In ஆடை உதிர்ப்பவள் ஸ்ட்ரிப் க்ளப்

அமெரிக்க தேவதைகள் - ஹாலன்ட்


பாடலுடன் தனிநபரை அடையாளப்படுத்தும், அவரை நினைக்கும் பொழுதெல்லாம் மனதில் அந்தப் பாடல் ஒலிரும் நிகழ்வு எப்பொழுதும் அமைவதில்லை. மியாவின் ‘லிவ் ஃபாஸ்ட் டைய் யங்’ பாடல் அவளுக்கானது, அவள் பெயர் ஹாலன்ட் - முழு பெயரும் தெரியுமென்றாலும் அவளுக்கு பிடித்த மாதிரியே இதை எழுதிவிடலாம் என்று மனதில் ஓடுவதால் ஹால்ன்ட் மட்டும். சௌத் கரோலினாவின் கிரீன்வில் நகரத்தில் அத்தனை புகழ்பெறாத லஸ்ட் ஸ்ட்ரிப் க்ளப்பில் ஆடை உதிர்ப்பவள். இந்த வகைப் பெண்களுக்கு இப்படி ஒரு பாடல் இருக்குமென்றாலும் ஹாலன்ட்-டின் முதல் பாடல் எப்பொழுதும் லிவ் ஃபாஸ்ட் டைய் யங் தான். ஒரு முறை டிஜே ஹாலன்ட் மீதான கோபத்தினால் வேறொரு பாடலை போட்டுவிட, இவள் உதிர்த்து முடித்துவிட்டு கோபத்தில் கண் கலங்கியது நினைவில் இருக்கிறது. இளமை கொஞ்சிய 60 கிலோ மெல்லிடை தேகத்திலிருந்து கனக்கும் 90 கிலோவிற்கு அவள் ஊதிய பொழுது அவள் தனங்களின் கனமும் கூடியிருந்தது தான் இப்பொழுது எழுதும் பொழுது சட்டென்று நினைவில் வருகிறது. எடைபார்க்கும் கருவிகளாலில்லை அவளுடனான நடனப் பொழுதுகளில் அவள் உட்கார்ந்த கனம் விழுந்த தொடைகளின் வலியால் தெரியும். புகழ்பெறாத என்றால் புகழ்பெற்றதும் இருக்கவேண்டுமே, அப்படி ஒன்று கிரீன்வில்லில் இருந்தது ப்ளாட்டினம் ப்ளஸ். ஐ-85 சவுத்தில் கிரீன்வில் சிட்டிக்குப் போகும் வழியில் இந்த பிரம்மாண்டமான ஸ்ட்ரிப் க்ளப்பில் கவனம் சிதறாமல் வண்டி ஓட்டிவிட முடியாது. அட்லாண்டா - ஜார்ஜியா, ராலே - நார்த் கரோலினா போன்ற நெருக்கமான நகரத்து மக்கள் மட்டுமல்ல ஒரு முறை மயாமி - ப்ளோரிடாவிலும், லாஸ் வேகஸ் நெவேடாவிலும், நியூயார்க் சிட்டி - நியூயார்க்கிலும் கூட நான் கிரீன்வில் நகரத்தவன் என்று சொன்னதும் மக்கள் குறிப்பிட்டு ப்ளாட்டினம் ப்ளஸ்ஸைக் கேட்ட அனுபவம் உண்டு. அமெரிக்காவிலே கிரீன்வில் - சௌத் கரோலினா அத்தனைப் பிரபலமான பெரிய நகரமல்ல, இன்னும் சொல்லப்போனால் பைபிள் பெல்ட் என்று சொல்லப்படும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஆல்கஹால் விநியோகம் மறுக்கப்படும் கன்சர்வேட்டிவ் களம் தான். சிவில் வார் என்று நார்த் அமெரிக்காவின் நார்த் அமெரிக்காவும் சவுத் அமெரிக்காவும் சண்டை போட்டார்கள் என்று நீங்கள் பாடங்களில் படித்திருக்கக் கூடும் ஆனால் இந்த சவுத் அமெரிக்க மாநிலங்களில் அதிக சண்டை அல்லது மொத்தமாகவே சண்டை நடந்தது சௌத் கரோலினாவில் தான். ஏன் சிவில் வார் என்று கேட்கலாம் அடிமைகளாக கறுப்பினத்தவரை தேயிலை தோட்டங்களில் வைத்துக் கொள்வதை நிறுத்தச் சொன்னதை எதிர்த்து தென் அமெரிக்க மாநிலங்கள் போட்ட சண்டை தான் சிவில் வார். ஏன் ஞாயிற்றுக்கிழமை மட்டும் மது விற்பனை கிடையாது என்று கேட்கலாம், காரணம் ஞாயிற்றுக்கிழமை சர்ச் போகவேண்டும் என்பதற்காக. அத்தனை கன்சர்வேட்டிவ். இந்த ஆடை உதிர்க்கும் ஆட்டையில் வேடிக்கை என்னவென்றால் - வேடிக்க மட்டுமில்லை சிறிது விநோதமும், ஆனால் உள்நோக்கிப் பார்த்தால் முக்கியமான விஷயமொன்றும் உண்டு - அது இந்த வகைப் பெண்கள் சொந்த ஊரில் மட்டுமல்ல சொந்த ஊருக்கும் பக்கத்து ஊர்களில் கூட வேலை செய்வதில்லை. அதனால் கிரீன்வில் அவர்களுக்கு பாதுகாப்பானது.

