பட வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. இதற்கான பதிலாக இந்த மாதிரியான ஒரு வாழ்க்கை உலகத்தில் இருக்கிறது என்பதை பதிவு செய்ய என்று கூறலாம்; இயக்குநர் Virginie Despentes சொல்கிறார் படத்தில் காண்பிப்பதை விடவும் வன்முறையா ஒரு உலகம் இருப்பதாகவும் அதில் அவர் வாழ்ந்ததாகவும். விக்கிபீடியாவில் தேடிக்கொண்டிருந்த பொழுது தான் தெரியவந்தது இந்தப் படத்தில் நடீனாக நடித்த நடிகை Karen Bach சிறிது காலத்தில் தற்கொலை செய்து கொண்டதாகவும் தன்னுடைய கடைசி Note ஆக "Too Painful" என்று எழுதி வைத்திருந்ததாகவும். Karen Bach ஒரு போர்ன் ஸ்டாராக இருந்தவர் தான்.


Karen Bach

இந்தியாவில் இந்தப் படம் கிடைக்கிறதா தெரியவில்லை, படத்தில் செக்ஸ் சீன்களும் வன்முறையும் அதிகம் இருக்கும். இதை ஒரு ரிவ்யூ போல் எல்லாம் எழுதாமல் இந்தப் படம் பார்த்ததால் நான் உணர்ந்ததை எழுதியிருக்கிறேன்.

Written & Directed by - Virginie Despentes, Coralie Trinh Thi
Starring - Karen Lancaume, Raffaëla Anderson

http://en.wikipedia.org/wiki/Baise_moi
http://en.wikipedia.org/wiki/Virginie_Despentes
http://en.wikipedia.org/wiki/Karen_Lancaume

Read More

Share Tweet Pin It +1

9 Comments

In எமினெம் சினிமா சினிமா விமர்சனம்

8 Mile - எமினெம்

நிறைய படங்கள் நாம் எதிர்ப்பார்க்காத சமயங்களில் கிடைத்துவிடுவதுண்டு. ஆனால் சில படங்கள் எவ்வளவு தேடினாலும் கிடைக்க மாட்டேன் என்று பிரச்சனை செய்வதுண்டு. அப்படி நான் எமினம்-ன் பாடல்களைக் கேட்டு/பார்த்துப் பிடித்துப் போய் இந்தப் படத்திற்காக அலைய ஆரம்பித்த இரண்டாவது ஆண்டில் கிடைத்தது; இந்தப் படம்.

சாதாரணமாக சொல்ல வேண்டுமென்றால் ஒரு அன்டர்டாக்(Underdog) ஸ்டோரி அவ்வளவுதான் படம். ஒரு ராப் பாடகர் தன்னுடைய பிரச்சனைகளை எல்லாம் கடந்து வெற்றி பெறுவதுதான் கதை. ஹாலிவுட்டில் நம்ப ஊரு தாலி செண்டிமெண்ட் மாதிரி பிரபலமான கான்செப்ட். ஆனால் எனக்கு சிண்ட்ரெல்லா மேன் பிடித்துப் போனதற்கும் இந்தப் படம் பிடித்துப் போனதற்கும் காரணம் இந்தப் படங்கள் உண்மைக் கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப் பட்ட கதைகள்.(சிண்ட்ரெல்லா மேன் உண்மைக் கதை என்றே சொல்லி எடுக்கப்பட்டது, ஆனால் 8 மைல் அப்படிக் கிடையாது பார்ட்ஷியல் பயோகிராபி தான்.(சொல்லப்படுகிறது))

இதெல்லாம் இருந்தும் படத்தில் எனக்குப் பிடித்த விஷயங்கள் நிறைய, முதலில் எமினம் நடித்தது. வாழ்க்கையில் நடிக்கிறது எவ்வளவு கஷ்டம் என்று, "தூள்" படம் பார்த்துத்தான் கற்றுக் கொண்டேன், அதில் ஒரு வயதான அம்மா நடித்திருக்குமே(வேறவழி). அந்தம்மா ஸ்கிரீனில் சும்மா நிக்கிறதையும், டயலாக் டெலிவரியின் போது கூட முகத்தில் ஒரு ரியாக்ஷனுமே இல்லாமல் இருப்பதையும் பார்த்துவிட்டு, அம்மாடி நடிக்கிறது பெரிய வேலைதான் என்ற முடிவிற்கு வந்துவிட்டேன். ஏன் இங்கே இதைச் சொல்கிறேன் என்றால் எமினம்-ன் முதல் படமாகயிருந்தாலும் இந்தப் பிரச்சனைகள் தெரியவில்லையென்றே சொல்லவேண்டும்.

