In

உத்தம வில்லன்

எல்லாப் படங்களும் எல்லோருக்குமல்ல என்பதை இன்னொரு முறை சொல்கிறது உத்தம வில்லன். மணிரத்னம் எடுத்த குப்பை OKK போலில்லாமல் புதிய முயற்சி. அதற்குள்ளும் இணையத்தில் வெளியாகிவிட்டது உத்தம வில்லன். அமெரிக்காவில் நான் இருக்கும் ஊரில் இல்லாமல் ஒன்றரை மணிநேர பயண தூரத்தில் இருக்கும் ஊரில் வெளியாகியிருந்தது. நான் எங்கே பார்த்தேன் என்பதற்குள் போகவிரும்பவில்லை. இணையம் கதறித்தீர்த்திருந்தது அதற்குள், பார்ப்பதா வேண்டாமா என்பதைப்பற்றிய கேள்விகள் இல்லை.

கதை தெரிந்திருக்கும் எனக்கும் கதை சொல்லிச் செல்வதில் விருப்பமில்லை. பேச விரும்புவது கமல்ஹாசனின் இந்தப் படத்திற்கான தேவை என்னவாகயிருக்க முடியும் என்பது. மக்களுக்குப் பிடிக்கும் ஒரு படத்தை கமலால் எடுக்க முடியாதென்பதல்ல, செய்யாதவருமல்ல, கமலுக்கு  பஞ்ச தந்திரம் போல் ஒரு கதையைத் திரைக்கதையாக்கி படமாக்க எளிதாகவே முடியும் என்று நினைக்கிறேன். ஆனால் இது போன்ற பரீட்சைசார்ந்த படத்தை - அப்படிச் சொல்லவே வாய் வரலை - ரொம்பச் சாதாரணமான படம் தான் இதுவும், என்டர்டெய்ன்மென்ட் வால்யூ இல்லை - அதையும் ஒப்புக்கொள்ள முடியவில்லை. இது தமிழ்ச்சினிமா பற்றி நாம் ஏற்படுத்தி வைத்திருக்கும் ஒரு கற்பனை தானே. மூன்று படங்கள் வருகிறதே ஒன்று இப்படியிருந்துவிட்டுப் போகட்டும் என்று கமல் விட்டிருக்கலாம். 

எனக்குப் பிடிக்காத அம்சங்கள் இதில் இருந்தது, பாலச்சந்தருக்கு நடிக்க வரலை, பூஜா குமார் சுத்தம். இயல்பாய் வந்திருந்தது ஊர்வசியுடைய நடிப்பு தான், மிகையைத் தொடாமல் விட்டுவிலகியிருந்தார். பாலச்சந்தர் ஒருமுறை சொல்லியிருந்தது போல், கமல் ஒரு படத்தில் காட்டத்துடிக்கும் விஷயங்களைக் கட்டுப்படுத்த முடிந்தால் இன்னமும் கிரிஸ்பாக படம் வந்துவிடும் தான். எல்லாவற்றையும் ஒரே படத்தில் போட்டுக் காட்டவேண்டிய கட்டாயத்தையும் அவருக்குத் திணித்தது கோடம்பாக்கமும் தமிழ் சினிமா ரசிகர்களும் தான். 

இது போன்ற படமெடுக்கும் துணிபு கமலுக்குத்தான் வருமென்ற சொல்ல முடியவில்லை, இன்னமும் சினிமாச்சூழல் படத்தில் வெளிப்பட்டிருக்கிறது என்றும் சொல்ல முடியவில்லை. ஆனால் இதற்கே குதிக்கும் தமிழ்ரசிகர்கள் இன்னும் ப்ளாக்-ஆக இன்னும் வறட்சியாக எடுத்திருந்தால் என்னவாகியிருப்பார்கள் என்பதையும் யோசிக்க வேண்டியிருக்கிறது. 'வோ லம்ஹே' படத்தில் வரும் ஒரு காட்சியை கமல் எடுக்க இன்னும் எத்தனை காலம் ஆகும் என்று தெரியாது. சொல்லப்போனால் எனக்கு இந்தப் படத்தில் பிடிக்காததே, தமிழ்ரசிகர்களுக்காக கமல் தன்னைத் தானே கட்டுக் கொண்டிருக்கும் போக்கு தான். இந்தப் பக்கமும் வராமல் அந்தப் பக்கமும் வராமல் மத்தியில் நின்றிருக்கிறார் கமல். கலைப் படம் எடுக்கத் தெரியாதவர் அல்ல, வணிக சினிமாவும் எடுக்கத்தெரியாதவர் இல்லை, ஆனால் மத்தியில் மாட்டிக் கொண்டு விழிக்கிறார் இக்காலங்களில், ஏதாவது ஒரு பக்கம் நகர்ந்துவிடுவது அவருக்கும் தமிழ்ச்சினிமாவுக்கும் நமக்கும் நல்லது. 

