In American Diary

தொடர்ச்சியற்ற எண்ணங்கள்
அமெரிக்காவிலிருந்து பயந்துபோய் இந்தியாவிற்கு வெளியேறிய இந்திய க்ரூப் ஒன்று எப்பொழுதும் உண்டு, நான் வேலை பார்த்த, டெல்லி புனே பெங்களூர் என்று அத்தனை இடங்களிலும் இப்படிப்பட்டவர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்களுக்குள் அடிபட்ட புலி ஒன்றுண்டு பசியுடன், பொதுவாக கொஞ்சம் விலகியே இருப்பது அவர்களிடம்.

என்ன சொன்னாலும் இங்கிருக்கும் இந்தியர்கள்/கொஞ்சம் அமெரிக்கர்களும் அவர்களை தோற்றுப்போனவர்களாகவே கருதுகிறார்கள், இதைப்பற்றி நிறைய பேசியதுண்டு. இவர்களிடம் சமயங்களில் வெளிப்படும் துவேஷம் கடும் விஷத்துடன் இருக்கும். இவர்களை நீங்கள் சுலபமாக அடையாளம் காண முடியும்.

இவர்களில் ஒருவனாக நான் மாறிவிடக்கூடும் என்பதால் இவர்களைப் பற்றி நிறைய யோசித்திருக்கிறேன். நாள்தோறும் மாற்றத்துடன் சுழலும் எதிர்காலம் எனக்காக என்ன வைத்திருக்கிறது என்று நானறியேன். ஆனால் வெஞ்சினம் இல்லாமல் தோல்வியை ஒப்புக்கொண்டவனாய் வெளியேறிவிடவே ஆசைப்படுகிறேன். காத்திருந்து கீறுவதில் இல்லை உடன்பாடு. எத்தனை நேரம் ஆகிவிடும் மற்றவர்களுக்கு திரும்ப கீறிவிட.

ஜாக்கிரதை பிள்ளாய்!

---------------------------------------

அமெரிக்கா வந்து அஞ்சி வருஷமாச்சி, இன்னும் யாராவது NRIன்னு சொன்னா, யாரு யாருன்னு தான் மனசு தேடுது.

நானும் NRI என்று மனம் ஒத்துக்க மாட்டேங்குது. :) May be because I had a very high opinion about them. :) யாரோ ஒருத்தர் டிவிட்டரில் என்னை NRIன்னு திட்டம்பொழுது யாரையோ திட்டறார்னு நினைச்சிக்கிட்டிருந்தேன். :)

அய்யோ அய்யோ!


---------------------------------------


நாங்கள் முதல் நாள் இரவு பத்து மணி போல் One World Centerற்குச் சென்றிருந்தோம், ஒரு திட்டமிடப்படாத பயணம். இரட்டை கோபுரங்கள் இடிக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்டிருப்பது இந்த One World Center. 9:00மணி இரவிற்கு மூடிவிட்டதால், அன்னாந்து பார்த்துவிட்டு வந்துவிட்டோம். இதைச் சொல்வதற்குக் காரணம் அன்றிலிருந்தே ஒரு வகையான உணர்ச்சிகரமான மனநிலை இருந்தது.

அடுத்தநாள் Intrepid museum சென்று மீண்டதும் நாங்கள் அல்பேனி மீள்வது தான் திட்டமாக இருந்தது. ஆனால் என்னவோ 911 museum சென்று வரவேண்டும் என்று தோன்றியது. Intrepid museumத்தில் நடந்து ஏற்கனவே முழுமையாக சோர்ந்து போயிருந்தோம். சரி கடைசியாய் இதைப் பார்த்துவிட்டு மூட்டையைக் கட்டுவோம் என்று முடிவெடுத்தோம்.

911 Museum waterfall அருகில் வந்து சில நிமிடங்கள் நின்றிருந்தோம். அங்கே இறந்தவர்களின் பெயர்களை கிரானைட் கல்லில் செதுக்கி வைத்திருந்தார்கள். அதில் ஒரு பெயர் சட்டென்று மனதைக் கவ்வியது. ‘X with her Unborn Child' என்று. உடன் வந்தவர் அந்தப் பெயரையே கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டு அந்தப் பெயரைத் தடவியபடி இருந்தார். நாங்கள் பேசிக்கொள்ளவில்லை.

