In நாட்குறிப்பு

Big Boss
அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டு போரடிக்கும் காலத்தில் ஏதாவது தமிழ்ப்படம் பார்ப்பது தான் வழமை. பெரும்பாலும் வியாழக்கிழமை வெளியாகும் படங்கள், வெள்ளிக்கிழமை டிவிப்பெட்டியில் பார்த்துவிட்டு. அடுத்து வெள்ளிக்காக காத்திருப்பது வழமை. அதாவது ஒரு நாளை ஒரு மணிநேரமாவது குடும்பமாக உட்கார்ந்து பார்ப்பதற்கு ஏதாவது வேண்டும். மனைவிக்குப் பாடல்கள் எனக்கு நகைச்சுவை என தனி ரசனைக்காக தமிழில் ஏதாவது ஓடிக்கொண்டிருக்கும்.

வாராது வந்த மாமணியாய் பிக் பாஸ். கமலுக்காகத்தான் பார்க்கத் தொடங்கியது. பின்னர் ஜூலிப் புள்ளையை கொடுமை பண்ணுகிறார்களே என்று நீண்டு, ஓவியாவின் மீது காதல் கொண்டு, பின்னர் பரணிக்காய் அழுது என்று இப்பொழுது கஞ்சா கருப்பை வெளியேற்றியது கொஞ்சம் மன நிம்மதியுடன் இருக்கிறோம். எங்கள் இருவருக்கும் பரணியை ரவுண்டு கட்டுவது பிடிக்கவில்லை. ஆனால் நாங்கள் கஞ்சா கருப்பைத்தான் தூக்குவானுங்கன்னு ஊகிச்சோம்.