அவர் கதை - திரைக்கதைக்கு மற்றவர் இயக்குநர் என்றால் அது எப்படிப்பட்டமாயிருக்கும் என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு, எங்கே ரசிகர்கள் ஏமாந்தார்கள் என்று தெரியாது. கடைசி கமலஹாசன் படங்களைப் பார்த்தாலே இம்மாதிரியான படத்திற்கான தேவையும் அதை கமல் செய்யாமல் விடமாட்டார் என்பதும் தெரிந்தேயிருக்கும். மீண்டும் சொல்கிறேன், எப்பொழுதும் எல்லாப்படமும் எல்லோருக்குமல்ல. இதில் உயர்த்தி தாழ்த்தி சொல்வதில் எதுவும் இல்லை, நான் எல்லாப் படங்களையும் தொடர்ச்சியாய் பார்த்தே வருகிறேன், நெட்ப்ளிக்ஸில் ஐந்து நட்சத்திரத்திற்கு ஒன்று வாங்கிய படங்களையும். சினிமா என் வாழ்க்கையின் ஒரு பாதி என்று முடிவு செய்திவிட்டிருக்கிறேன், இன்னமும் சுஜாதா போல் ஆகவில்லை, கொஞ்ச காலம் தான் உயிர்வாழ்வேன் என்று தெரிந்த பின்னால் மட்டுமே நான் சினிமாவில் காலம் தள்ளுவதை நிறுத்துவேனாயிருக்கும். 

இதை உத்தம வில்லன் விமர்சனம் என்று சொல்லவில்லை, தொடர்ச்சியாய் இணையத்தில் பார்த்த விமர்சனங்களால் தோன்றிய எண்ணம். சுஹாஸினி சினிமா விமர்சனம் பற்றிச் சொல்லியதற்கு கமல் கொடுத்த வியாக்கியானம் சரியானதல்ல, ஆனால் அது அவருடைய பர்ஸனல் ஒப்பினீயன் என்றே எடுத்துக் கொள்கிறேன். சில பல காரணங்களுக்காக இந்தப் படத்தையும் தமிழ்ச் சினிமாவின் முக்கியமான படங்களில் ஒன்றாகச் சொல்வேன் தான், இன்னமும் நன்றாக எடுத்திருக்கலாம், ஆனால் அது தமிழ்மக்களுக்கு மொத்தமாகப் பிடிக்காமல் போயிருக்கும் என்றே நினைக்கிறேன்.

___________________________________________________

எம்டிஎம் விமர்சனம் பார்த்தேன். பின்னர் இன்னும் சில எம்டிஎம் சொல்லும் புள்ளியில் நின்று. ஆனால் இந்தப் படம் முக்கியம் என்றால், எம்டிஎம் சொல்லும் அதே புள்ளிக்காகத்தான். அவர்களுக்கு வெறுப்பதற்கான புள்ளி என்றால் எனக்கு இந்தப் படம் பிடித்திருப்பதற்கான புள்ளி அது தான்.

ஆக, விஷம் தோய்ந்த நகங்களால் தன்னைத் தானே கீறிக்கொள்ளும் நரசிம்மர் பிரகலாத சரித்திரம் நாடகத்தில் இறந்து போகிறார். இப்படி ஒரு காட்சியை எந்தவிதமான சிந்தனையுமில்லாமல் படத்தில் அமைத்தவர்களை என்னவென்று அழைப்பது? படு முட்டாள்களா இல்லை அடிப்படை பண்பாட்டு உணர்வு இல்லாதவர்களா? என்ன மாதிரியான ஆட்கள் இவர்கள்? எங்கிருந்து வந்தார்கள் இவர்கள்? நம் தொல்கலைகளோ அவற்றின் சடங்கியல் புனிதமோ பவித்திரமோ அரிச்சுவடி கூட தெரியாமல்  உத்தமவில்லன் படத்தில் தெய்யமும் அதன் அலங்காரங்களும் முகமூடியும் அவற்றின் exotic மதிப்புக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன.
இவர்கள் தொடர்ச்சியாக மற்றவர்கள் தொடக்கூடாத விஷயம் என்ற ஒரு விஷயத்தை நிலை நிறுத்துகிறார்கள்.  கமலால் இத்தனை துள்ளியமாய் கிறிஸ்துவத்தை, இஸ்லாத்தை துகிலுறிக்க முடியுமா என்று கேட்பவர்களுக்கு பதில் ஒன்றுதான். இன்னமும் இந்தியாவில் தமிழகத்தில் இவை சிறுபான்மை மதங்கள் தான், அதைப்பற்றிய விரிவான விமர்சனம் அந்த மதங்கள் பெரும்பான்மையாக இருக்கும் நாடுகளில் இருக்கும், அது அப்படித்தான் முடியும். பில் மாஹ்ர் அளவிற்கு கிறிஸ்துவத்தை ஓட்டுபவர்கள் குறைவு தான்(பில்-இடம் எனக்குப் பிடிக்காத ஒரே விஷயம் தற்சமயத்தில், இஸ்லாம் பற்றி அவர் வைக்கும் விவாதம்.) இப்படி இவர்கள் கதறுவதற்காகவே இந்தப் படத்தை ஆதரிக்க வேண்டும்.

PS: Updated the post after reading MDM review. 

Related Articles

0 comments:

Post a Comment

Popular Posts