இந்த ஓவியங்கள் என் சேமிப்பில் வெகுகாலத்திற்கு முன் இருந்தது, சமீபத்தில் நான் இவற்றை இழந்திருந்தேன், தற்சமயம் மீண்டும் கைவரப்பெற்றேன். என் கதைக்கான ஓவியம் ஒன்றை மணியம் செல்வனிடம் வாங்கிடவேண்டும் என்கிற ஆசை இன்னும் நிறைவேறவில்லை, எங்கே கதையைப் படித்துவிட்டு இதற்கெல்லாம் வரைந்து தரமாட்டேன் என்று சொல்லிவிடுவாரோ என்கிற பயம் தான்.
Tags : ma. se, maniam selvan, maniyam selvan, mase, செல்வம், மணியம், மணியம் செல்வன், மா செ, மா. செ
இவை கிளாசிக் ஸ்டைல்... நன்றாக இருக்கின்றன... ஆனால் என்னைப் பொறுத்தவரையில் இளையராஜா ஓவியங்கள் - சான்ஸே இல்லை... நீங்கள் இளையராஜா ஓவியங்களை பார்த்திருக்கிறீர்களா...
ReplyDeleteஇளையராஜா ஓவியங்கள் பார்த்திருக்கிறேன், அவற்றின் இயல்புத்தன்மை பிடித்திருக்கின்றது. ஆனால் மணியம் செல்வனிடம் ஓவியங்களுடன் இளையராஜா ஓவியங்களை ஒப்பிட முடியாது பிரபாகரன்.
ReplyDeleteமணியத்தின் ஓவியத்தில் இருக்கும் கோடுகள் காவியம் பேசுகின்றன.
@மோகன்தாஸ் - இது வரை பார்த்திராத ஒவியங்களை பகிர்ந்ததற்கு முதல் நன்றி!
ReplyDeleteமணியத்தின் ஒவியங்கள் ஒவ்வொன்றும் கவிதைகள்.
அந்தக் கண்களும், முகபாவங்களும், உணர்வுகளும் - அப்பப்பா, இவை வெறும் கோடுகள் அல்ல - உயிரோவியங்கள்!
இந்த ஒவியங்களின் முழு நீள ப்ரதிகள் கிடைக்குமா?
அருமையான ஓவியங்கள்
ReplyDelete