பரணி: பயபுள்ள என்ன பண்ணான்னு தெரியலை நாடோடிகள் ஷூட்டிங்கில். ஆனா கஞ்சா கருப்பு மாதிரி ஊர் நாட்டானுங்களுக்கு எந்தக் காரணமும் இல்லாமல் இப்படி பைத்தியம் பிடிக்க வாய்ப்பு உண்டு.
கஞ்சா கருப்பு: பரணிப்பய இல்லாட்டி இந்தாள ரொம்ப நாள் வைச்சிருந்துருப்பானுங்க. ஆனா மொத்தக் கூட்டத்திலும் லூசு இந்தாளு தான். பாலா ஒரு திரைப்பட விழாவில் திட்டின பொழுது. சட்டென்று மனசுக்கு வலித்தது. ஆனா பாலா சொன்னது தான் சரி. ச்சை முட்டாப் பய.
ஆர்த்தி: இவ ஐஏஎஸ் படிக்கப்போறேன்னு விகடன்ல சொல்லியிருந்தா. ஞாபகமிருக்கு. குண்டாயிருந்து கஷ்டப்படுறாளேனு மனசுல எப்பவும் ஓடும். பொறாமைன்னா இந்த பதினைஞ்சி பேத்தில பொறாமை இவளுக்குத் தான் அதிகம். காரியக்காரி. ஆனா சக்தி கூடயெல்லாம் சண்டை போடுவதில் தெரிகிறது இவளுக்கு ஸ்ட்ராடஜி இல்லைன்னு.
ஜூலி: வாயி வாயி வாயி. என்னா வாயி. பச்சோந்தி. ஜல்லிக்கட்டு சமயத்தில் அத்தனை பெரிய இமேஜ் எல்லாம் என் மனதில் உருவாகாததால், குறையறதுக்குன்னு பெரிசா இல்லை. ஆனா ஆரம்பத்தில இவளை ஆர்த்தியும், காயத்ரியும் வம்பிழுக்க கடுப்பானது உண்மை. இவளோட பச்சோந்தித்தனம் கடுப்பையே வரவழைக்கிறது.
நமீதா: இவளைப் பத்தி மக்கள் பொதுவா என்ன நினைக்கிறாங்கன்னு கூடவா தெரியாது இவளுக்கு. ஜூலிக்கு மேக்கப்போட்டது இவ சிரிச்ச மாதிரி தான் பிக்பாஸு ஆரம்பத்தில் இவ போட்ட ஆட்டத்துக்கு மக்கள் சிரிச்சதும். வேஸ்ட். கமல்ஹாசன் அங்கிள் சரியா அசிங்கப்படுத்துனாரு, கடவுள் உங்கக் கூட பேசினா அது உங்களுக்கு பைத்தியம்னு. ஆளும் இவளும்.
சக்தி: இந்தப் பயலுக்கு என்னவோ பிரச்சனையிருக்கு, ஏன் இப்புடி மூச்சிறைக்குது இவனுக்கு? ஹை பிபி போல. இவனை ப்ரொமோட் பண்ணுவோம்னு ப்ராமிஸ் பண்ணியிருப்பானுங்க போலிருக்கு. விஜய் டிவி, தேவையில்லாம இவனை ப்ரொமோட் செய்யறானுங்க பிக் பாஸுக்குள்ளயே.
ரைஸா: இந்த மாதிரி மூளைக்கே வேலையில்லாத ஆள் கொஞ்ச காலம் பிக் பாஸில் தாக்குப் பிடிப்பாள். கஞ்சா கருப்பு வெளியே போனதுக்கெல்லாம் அழுவுற ஆள் கஷ்டம் தான்.
வையாபுரி: எனக்கென்னாமோ இந்த பிக் பாஸில் கொஞ்சம் நியாயமா நடுத்துக்குற ஆள் இந்தாளு தான்னு தோணுது. நல்ல மனுஷன். பரணி விஷயத்துல கொஞ்சம் தவறு இருக்குதுன்னாலும் அது கஞ்சா கருப்பால.
சினேகன்: இவன் சக்க மொக்க. ஃபேக். இந்த மொத்த கூட்டத்துலயும் ஃபேக் இந்தப் பய தான்.
கணேஷ்: தான் உண்டு தன் வேலை உண்டுன்னு இருக்கான். ஆளுகிட்ட தெரியும் பெண் தன்மை, அவன் லேங்க்வேஜ் இஷ்யூ இல்லையென்றே நினைக்கிறேன். நியாயமாவும் நடந்துக்குறான்.
ஆரவ்: காதல் படத்து பரத் மாதிரி, ஞெய் ஞெய்ன்னு மண்டையில அடிச்சிக்கிட்டு அலையப்போறான்னு தோணுது. நியாயமா பேசுறான், ஆர்த்திக்கு ஆப்பு வைச்சிருவான்னு தோணுது.
காயத்ரி: பொய் புழுவி. நல்லா ஆர்த்தி திருப்பிவிடுற பக்கமெல்லாம் ஆடுறா. ஆட்டக்காரி. சொல்புத்திக்காரி. டைவோர்ஸி, குழந்தை குட்டியில்லையாட்டிருக்கு. வீட்டில் என்ன வேலை, பிக் பாஸில் பெஞ்ச் தேச்சிக்கிட்டிருக்கா. இப்போதைக்கு போகமாட்டா. யாரையும் மிஸ் செய்ய மாட்டான்னு ஊகிக்கிறேன்.
அனுயா: எவனாவது அந்த சுசிலீக்ஸ் வீடியோ உன்னுதான்னு கேப்பானுங்கன்னு நினைச்சேன். ச்சை முதல்லயே வீட்டுக்கு அனுப்பிட்டானுங்க.
ஸ்ரீ: இவனுக்கு சைக்கலாஜிக்கல் பிரச்சனை என்னமோ இருக்கு. பாவமாயிருந்தது என்னமோ உண்மை.
ஓவியா: இது டார்லிங். இவளை பிக்பாஸுக்கு முன்னமே பிடிக்கும் இப்ப ரொம்பவும் பிடிக்குது. பயபுள்ள சிகரெட் அடிக்கும் போலிருக்கு. சிகரெட் எல்லாம் லக்சுரி பட்ஜெட்டில் வராதா. ஸ்ட்ராடஜியான்னு தெரியலை, ஆனா இவ நடந்து கொள்ளும் விதத்தில் ஸ்ட்ராடஜி இருக்கு என்று ஊகிக்கிறேன்.இந்த வாரம், ஆர்த்தி ரைசா மற்றும் வையாபுரி எலிமினேஷனுக்கு நாமினே செய்யப்படுவாங்கன்னு ஊகிக்கிறேன். வையாபுரிக்குத் தான் எலிமினேஷன்.