ஒரு நடிகரைப் போட்டு எடுத்திருக்கலாம் தான் ஆனால் இந்த ரியாலிட்டி வந்திருக்காது, அதுவும் படத்தில் பெரும்பங்குவகிக்கும் ராப் பாடல்கள் இத்தனை நன்றாக வந்திருக்காது. சரி ராப் பாடல்களுக்கு, எனக்கு மிகச்சரியாய் ராப்பாடல்கள் அறிமுகம் ஆனது டிசேவின் பதிவில், அவர் ராப் பாடல்களைப் பற்றிய பதிவெழுதியிருந்தார். முன்பே கேட்டிருக்கிறேன் டூபாக், ஸ்னூப்பி டி ஓ டபுள் ஜி, எமினெம் என்று என்றாலும் வெறும் சப்தத்திற்காக பிடித்திருந்த பாடல்கள். அதே சமயத்தில் இல்லை இன்னும் கொஞ்ச காலம் கழித்து சாருவின் கோனல்பக்கங்களில் எமினம் பற்றி எழுதும் பொழுது நினைத்திருக்கிறேன், ஆஹா மனுஷன் இப்பத்தான் முதல் முறையா நமக்குத் தெரிந்த ஒருத்தரைப் பற்றி சொல்றார் என்று. ஏன் என்றால் எனக்கும் விளிம்பிற்குமான தொலைவு அதிகம். பெரும்பாலான நியூட்ரல் ஜல்லிகளுக்கு இதுதான் காரணம்.

அந்தச் சமயங்களில் தான் ரொம்பவும் சீரியஸாய் ஆங்கிலப் பாடல்களைக் கேட்கத் தொடங்கியது. எப்படி இங்கிலிபீஷ்ஷில் இருந்து இங்கிலீஷ்ற்கு வர ஆங்கிலப் படங்கள் உதவியதோ அப்படி இங்கிலீஷ்லிருந்து English வர இந்த வகையறா பாடல்கள் உதவின. ஜான் லெனன், பேக் ஸ்டீர்ட் பாய்ஸ்(I Really Miss them), U2 என பாப் இசைப் பாடல்களில் விழுந்து பொரண்டிக் கொண்டிருந்த பொழுது கிடைத்த அறிமுகம் தான் ராப் பாடல்களினுடையது.

ஒரு மிகச் சிக்கலான விஷயத்தை, தன்னுடைய ஏற்கனவே பிரபலமான ஸ்டைல் பாடல் வரிகளினிடையே எப்படி எமினமால் தரமுடிகிறது என்று வியந்திருக்கிறேன். எல்லா விஷயங்களையும்(அமேரிக்க விளிம்புப் பிரச்சனைகள்) பற்றியும் எமினம்-ன் வரிகள் பிடித்திருந்திருக்கிறது. நான் எனக்கு எமினம்-ஐ மிகவும் பிடிக்கும் என்று பக்கத்தில் ஒரு ப்ளாக்கரிடம் சொல்லிக் கொண்டிருந்த பொழுது அவர் "உனக்கு அவனை பிடிக்காமல் இருந்தால் தான் ஆச்சர்யம்" என்று சொல்ல, முதலில் புரியாமல் விழித்தேன் பிறகு அவரே, உன்னை மாதிரி MCPக்கெல்லாம் அவனைத்தான் பிடிக்க வேண்டும் என்று சொல்ல, ஒன்றுமே சொல்லாமல் விட்டுவிட்டேன்.(சாரு நிவேதிதா கேட்டிருக்கணும் முன்பே ஒருமுறை சொன்ன மாதிரி அவுத்துப்போட்டு ஆடியிருப்பார் ;).)

ஆனால் அது அப்படியல்ல, என்னுடைய அறிப்பை நான் மற்றவர்களின் மேல் சொறிந்துவிட முடிவதில்லை பெரும்பாலும் என்னுடைய சுயசொறிதல்களே எனக்கு போதுமானவையாக இருக்கின்றன.