ஹாலன்ட் ப்ளாட்டினம் ப்ளஸில் இல்லாமல் லஸ்டில் ஆடை அவிழ்க்க பெரிய காரணம் ஒன்றும் இல்லை அவள் தோழி ஒருத்தி இங்கே அவளுக்கு முன்பே அவிழ்ந்து போய் நிர்வாணத்தில் இருந்தாள் அவ்வளவுதான். பொறாமைகளுடனான தொழில் தான் என்றாலும் தோழிகளுடன் இருப்பது பாதுகாப்பு, குறைந்த பட்சம் ஆரம்ப காலங்களில்.

ப்ளாட்டினம் ப்ளஸின் நடன அறை பிரம்மாண்டமானது, லஸ்டின் பரப்பளவை விடவும் ஐந்து ஆறு மடங்கு பெரிதானது. இளம் பெண்கள், நிறைய பெண்கள் என்று பொதுவாய் நீங்கள் ஸ்ட்ரிப் க்ளப் செல்லும் காரணங்களுக்கு எல்லா விதத்திலும் உகந்தது, ஆனால் இந்த இரண்டு க்ளப்பிற்கும் இடையில் ஒரு முக்கிய வித்தியாசம் இருந்தது. அது ஸ்ட்ரிப் க்ளப்கள் பொதுவாக எப்படி செயல்படும் என்பதில் பொதிந்திருந்தது. நுழைவுக் கட்டணம் ஒன்றை - கிரின்வில் போன்ற நகரங்களில் 10 அல்லது 20 டாலர்கள் - செலுத்திவிட்டு க்ளப்புக்குள் வந்தால், குறைவாக ஒளியூட்டப்பட்ட ப்ரம்மாண்ட அறையில் அங்கங்கே கொஞ்சம் இடைவெளிவிட்டு, இரண்டு பேர் உட்கார்வதற்கான வசதியுடன் இருக்கை மற்றும் இரண்டு மூன்று பியர் பொத்தல்கள் மட்டுமே வைக்க முடியும் வட்ட வடிவ குட்டி மேஜை, இதில் எந்த காலி இடத்திலும் அமரலாம். ப்ளாட்டினம் ப்ளஸில் இது போல் 100 பேர் உட்கார்வதற்கான வசதி இருக்குமென்றால், லஸ்டில் 30 நபர்களுக்கு மட்டுமே இருக்கும். பொதுவாக இப்படி நீங்கள் உட்கார்ந்ததும் காக்டெய்ல் வெய்ட்ரஸ் நீங்கள் ஒரு தீர்த்தமாவது வாங்குவீர்கள் என்று எதிர்ப்பார்ப்பார்கள். பெப்ஸியோ பியரோ இல்லை ஆன் த ராக்ஸ் லிக்கரோ பிரச்சனையில்லை. ஏனென்றால் அதற்கான பணம் க்ளப்பிற்கு, ஆனால் நீங்கள் கொடுக்கப்போகும் டிப்ஸ் ஒரு டாலரோ இல்லை இரண்டு டாலரோ அவர்களுக்கு. அதனால் ஏதாவது ஒன்று வாங்கியே ஆகவேண்டும். இந்தப் பணிப்பெண்களுக்கான சம்பளம் என்பது ஒரு மணிநேரத்துக்கு 10$ இருந்தாளே பெரிய விஷயம். பெரும்பாலான சமயங்களில் இந்தப் பெண்கள் ஆடை உதிர்க்கும் பெண்களை விடவும் நலினமாக அழகாக கண்கவரும் வகையில் இருப்பார்கள். இவர்கள் ஆடை அவிழ்ப்பைச் செய்யாமல் வெறும் பணிப்பெண்களாக இருப்பதற்கு நிறைய காரணம் இருக்க முடியும், அதில் முக்கியமானது கொள்கை அளவினானது. ஆடை அவிழ்ப்பு மேடையைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் இந்த இருக்கைகள் அவர்களின் கண்காணிப்பில் இருக்கும்.