Unborn Child என்பது எனக்கு புதிய விஷயம் கிடையாது, கிட்டத்தட்ட 10 வருடங்களாக நான் அறிந்த Use Case தான். நாங்கள் வேலை செய்யும் டொமைனில், Pregnant Women, Unborn Child எல்லாம் Use Caseகள். அமெரிக்கர்களுக்கு உதவி செய்ய பெரும்பாலும் கேட்கும் கேள்விகள் தான். அதன் பின்னே அவர்களுடைய benefit களுக்குக்கான ரூல் என்று unborn child பற்றி டெக்னிக்கலாக நிறைய பேசியிருக்கிறோம், எழுதியிருக்கிறோம் - ப்ரொக்கிராம்கள். ஆனால் அவை எல்லாமே உயிருடன் பிறக்கப்போகும் குழந்தையைப் பற்றியது. ஆனால் அங்கே குறிப்பிட்டிருந்தது, ஒரு கர்ப்பிணி பெண்ணைப் பற்றி, அவளுடைய இன்னமும் பிறக்காத குழந்தையைப் பற்றி.

பின்னர் 911 Museumத்தில் விமானத்திலிருந்து வாய்ஸ் மெயில் விட்டவர்களில் குரலைக் கேட்ட தருணத்தில் நான் வெளியேறிவிட்டேன். என் மொபைல் ஸ்விட்ச்ட் ஆஃப் என்று தெரியும் நண்பர் தேடுவார் என்று தெரியும். ஆனால் என்னால் அங்கு இருக்க முடியவில்லை. நண்பர் பின் என்னைத் தேடிக் கண்டுபிடித்து பின்னர் நாங்கள் சரவணபவன் வந்து உட்கார்ந்ததும். அந்தக் கேள்வி வந்தது, எங்கப் போனாய் என்று. நான் அவரிடம் ‘I couldnt take it' என்று சொன்னேன். அப்பொழுது அவர் 10 நிமிடம் அந்த ‘Unborn Child' என்ன பாடு படுத்தியது என்று சொன்னார். நாங்கள் இருவருமே எமோஷனலாக இருந்தோம். அதைப் பற்றி நான் அவரிடம் முன்பு பேசியிருக்கவில்லை, ஆனால் அவரும் கவனித்திருக்கிறார், அந்த வார்த்தை தன்னை எப்படி உலுக்கியது என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

நாங்கள் இருவருமே முன் பின் பார்த்திருக்காத அந்த இன்னமும் பிறக்காத குழந்தை எங்களை ஆட்டிப் படைக்கும் திறமையுள்ளதாக இருந்தது. இனி Unborn Child Used Caseஐப் செயல்படுத்திப் பார்க்கும் பொழுதெல்லாம் நினைவில் வரக்கூடும் அந்தக் குழந்தை. இனி அந்தக் குழந்தையை எப்படி மறப்பது?!

PS: இந்த டிரிப் சென்றிருந்த பொழுது, நியூயார்க் சிட்டியில் எடுத்த புகைப்படம் இரண்டு. ப்ரூக்ளின் ப்ரிட்ஜ்.
------------------------------------

இப்பொழுதுகளில் ஒருவரை தூக்கியெறியவும் கட்டிக்கொள்ளவும் ஒரு நிகழ்வே போதுமானதாய் இருக்கிறது.

கேரள சிஎம் நெருக்கமானது இப்படித்தான்.

ஞானி நெருக்கமானதும் இப்படித்தான். புலிக்குகை பற்றி அவர் எழுதிய வரி ஒன்று போதுமெனக்கு.

மனதுக்குள் பிரியாரிட்டி கொண்ட லிஸ்ட் எப்பொழுதும் உள்ளது. இத்தனைக்கும் பின்னர் PAKஅய் தூக்கியெறிய முடியாததை இன்னமும் ஆராய்ந்து பார்க்கத்தான் வேண்டும். அவர் விஷயத்தில் எனக்கு உள்மனதுக்கு புரிந்ததொன்று உண்டு. புலிகள் விஷயம் எனக்கு எமோஷனலாக ரொம்பவும் முக்கியமான ஒன்று. ஆனால் அதைத்தாண்டியும் என் எல்லை விரியுமென்பது. அதில் முதலாவது ராஜன் இரண்டாவது PAK.

இன்னமும் யோசித்துப்பார்க்கணும்.

மனைவி மக்கள் இல்லாத இந்தப் பொழுதை மீண்டும் புக்கோவிஸ்கியிடம் இழக்காமல் இருக்கணும். 

-----------------------------------


இந்தப் பதிவில் இருக்கும் புகைப்படங்கள் அனைத்தும் நான் எடுத்தது தான். ப்ரிஸ்மா அவுட்புட்டில்.

Related Articles

0 comments:

Post a Comment

Popular Posts