சரி படத்திற்கு, கறுப்பர்களால் டாமினேட் செய்யப்படும் ராப் பாடல் உலகில் ஒரு வெள்ளையரான எமினெம்-ன் ஆரம்பம் வளர்ச்சியைப் பற்றியதுதான் இந்தப் படம். 8 மைல் என்று கவிதைத்துவமான தலைப்பு, அதாவது படம் நடப்பதாகச் சொல்லப்படும் டெட்ராய்டில் கறுப்பர்களும் வெள்ளையர்களும் வாழும் பகுதியைப்(வேண்டுமானால் பணக்காரர்கள் ஏழைகள்) பிரிப்பது இந்த 8 மைல் தூரம். அந்த 8 மைல் தூரத்தை எமினெம் எப்படிக் கடந்தார் என்பதைத் தான் சொல்லியிருக்கிறார்கள்.

மியூசிக் சம்மந்தப்பட்ட படம் என்பதால், படம் முழுவதும் ரசிக்கக்கூடிய இசை காதில் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. எனக்கு எமினம்-ன் பாடல்கள் பிடித்துப் போன பிறகு அவருடைய கதையை(அதாவது உண்மை வரலாற்றை) தேடிப் படித்திருக்கிறேன் என்பதால், இந்தப் படத்தில் சொல்லப்படும் விஷயம் ஏற்கனவே நானறிந்த ஒன்றுதான்.

படத்தில் ராப் பாடல்களுக்கான போட்டிகள் நடைபெறுவது முக்கிய விஷயமாகப் பேசப்படுகிறது சொல்லப்போனால் இந்த ராப் போட்டிகள் குத்துச் சண்டை போட்டிகளை ஒத்துக் காணப்படுகிறது. 8 மைல் படத்தைப் பற்றி எழுதத் தொடங்கிவிட்டு இதைப் பற்றி எழுதாமல் போகக்கூடாது என்பதால் எழுதுகிறேன். எமினெம்-ன் வாழ்க்கை தொடக்கத்தில் இது போன்ற போட்டிகளில் பங்கேற்றிருக்கிறார். ரொம்ப எளிமையா சொல்லணுனா இரண்டு பேர் பங்குபெரும் பேச்சுப் போட்டிகளைச் சொல்லலாம். இங்கே பேசுவது போல் அங்கே பாடுவார்கள், ஆனால் அங்கே வாசிக்கப்படும் மெட்டிற்கு ஏற்றபடி சொற்களைக் கட்டிப் பாடுவது. இதையும் பேச்சுப் போட்டிகளுடன் சொல்லலாம், ஐந்து நிமிடத்திற்கு முன் டாபிக் கொடுத்தெல்லாம் நானே பேசியிருக்கிறேன். ஆனால் முன்னர் சொன்னது போல் ஏற்கனவே பெரும்பாலும் மனதில் உருப்போட்ட வரிகளைத்தான் உபயோகிப்போம் தலைப்பு என்ற விதத்தில் வேண்டுமானால் இதை(ராப் போட்டிகளை, ஆனால் இதிலும் எமினெம் முன்பாகவே பிரிபேர் செய்வதைப் போல் இருக்கும்) வேறாகச் சொல்லலாம்.

இன்றுவரை ராப் ஒலிம்பிக்ஸ் நடந்துவருகிறது. 2001லோ இல்லை 2002லோ தெரியாது எமினெம் ரன்னர் அப்பாக வந்தார் என்று நினைவில் இருக்கிறது. இது உண்மையில் நடந்தது. ஆனால் உண்மையில் ராப் பாடல்களை, ராப் பாடகர்களை, அவர்களின் வாழ்க்கை முறையை அறிந்திருந்தீர்கள் என்றால் இந்தப்படம் அவ்வளவு இயல்பாக ராப் உலகைக் காண்பிப்பதாகச் சொல்லமுடியாதென்றாலும். ஒரு நல்லமுயற்சி இந்தப்படம்.இந்தப் படத்தில் வரும் "Lose Yourself" பெஸ்ட் ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கார் விருது பெற்றது. ஆனால் இந்தப்பாடலை அவர் செரிமெனியில் பாடவில்லை, ஏனென்றால் American Broadcasting Company இந்தப் பாடலை எடிட் செய்து பாடச் சொன்னதால் பாடவில்லை. அந்தப் பாடல்வரிகள் மற்றும் படக் காட்சியுடன் நிறைவு செய்கிறேன்.