ப்ளாட்டினம் ப்ளஸ்ஸில் இந்த ஆடை அவிழ்ப்பு மேடை பிரம்மாண்டமானது, ஒரே சமயத்தில் இருபது பேர் நடனம் ஆடக்கூடிய அளவு, ஆனால் மேடையின் நடுவில் இருக்கும் பளபளப்பான கம்பத்தில் ஒருவர் அல்லது சில குறிப்பிட்ட தருணங்களில் இருவர் மட்டுமே நடனம் செய்வர். ஸ்சேட்டிலைட் எனப்படும் துணை மேடைகளும் - அளவில் சிறியவை - பொதுவாய் இதே போன்று கம்பங்களுடன் பிரம்மாண்ட மேடையில் இடது வலது ஓரத்தில் இருக்கும். இந்தப் பெண்கள் முதலில் பிரம்மாண்ட மேடையில் இரண்டு பாட்டிற்கு உதிர்த்துவிட்டு பின்னர் தொடர்ச்சியாய் ஸ்சேட்டிலைட்களில் உதிர்க்கவேண்டும். எந்த வரிசையில் நடனம் ஆடவேண்டுமென்பது  அன்று அவர்கள் க்ளப்பிற்கு வந்த அடிப்படையில் பொதுவாக இருக்கும். அவர்களுக்கான அழைப்பு பாடலின் முடிவில் பொதுவாய் சொல்லப்படும். அன்றைய அவிழ்ப்பாளர்களின் கணக்குப் படி மணிக்கொரு முறையோ மணிக்கு இரண்டு முறையோ அவர்களுக்கான அழைப்பு வரும். ப்ளாட்டினம் ப்ளஸ் போன்ற பெரிய க்ளப்களில் வெள்ளி சனி ஞாயிறுகளில் இரண்டு மணிக்கொரு முறை அழைப்பு வருவதே பெரிய விஷயம். 