- வாரத்திற்கு ஒன்று இப்படி எழுதப்படும்.

PS: நான் சின்னக் குழந்தையா இருக்கச்ச எனக்கு ரொம்பப் பிடிச்ச டிவி ஷோ. WWE.

Related Articles

11 comments:

 1. ஜஸ்ட் வேஸ்ஷ்ட்

  ReplyDelete
 2. இருந்துட்டுப் போகுது அனானிஜி.

  ReplyDelete
 3. உங்கள் அலசலில் நடுநிலையாய் எனக்கு படுகிறது

  ஓவியா மட்டும் சற்று மாறுதலாய் தோன்றுகிறது நண்பரே.

  இருப்பினும் தொடர்ந்து எழுதுங்கள் - கில்லர்ஜி

  ReplyDelete
 4. So much hate against those individuals not fair

  ReplyDelete
 5. கில்லர்ஜி, நன்றிகள்.

  அனானி - மனசில பட்டத எழுதினேன்.

  ReplyDelete
 6. If Aarthi comes in evict nominee she will eliminate by sure.

  ReplyDelete
 7. இது ஒரு ஷோ?!இதை பார்த்துட்டு நீரு இதுக்கு விம்ர்சனம் வேற?!! வீணாப் போன ஒலகநாயகன் காசுக்கு வழியில்லாம வாக்கரிசியை வச்சு பொழைப்பு ஓட்டும் பொணநக்கிகள் மாதிரி பிக் பாஸ்னு இந்த எழவைக்கட்டி அழுது காசு சம்பாரிக்கிறாரு போல. ரெண்டு நிமிஷம் பார்க்க முடியாத கேவலமான ஷோ இது.

  ஓட்டுக்கு காசு வாங்கிட்டு ஓட்டுப்போடுற அளவுக்கு தமிழ்நாடு ஆனதுகூட தப்பில்லை. அட் லீஸ்ட் அன்னைக்கு பொழைப்புக்கு காசு வாங்கி ஏழைகள் ஒரு நாள் பொழைப்பை ஓட்டுறான் விடுனு போயிடலாம். ஆனா இந்த மாதிரி ஒரு ஷோவை, ரியாலிட்டி ஷோ, இவனுக தாலினு பார்க்கிறவனை எல்லாம் அறையணும். உம்மையும்தான்!

  ReplyDelete
 8. ***அனானி - மனசில பட்டத எழுதினேன்.***

  உம்மைப் போலவே நானும் என் மனசில் பட்டதைத்தான் எழுதினேன். புரிஞ்சுக்கிட்டாச் சரி! இல்லை எனக்கொரு நாயம் ஊருப்பய்ளுக்கு ஒரு நாயம்னு நீர் என் பின்னூட்டத்தை வெளியிடலைனா, அதிலிருந்து "உன் தரம்" எனக்கு மட்டும் நல்லாப் புரிந்துவிடும்!சரியா?

  ReplyDelete

 9. காயத்ரி,ஆர்த்தி இரண்டு பேருக்கும் வேலை குடுத்து அனுப்பி இருக்காங்க அவங்களோட பலியாடுங்க ஜூலி பரணி சக்தி ஓவியாவிக்கும் வேலை குடுத்து அனுப்பி இருக்காங்க ஆரவ் அத புரிஞ்சிகிடலனா காதல் படத்து பரத் மாதிரி, ஞெய் ஞெய்ன்னு மண்டையில அடிச்சிக்கிட்டு அலையப்போறான்.அதே

  ReplyDelete
 10. அனானி, d மட்டும் தான் வந்திருக்கு மீதி வரலை.

  வருண் - நீங்க சொன்னதில் எதுவும் மட்டுறுத்துவது போல் இல்லை, அதனால் வெளியிட்டுவிட்டேன். அமெரிக்க டைம் டிஃப்ரன்ஸ் காரணமாய் தள்ளிப் போயிருக்கலாம்.

  யாஸிர், விக் - நன்றிகள்

  ReplyDelete

Popular Posts