"Lose Yourself"

Look, if you had one shot, or one opportunity
To seize everything you ever wanted-One moment
Would you capture it or just let it slip?

His palms are sweaty, knees weak, arms are heavy
There's vomit on his sweater already, mom's spaghetti
He's nervous, but on the surface he looks calm and ready
To drop bombs, but he keeps on forgettin
What he wrote down, the whole crowd goes so loud
He opens his mouth, but the words won't come out
He's chokin, how everybody's jokin now
The clock's run out, time's up over, bloah!
Snap back to reality, Oh there goes gravity
Oh, there goes Rabbit, he choked
He's so mad, but he won't give up that
Easy, no
He won't have it , he knows his whole back's to these ropes
It don't matter, he's dope
He knows that, but he's broke
He's so stagnant that he knows
When he goes back to his mobile home, that's when it's
Back to the lab again yo
This whole rap shit
He better go capture this moment and hope it don't pass him

[Hook:]
You better lose yourself in the music, the moment
You own it, you better never let it go
You only get one shot, do not miss your chance to blow
This opportunity comes once in a lifetime yo

The soul's escaping, through this hole that it's gaping
This world is mine for the taking
Make me king, as we move toward a, new world order
A normal life is borin, but superstardom's close to post mortem
It only grows harder, only grows hotter
He blows us all over these hoes is all on him
Coast to coast shows, he's know as the globetrotter
Lonely roads, God only knows
He's grown farther from home, he's no father
He goes home and barely knows his own daughter
But hold your nose cuz here goes the cold water
His hoes don't want him no mo, he's cold product
They moved on to the next schmoe who flows
He nose dove and sold nada
So the soap opera is told and unfolds
I suppose it's old partna', but the beat goes on
Da da dum da dum da da

[Hook]

No more games, I'ma change what you call rage
Tear this mothafuckin roof off like 2 dogs caged
I was playin in the beginnin, the mood all changed
I been chewed up and spit out and booed off stage
But I kept rhymin and stepwritin the next cypher
Best believe somebody's payin the pied piper
All the pain inside amplified by the fact
That I can't get by with my 9 to 5
And I can't provide the right type of life for my family
Cuz man, these goddam food stamps don't buy diapers
And it's no movie, there's no Mekhi Phifer, this is my life
And these times are so hard and it's getting even harder
Tryin to feed and water my seed, plus
Teeter totter caught up between being a father and a prima donna
Baby mama drama's screamin on and
Too much for me to wanna
Stay in one spot, another day of monotony
Has gotten me to the point, I'm like a snail
I've got to formulate a plot fore I end up in jail or shot
Success is my only mothafuckin option, failure's not
Mom, I love you, but this trailer's got to go
I cannot grow old in Salem's lot
So here I go is my shot.
Feet fail me not cuz maybe the only opportunity that I got

[Hook]

You can do anything you set your mind to, man.

Read More

Share Tweet Pin It +1

6 Comments

In உலகக்கோப்பை கால்பந்து ஜெர்மனி

Spain Vs Germany

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவை இறுதிப்போட்டியில் வீழ்த்தியதைப்போலவும் அந்தப் போட்டியில் மார்க் வாஹ் சென்சுரி அடித்தது போலவும் சந்தோஷமாக இருந்ததெனக்கு, அர்ஜெண்டினாவை 4 - 0 என்று ஜெர்மனி வீழ்த்திய பொழுது அதுவும் Klose இரண்டு கோல் அடித்து ஜெயிக்க வைத்த பொழுது. ஒரு விளையாட்டுப் போட்டியின் காரணமாய் நான் இத்தனை சந்தோஷமாய் இருந்தது சமீபத்தில் இதற்காகத் தான். சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி கூட இதில் 50% தான்.