இந்தப் பெண்களுக்கு இரண்டு விதத்தில் பணம் கிடைக்கும், இப்படி மேடையில் ஆடை அவிழ்ப்பு செய்யும் பொழுது மேடை அருகில் அன்பர்கள் இறைக்கும் பணம். பின்னர் இந்த ஆடை உதிர்ப்பை ரசித்த சீமான்களை நடன மங்கையர்களின் இன்னபிற விஷேஷங்களில் மயக்கி தனிப்பட நடனத்திற்கு அழைத்துச் சென்று - லேப் டேன்ஸ் - இடை நடனம் - என்கிற பெயரில் வசூலிக்கும் பணம். இடை நடனம் என்று சொன்னதும் ஒருவேளை பெண்கள் இடுப்பை வளைத்து ஆட்டி நடனம் செய்வதைத் தான் சொல்வதாக நீங்கள் ஊகிக்க முடியும், காரணப் பெயரும் அப்படி வந்தது தான் என்றாலும். பொதுவாய் அவர்கள் ரசிகக் கண்மணிகளின் இடுப்பில் ஆடுவது தான் நடக்கும். மாநிலங்களின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு க்ளப்புக்களின் ஆடை அவிழ்ப்பு அளவும் இருக்கும். சில மாநிலங்களில் நீங்கள் மேலாடை இல்லாமல் இடை நடனம் செய்யக்கூடாது. சில மாநிலங்களில் மேலாடை இல்லாமல் போகலாம் ஆனால் கீழாடை அவசியம். சில மாநிலங்களில் இரண்டுமே அவசியம் இல்லை. அத்தனை நேரடியான சட்டம் கூட இல்லை. கொஞ்சம் விலக்கு உண்டு. சில மாநிலங்களில் கீழாடை இல்லாமல் நடனம் ஆட வேண்டும் என்றால் க்ளப்பில் மது விற்பனை செய்யக்கூடாது. முழுநிர்வாணம் என்பது கேட்க கிளர்ச்சியாய் இருந்தாலும் ஆடை உதிர்க்கும் கலையில் நிர்வாணம் கலைப்பொருளை இழந்துவிடும். இதனால் பொதுவாய் பெயர்பெற்ற க்ளப்கள் மேலாடை இல்லாத நடனத்தை ஊக்குவிப்பார்கள். கீழாடை வேண்டுமென்றால் பாவாடையோ ஜீன்ஸோ இல்லை ஒரு குட்டி ஜட்டி அவ்வளவே. குறியை மட்டும் மறைக்கும் அளவுக்கு. இந்த இடுப்பில் சிறிய ஆடை மட்டும் அணிந்த பெண்கள் உங்கள் மேல் உட்கார்ந்து உரசி மகிழ்விக்கும் நடனத்தை தான் இடை நடனம் என்ற பெயரிலில் அழைப்பது. பொதுவாய் பாடல் கணக்கில் பணம் வசூலிக்கப்படும், குறைந்த பட்சம் ஒரு பாடல் அதிக பட்சம் பணம் இருக்கும் வரை. இந்த ஆட்டத்திற்கு உங்களை அழைத்துச் செல்வதற்கு ப்ளாட்டினம் ப்ளஸ் போன்ற க்ளப்புகளில் பொதுவாய் உரையாடல் என்ற ஒன்று இருக்காது, நேரடியாய் உங்களிடம் வந்து ‘லெட்ஸ் கோ’ வரும். ஆனால் லஸ்ட் க்ளப்பில் பெண்கள் உங்களிடம் உட்கார்ந்து கதை பேசி கதை சொல்லி டான்ஸுக்கு அழைப்பதில் ஒரு உரையாடல் உருவாகும். நீங்கள் முதல் முறை இது போன்ற க்ளப்புக்கு போகும் பொழுது உங்களுக்கு ‘லெட்ஸ் கோ’ அணுகுமுறை பிடிக்கலாம். ஆனால் தொடர்ச்சியாய் இந்த வேலையைச் செய்யும் பொழுது உரையாடல் முக்கியத்துவம் பெரும். இதன் காரணமாய் லஸ்ட் போன்ற க்ளப்புகளில் தொடர்ச்சியாய் இதே வேலையாய் இருக்கும் ஆட்களைப் பார்க்க முடியும். பொதுவாய் இவர்களுக்கு பிடித்ததாய் உதிர்ப்பவர்கள் என்று ஒரு தொடர்பு வளையம் இருக்கும்.