அரையிறுதியில் ஜெர்மனியின் ஸ்பெயினுக்கு எதிரான ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன், அப்படியே எதிர்பார்த்த இங்கிலாந்து மற்றும் அர்ஜெண்டினாவிற்கு எதிரான ஆட்டங்கள் அவ்வளவு சுவாரசியம் இல்லாமல் போனது, ஜெர்மனி சென்ற இரண்டு உலகக் கோப்பை ஆட்டங்கள் போலில்லாமல், இந்த முறை ஜெர்மனி நிச்சயம் உலகக்கோப்பை வெல்லும் என்று எண்ணத்தக்க வகையில் ஆடி வருகிறார்கள்.

ஸ்பெயின் அணியின் மிக முக்கியமான பிரச்சனையாக நான் நினைப்பது, அவர்களின் டேவிட் வில்லா மீதான dependency தான். ஸாவி மற்றும் இனெய்ஸ்டா போன்ற நல்ல ஆட்டக்காரர்கள் இருந்தாலும், இந்த உலகக்கோப்பையில் ஸ்பெயின் கோல்களுக்காக டேவிட் வில்லாவையே சார்ந்திருக்கிறது. ஜெர்மனியின் ஷ்வைன்ஸ்டைகர், பொடொல்ஸ்கி, க்ளோஸே, முல்லர்(ரெட் கார்ட் என்பதால் ஆடமாட்டார்), காகு(Cacau), ஓஸில் என இந்த உலகக் கோப்பையில் கோல் மழை பெய்து வருகிறது ஜெர்மனி அணி.

இவர்களின் counter-attack மிகப்பிரமாதமாக வேலை செய்வதாலேயே செகண்ட் ஹாஃபில் இவர்களால் இரண்டு கோல்கள் போட முடிந்திருக்கிறது. அதுவும் பர்ஸ்ட் ஹாஃபில் ஒரு கோல் போட்டு ஜெர்மன் அணி லீடிங்கில் இருந்தால் செகண்ட் ஹாஃபில் மற்ற அணி கோல் போட அபென்ஸ் விளையாடும் பொழுது, இவர்களின் மிகச் சரியான பாஸிங்காலும், திறமையும் இளமையும் கூடிய இவர்களின் சென்டர் மிட்பீல்டர்களின் கட்டுக்கோப்பான ஆட்டத்தாலும் ஃபார்வெர்ட்(மட்டும்) விளையாடும் க்ளோசேவிற்கு பந்துகள் சுலபமாகக் கிடைக்கின்றன. அதிலும் ஜெர்மனி கேப்டன் பிலிப் லாமின் பாஸ்கள் ரொம்பவும் சொற்பமாகவே மிஸ் ஆகிறது, ஜெர்மனியின் டிஃபென்ஸ் இந்த உலகக் கோப்பையின் மிகச்சிறந்த ஒன்றாகவே இருப்பது இன்னமும் கூட ஜெர்மனியின் சாதகமான அம்சம்.


ஸ்பெயின் முதல் கோல் போட்டால் ஆட்டம் கொஞ்சம் விறுவிறுப்பாக இருக்கும், ஆனால் ஸ்பெயினின் டிபென்ஸ் மற்றும் ஜெர்மனியின் டிபென்ஸ் காரணமாக ஆட்டம் பெனால்டிக்கு வரவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் முதல் பாதியில் ஜெர்மனி கோல் போட்டால் 3-0 என்ற வித்தியாசத்தில் ஜெர்மனி ஜெயிக்க அதிக வாய்ப்பிருப்பதாகவே நினைக்கிறேன்.

Klose 15வது கோல் போட்டு ரொனால்டோவை சமன் செய்யவேண்டும் இந்த ஆட்டத்தில்.

Read More

Share Tweet Pin It +1

4 Comments

In Only ஜொள்ளூஸ்

நெஞ்சு மேல குத்தி வச்ச பச்சஅன்புள்ள மாமி
அழகாத்தான் இருக்க காமி
தெலுங்குல என்னன்னா ஏமி
உன்னைப்பார்த்து ஜொள்ளுவுட்டா குத்திடுமா சாமி
கண்ண குத்திடுமா சாமி
நெஞ்சு மேல குத்தி வச்ச பச்ச
மத்த நடிகைங்க உன்கிட்ட வாங்கணும் பிச்ச
அததை அங்கங்க வச்ச, ரொம்பச் சரியா வச்ச
நீ ஒரு சூப்பர் ஃபிகரு such a
delivery நேரம் வேலை செய்யணும் - அடச்சே

Read More

Share Tweet Pin It +1

4 Comments

Popular Posts