அமெரிக்காவிற்கு வந்த ஆறாவது மாதத்தில் ஒரு வெள்ளிக்கிழமை அமச்சூர் நைட்டில் தான் நான் முதன் முதலாய் ஹாலன்டை சந்தித்தேன். இந்த வகை அமச்சூர் நைட்கள் பொதுவாய் ஏமாற்றமாய் முடியுமென்றாலும் ஹாலன்ட் நிகழ்ந்தது ஒரு ஆச்சர்யம் தான். அமெரிக்க வந்த இரண்டாவது வாரமே, அமெரிக்க இன்டக்‌ஷன் என்கிற பெயரில் நண்பர்கள் ஸ்ட்ரிப் க்ளப்பிற்கு அழைத்து வந்திருந்தார்கள். தமிழகத்தின் நடுத்தர வர்க்க குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரி வாலிபனின் அத்தனை கூச்சங்களும் எனக்கிருந்தது. நடுநிலை வரை இருபாலினரும் படிக்கும் பள்ளி தான் என்றாலும் அந்தப் பெண்களுடன் பேசிய வழக்கமில்லை, உயர்நிலை பள்ளி ஆண்களுக்கானது. பின்னர் கல்லூரியில் ஆங்கில் வழியில் இருபாலினருக்குமான பள்ளியில் படித்த மாணவர்களுக்கு இருந்த மனதிடமானது இல்லாததால் மூன்று வருட கல்லூரி வாழ்க்கையிலும் பெண்கள் இல்லாத வறட்சி. தட்டுத்தடுமாறி கல்லூரி முடித்து தாழ்வு மனப்பான்மை பொங்கி வழிய சேர்ந்த வட இந்திய அலுவலகத்திலும் பெண்களுடன் பழகுவதற்கான பேசுவதற்கான வாய்ப்பு அமையவில்லை. மனதை திடப்படுத்திக் கொண்டு இவர்களுடன் பேச தயாரான பொழுது அறிமுகமான ‘செக்ஸுவல் ஹாரஸ்மென்ட்’ வார்த்தையும் அதைப் பற்றிய உண்மை பொய்யான சில கதைகளும், ஓணானை வேலியுடனே போகவைத்தது. எந்தக் காரணத்துக்காகவும் வேலையை இழக்க முடியாதவனாய் சமூகம் நிர்பந்தப்படுத்தியிருந்தது. பெண்களும் செக்‌ஷுவல் ப்ளஷரும் அதில் ஒரு முக்கியப்பிரச்சனையே இல்லை. அமெரிக்க L1 விசா பாஸ்போர்ட்டில் குத்தப்பட்டு நார்த் கரோலினாவில் இறங்கிய முதல் வாரமே இந்த இன்டக்‌ஷன் செரிமனி தொடங்கியது. அதன் கடைசி பகுதி தான் ஸ்ட்ரிப் க்ளப். புதிதாய் வருபவர்களை அழைத்துச் செல்வதாய் ஒரு சாக்கு சொல்லி பழையவர்களும் செல்வது. இரண்டு வாரமும் இதற்கான தகவல்கள் கொஞ்சம் கொஞ்சம் சொல்லப்பட்டு வந்தது என்றாலும் முதல் முறை சென்று அமர்ந்ததும் அதுவரை ஹாலிவுட் படங்களில் மட்டுமே பார்த்துவந்த அழகிகள் பக்கத்து இருக்கையில் அல்ல, தொடையில் உட்கார்ந்த பொழுது வியர்த்தது இன்னமும் பிசுபிசுப்பாய் நினைவில் இருக்கிறது. கொஞ்சம் கஷ்டப்பட்டு யோசித்தால் முதல் முறை என் மடியில் உட்கார்ந்த பெண் பெயரைக் கூட சொல்லிவிட முடியும், அவள் பெயர் ராக்ஸி ஆறடி உயரம் வெள்ளை நிறம் பொன்னிற தோள் வரை நீண்ட தலைமுடி. முதல் முறை நண்பர்களுடன் சென்ற பொழுது உட்கார்ந்த அவளிடமே தொடர்ச்சியாய் அந்த ஸ்ட்ரிப் க்ளப் சென்ற பொழுதெல்லாம் இன்புற்றிருக்கிறேன், கற்புக்கரசனாய் அந்தக் க்ளப்பில் அவளுக்காய் காத்திருப்பவனாய் நீண்டிருக்கிறது பொழுதுகள், நான் நிச்சயம் அவளுடன் மட்டுமே போவேன் என்று தெரிந்த பின் மற்றவர்கள் கூடச் சென்றுவிட்டு இல்லாமல் போகும் வேளையில் என்னிடம் வருவாள். இரண்டு டான்ஸ் - டூ ஃபார் ஒன் - முறையில், உசுப்பேற்றி அந்த பத்து நிமிடங்களுக்குள் உச்சமடையாத பொழுதில் மூன்றாவது. அப்பொழுது தான் அமெரிக்கா வந்த காரணத்தால் அதுவே அதிகம் என்கிற மனநிலையுடன். ஒருமுறை க்ளயண்டிற்காக வேலை செய்த, எப்பொழுதும் புலம்பிக் கொண்டேயிருக்கும், பாதி வழுக்கை சிதம்பரத்திடம் டென்னிஸ் ஆடி களைத்த பொழுதில் என்னுடைய ஹாபி ஸ்ட்ரிப் க்ளப் செல்வது என்று உளறிவைக்க. நானும் வருவேன் என்று அடம்பிடித்து என்னுடன் வந்த 43 வயது இளைஞர் அடித்த லூட்டி ஆச்சர்யமானது. வாரம் திங்கள் முதல் வியாழன் வரை ப்ராஜக்டில் வேலை செய்வதற்காக வேறொரு சிட்டியிலிருந்து வரும் அவர் சிட்டிஸன் என்பது வேறு, பறந்து வர விமானம், தங்க ஹோட்டல், வந்து போக கார், சாப்பிட பர் டைய்ம் கிடைக்கும் மனிதருக்கு கல்யாணம் ஆகி 14 - 15 வயதில் பையனொருவன் உண்டு. ப்ராஜக்டில் இப்படி சிலரை க்ளெயன்டிடம் காசு அடிப்பதற்காக வைத்திருப்பார்கள்.

பொதுவாய் ஸ்ட்ரிப் க்ளப்பில் ஆடை அவிழ்ப்பவர்களிடம் ஹோட்டலுக்கு வர்றியா கேள்வி பெரும்பாலும் கேட்கப்படுவது உண்டு தான், ஆனால் நான் சிதம்பரத்தை அழைத்துக் கொண்டு ஸ்ட்ரிப் க்ளப் வந்த பொழுது அது அத்தனை எளிதாய் அவர்களிடம் கேட்க முடியும் என்று தெரியாது நான் கேட்டதுமில்லை.  சிதம்பரம் ஆடை அவிழ்ப்பவர்களிடம் மட்டுமல்ல மது சப்ளை செய்யும் பெண்களிடம் கேட்க ஆரம்பித்தார். அதுவும் உரையாடல் வழி நீண்டு அல்ல, பியரை வைத்து காசு கேட்கும் பொழுது உனக்கு எவ்வளவு என்கிற வகையில். பின்னர் ஸ்ட்ரிப் க்ளபுக்கு எங்களைப் போல் டான்ஸ் பார்க்க வந்த வெள்ளைக்கார பெண்களிடம் தொடங்கினார், நான் அடிவிழும் முன் உங்களுக்கு ஓவராய்டுச்சு என்று அழைத்து வந்தேன். அவருக்கு அங்கேயிருந்து பெண்களை அழைத்துச் செல்லும் விருப்பம் இல்லை. உலக மகா கஞ்சனான அவருக்கு என்ட்ரி பீஸ் கூட நான் தான் கொடுத்திருந்தேன். மனித மனங்கள் எத்தனை விகாரமானது என்பதற்கு அது ஒரு உதாரணம், ஆடை அவிழ்க்கும் பெண்கள் தவிர்த்து மற்ற பெண்கள் வரமாட்டார்கள் என்பது அவருக்குத் தெரிந்து தான் இருந்தது, சில ஆடை அவிழ்க்கும் பெண்களுமே கூட வரமாட்டார்கள், ஆனால் அந்தக் கேள்விக்காக அவருடன் சண்டைக்கு வரமாட்டார்கள் என்பதுவும் அவருக்குத் தெரிந்திருந்தது. இவர் காரணமாய் சில வாரங்கள் நான் ஸ்ட்ரிப் க்ளப் போகாமல் தவிர்த்தேன், என் முகம் அவர்களுக்கு மறக்கவேண்டும் என்று நினைத்து. ஆனால் காலம் கலைத்துப் போட்டு விளையாடும் விளையாட்டில் ஒன்றாய் நான் முதலில் சென்றிருந்த ப்ராஜக்டில் இருந்து விலகி மற்றொரு ஸ்டேட்டுக்கு மற்றொரு ப்ராஜக்டுக்கு ஏறக்குறைய சிதம்பரம் போல் ப்ளைட், ஹோட்டல், காரி, பர் டைய்ம் என்று தான் முதலில் சௌத் கரோலினாவிற்கு வந்திருந்தேன் அங்கே தான் அமைச்சூர் நைட்டில் ஹாலன்டை சந்தித்தேன். அந்தக் க்ளப்பில் அவளுக்கும் எனக்கும் ஒரே நாள்  முதல் நாள். என் கற்பை அப்பொழுது ஹாலன்ட் கணக்கிற்கு மாற்றியிருந்தேன்.

ராக்ஸியைப் போலில்லை ஹாலன்ட் என்று சொல்லத் தொடங்குவதில் பல சிக்கல் இருந்தது, அதே ஆறடி வெள்ளை நிறம் தோள் வரை நீளும் பொன்னிற கூந்தல் என்று கைதேர்ந்த தொடர் கொலைகாரன் போல் என் தேர்ச்சியில் ஆச்சர்யம் இல்லை. ஆனால் முதல் முறை லஸ்ட் கிளப்பில் ஹாலன்ட் நிகழ்ந்த்தது ஆச்சர்யம், அவள் அன்று வராமல் போயிருந்தாள் அவள் நான் ஆயிரம் பொய் சொல்லி மறுக்கும் எத்தனையோ பெண்களில் ஒருத்தியாய் அவளும் உதிர்ந்து போயிருப்பாள். அந்த க்ளப்பிற்கு முதல் நாளாய் இருந்தாலும் ஆடை உதிர்ப்பதில் அவளுக்கு எக்ஸ்பீரியன்ஸ் இருந்தது, ஆடை அவிழ்க்க பாடலுடன் ஒத்திசைந்து ஆட, அங்கிருந்த பொலில் மேலும் கீழுமாய் நகர்ந்து

- இது புனைவு
-- இன்னும் வரும்
--- அமெரிக்க தேவதைகள் சீரிஸில் முதல் கதை ஹாலன்டுடயது

Related Articles

0 comments:

Post a Comment

Popular Posts